posted 23rd July 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
மூன்று முடிச்சு தமிழ் சீரியலிலே, கொலுசை அணிவித்து விட்டு, தன் மனைவியை, நந்தினியை, சந்தோஷத்தில் மிதக்க விட்ட சூரியா. சண்டையையும், பிரிவினையும் இரு சகோதரிகளுக்கிடையே உண்டாக்கி விடலாம் என்று தனது நகரத்துப் புத்தியினை மாதவி காட்டினாலும், கிராமத்து உறவானது எவ்வளவு இறுக்கமானது, புனிதமானது என்று புரிய வைத்தார்கள் நந்தினியும், புனிதாவும். சுரேக்காவை விடுவித்து நந்தினியையும், புனிதாவையும் CCTV footageஜினை வைத்து நிரூபிப்பதுமல்லாமல், தாய் சுந்தரவள்ளி போல அவசரப் புத்திக்காறியான சுரேக்காவையே இதற்கு சாட்சியாக இருக்க வைத்து, பிரச்சனையினை நந்தினிக்கும், புனிதாவிற்கும் உருவாக்கத் துடிக்கின்றாள் மாதங்கி.
துரோகத்தினையே செய்யும் கௌஷியின் கொடூரக் குணத்தினை வைத்து புனிதாவின் உண்மையான காதலினைப் புரியாமல் இருப்பதற்கு கௌஷி கொடுக்கப் போகும் விலையானது றொம்ப றொம்ப அதிகம்.
சுந்தரவள்ளியின் விளங்காத்தன்மை, அவசரப்புத்தி, ஆணவம், மனிதரை மதிக்காத குணம், பணத்திமிர், வேலை செய்பவர்களை அடிமைகளாக நடத்தும் இவவிற்கு, மேலும் மெருகூற்ற வந்தவள்தான் மாதங்கி.
Moontru Mudichchu - மூன்று முடிச்சு - 17.07.2026
சுந்தரவள்ளியின் குடும்பத்தினையும், அவர்களது தொழிலையும் அடியோடி அழிப்பதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு வந்திறங்கியவளை கண்மூடித்தனமாக நம்பி, தான் பெற்ற ஒரேயொரு மகனான சூரியாவை எல்லார் முன்னாலும் கேவலப்படுத்தி, அவன் மனைவியைத் திண்டு தண்ணி குடிக்காவிட்டால் அவவிற்கு தூக்கமே வராதென்று கூறும் அளவிற்கு கேவலமான behaviourருடன் வாழுகின்றா சுந்தரவள்ளி.
தனது புருஷனான அருணாச்சலத்திற்கே எந்தவிதமான மரியாதையும் மற்றவர்கள் முன்னால் கூட கொடுக்காமல், சூரியாவையும், நந்தினியையும் கவனமாக இருங்கள் என்று முற்கூட்டிய எச்சரிக்கையினை அறிவிக்க வந்த intelligence police அதிகாரியின் முன்னால், கேவலமாக நடந்து கொண்டதினை எச்சரித்தான் சூரியா. தாயை கொஞ்சம் மரியாதை இல்லாமலும் கடிந்து கொண்டான்.
நந்தினிதான் தனது மகளைக் கடத்தி வைத்துள்ளாள் என்றும், ஹரித்தாவை நந்தினிதான் கொலை செய்தாள் என்று எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல், எப்பவும் பழி முடித்துக் கொண்டிருக்கும் சுந்தரவள்ளியின் நடவடிக்கைகளானது மிகவும் அருவருக்கத்தக்கதாக இருக்கின்றது.
