Mahanadhi - மகாநதி 17 - 20.02.2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 17ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிகள் வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;

  • கனவினில் மிதந்தாள் காவேரி. இவையெல்லாம் ஏன் தனக்கு வருகிறதென்று அவளது தாய் சாரதாவிடம் கேட்டும் விளக்க முடியாத நிலையினில் சாரதா.
  • நினைக்க முடியாத துரோகத்தினைச் செய்து விட்டு உலகத்தினை விட்டுச் சென்ற விஜேயின் பாட்டி. ஆனால், மிகவும் அன்பாக காவேரி இருந்த தாத்தாவும் காவேரிக்கு துரோகியானார்.
  • காவேரி இந்த உலகத்தினை விட்டுவிட்டுப் போய் விட்டாள் என்று அம்முவுடன் காலத்தினை ஓட்டும் விஜய்.
  • சேர்க்க வேண்டிய அம்முவைச் சேர்த்து வைத்தது தெய்வம்.
  • காவேரி அவளையும் அறியாமல் தனது மகளுடன் அன்யோன்யமாகும் வாய்ப்பு.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Mahanadhi - மகாநதி 17 - 20.02.2026

காவேரி இறந்து போனாள் என்று விபத்திற்கு உள்ளான விஜயிடம் சொல்லி விட்டதுமல்லாமல், வைத்தியசாலையால் discharge பண்ணி வந்த காவேரியையும், குடும்பத்தையும் வீட்டினை விட்டு அனுப்பிவிட்டார்கள், விஜயின் பாட்டிகள். இதில், தாத்தாவும் சேர்ந்து இப்படியான துரோகத்தினை காவேரிக்குச் செய்து விட்டார்கள். அத்துடன் காவேரிக்குப் பிறந்த குழந்தையையும் தங்களால்தான் நன்றாக வளர்க்க முடியமென்று பிடிவாதமாக பிடிங்கி எடுத்ததுமல்லாமல் தங்களது ஆணவத்தினை சாரதாவின் குடும்பத்திடம் காட்டினார்கள்.

காவேரிக்கோ விபத்தின் காரணமாக அவளுக்கு விபத்தின் முன்னான ஒரு நிகழ்ச்சியுமே ஞாபகத்தில் இல்லை. அதையும் ஒரு சாட்டாக வைத்தார்கள் விஜயின் குடும்பத்தவர்கள். ஏன் காவேரி கல்யாணம் பண்ணியது கூட அவளுக்கு ஞாபகத்தில் இல்லாமலே போய் விட்டதே.

ஆனால், மதுரைக்கு ஆசிரியைத் தொழிலுக்கு வந்த காவேரி்க்கோ அடிக்கடி விஜேயின் வீடானது கனவினில் தோன்றுகின்றது. ஆனால், அது தான் விஜேயுடன் தான் வாழ்ந்த வீடு என்று தெரியவில்லை. அத்துடன், அங்குள்ள குடும்பத்தில் கனக்கப் பேர் இருக்கின்றார்கள் என்றும் தோன்றுகின்றது. இதைவிட முக்கியமாக விஜேயையும் கனவினில் காட்டுகின்றது. அதாவது ஒரு உயர்ந்த மனிதனாக.

காவேரிக்கு கல்யாணத்தினைப் பற்றி சாரதா கேட்கும் போது, காவேரிக்கோ தான் கனவினில் வந்த அந்த உயர்ந்தவனைத் தேடித் தா அம்மா என்று காவேரி உண்மையாகச் சொன்னாளா? அல்லது ஊகத்தில் சொன்னாளோ தெரியாது.

விஜேயின் தாத்தாவின் குடும்பமும் காவேரி வீட்டாருக்கு ஒழித்து மதுரைக்கு வந்துள்ளார்கள். புது வீடு, புது ஊர் அவர்களுக்கு. அம்முவுக்கும், அதாவது குட்டிக் காவேரி்க்கும் புது இடம், புது பாடசாலை. எல்லாம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

காவேரியையும், விஜேயையும் சேர்த்தது கடவுளே. கடவுளின் திட்டத்தினைக் கலைப்பதற்கு மனிதனால் முடிந்திடுமா?