இதற்கிடையில், motor cycle taxi என்றதில் தொடங்கிய புனிதா, கௌஷியை முன்னும் பின்னும் கூடத் தெரியாமல், அவன் விரித்த காதலில் விழுந்தாள். இதற்கான திரைக்கதையினை எழுதுபவனே றஞ்சித்தான். அவனின் தங்கை ஹரித்தாவை நந்தினிதான் கொலை செய்தாள் என்று வீணாண பழியினை சுந்தரவள்ளியும், மாதவியும் பழிமேல் பழி போட்ட வண்ணமாக இருப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
ஆனால், ஹரிதாவின் உடலம் மேலே அடையாளம் காணப்பட்ட உடல் ஸ்பிறேயானது கௌஷி மேலேயும், றஞ்சித் மேலேயும், மாதங்கி மேலேயும், பரமேஸ்வரியின் மேலேயும் மணக்கையிலே, எந்த உடல் ஸ்பிறேயானதும் பாவிக்காத நந்தினி என்னென்று குற்றவாளியாக்க முடியும் என்று சுந்தரவள்ளி நினைக்க முடியும்?
உளவுத்துறைப் பொலிஸ் அதிகாரி நந்தினியையும், சூரியாவையும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவித்ததுமல்லாமல், றஞ்சித் சிறையினுள் இருந்து கொண்டே வெளியால் உள்ள ஒரு சிலருடன் தொடர்பு வைத்து அவர்கள் மூலம் உங்கள் இருவரையும் குறி வைக்கின்றான் என்ற செய்தியையும் கொடுத்தார். இதனைக் கேட்டுக் கொண்டு மாதங்கியும் இருந்தாள். இவள் மூலமாக நேரடித் தொடர்புடைய றஞ்சித்திற்கு இந்த செய்தி மாதங்கி மூலமாகச் செல்வதற்கு வாய்ப்புகள் உண்டுதானே!
கௌஷியும், றஞ்சித்தும் எத்தனையோ குற்றங்களை அமெரிக்காவில் செய்து அங்குள்ள பொலிஸுக்குத் தண்ணி காட்டி விட்டுத் தாங்கள் இருப்பதாக பெருமை பாராட்டுவது ஒரு கெத்தாக இருக்கின்றது என்பது அவர்களின் மூடத்தனமென்றுதான் கூற முடியும். இங்கு உள்ள பொலிஸாரால் எங்களைக் கண்டு பிடிக்க முடியாது என்று இருக்கையிலேதான், றஞ்சித் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அதுவும் நந்தினியின் முயற்சியால்.
இப்போது பொலிஸின் உளவுத்துறை றஞ்சித்தின் நடவடிக்கைகளைப் பிடித்து விட்டார்கள்தானே! இனி, றஞ்சித்துக்கு யார் யாரெல்லாம் உதவுகின்றார்கள் என்றும், அவனது call historyயிலிருந்து கடைந்தெடுப்பார்கள். அத்துடன், அவனது வங்கியில் இருந்து யார் யாருக்கெல்லாம் றஞ்சித்தால் பணம் மாற்றப்படுள்ளது என்றும் பார்ப்பதற்கு இங்குள்ள பொலிஸால் கண்டு பிடிக்க முடியாதா என்ன? கெதியில் எல்லாவற்றையும் சேர்த்து றஞ்சித்தையும், அவனது கூட்டுக்களையும் அமத்துவார்கள், இங்குள்ள பொலிஸார்கள்.
இந்த வலை விரிப்பினிலே, மாதங்கி உட்பட, றஞ்சித்தும், கௌஷியும், பரமேஸ்வரி, அவளுடைய ஒட்டுண்ணி அனைவரும் மாட்டுவார்கள். இப்படி இவர்கள் அனைவரும் மாட்டுகையில், பரமேஸ்வரியுடன் கூட்டுச் சேர்ந்த ஜோதி எங்கே தனது பொன் வதனத்தினைக் கொண்டு போய் வைப்பா. தனது மகளைக் கொலை செய்தவர்கள் சுந்தரவள்ளியின் குடும்பம்தான் என்று கரைத்துக் கொட்டினாவே ஜோதி. இப்போது என்ன செய்வாவாம் என்று பார்க்கத்தானே போகின்றோம்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது Reel Review channel லினில் இந்த சீரியலின் overall analysisஇனைச் செய்கின்றேன். இது முற்றுமாக எனது கருத்து என்பதனால், உங்களுக்கு ஏதாவது கூற விரும்பினால் கூறுங்கள். அத்துடன், எமது channelலினைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன். இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் எமது channelலினை subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!