புதுவீட்டில் கால் வைத்த நேரம் வீடு எடுத்துக் கொடுத்தவர் காவேரிக்குச் சொன்னார் இனி நடப்பவை எல்லாம் நல்லாக நடக்கும் என்றார். இந்த சந்தோஷத்தில் காவேரி தனது முதல் நாளான அன்று தனது ஆசிரியை வேலையினைப் பொறுப்பெடுக்கின்றாள். அதேபோல அம்மு அதே பாடசாலைக்கு புது மாணவியாகச் சேர்க்கப்படுகின்றாள்.

இதில் என்ன புதுமை என்றால், காவேரி UKG A வகுப்பிற்கு பொறுப்பான ஆசிரியையாகவும், அதே வகுப்பினிலே அம்முவும் மாணவியாகச் சேர்க்கப்படுகின்றாள்.

முதல் நாள் என்பதினால், சிறிய பிள்ளைதானே அம்மு அழத வண்ணம் இருக்கையிலே காவேரி அந்த வகுப்பினைப் பாரம் எடுக்கின்றாள். அழுது கொண்டிருக்கும் அம்முவிற்கு ஆறுதல் சொல்ல அம்முவும் காவேரியைக் கட்டி அணைப்பதினால், காவேரிக்கு ஒரு உணர்வானது உடல் முழுக்கப் படர்கின்றது. அவளை அறியாத அந்த உணர்வு என்னதான் என்று சாரதாவிற்கு விபரிக்கையிலே, சாரதாவிற்குப் புரிகின்றது, இது காவேரியின் பிள்ளையாக இருக்குமோ என்றுதான். ஆனால், அவர்களோ எங்க இங்கே என்ற ஒரு குறுக்கான யோசனை சாரதாவின் மனதினில் உதித்தது.

இதனை சாரதா கங்காவுடன் பகிர்ந்து கொள்கையிலே, கங்காவோ காவேரிக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று கூறுகையில்தான், காவேரி தான் கண்ட கனவினில் வந்த அந்த உயர்ந்த மனிதனைத் தனக்குக் கட்டி வைக்கும்படி சாரதாவிடம் கூறியிருந்ததும் நினைவுக்கு வந்தது.

இதற்கிடையில், கடையினில் சாரதாவைக் கண்ட அன்பரசு. அன்பரசு நல்லதினைச் செய்ய மாட்டான். ஆனால், இப்போது தனது மனைவியின் பக்கமாக நிற்கின்றான். இதனால், சாரதா வந்த கடைக்காரனிடம் சாரதாவைப் பற்றி விசாரிக்கின்றான். கடைக்காரனும் சாரதாவிடம் கேட்டதை அப்படியே ஒப்புவிக்கின்றான். அதனால் அன்பு சாரதாவைப் பின் தொடர்ந்துதான் பார்த்தான், தெய்வம் அன்புவை திசை மாற்றி விட்டது.

ஆனால், ஒரு நாள், அன்புவினதும், றாதாவினதும் கண்ணில் பட்டாள் காவேரி. இது மிகவும் பிரச்சனையாக இருக்குமென்றால் அப்படி ஒன்றும் இருப்தற்கு வாய்ப்புகள் கம்மிதான். ஏனென்றால், காவேரிக்குத்தான் இவர்கள் யார் என்றுதான் ஞாபகமே இல்லையே! ஆனால், அன்புவும், றாதாவும் கதைத்துவிட்டுப் போன பின்பு காவேரியின் மூளையில் ஒதுங்கிக் கிடந்த அந்த நினைவுகள் தட்டி எழுப்பப்படலாம்.

அன்பு, சாரதாவைக் கண்டதினை வீட்டினிலே மாமனாருக்குச் சொல்லும்போது, அப்போது காவேரியும் இங்குதான் இருக்கின்றாளா என்று சந்தோஷப்படாமல், காவேரி இங்கிருந்தால் பசுபதியால் தங்களுக்குத்தான் பிரச்சினை என்றுதான் தாத்தா கூறும் போது, தாத்தாவின் மேல் காவேரி வைத்த அன்பினை தாத்தா கொச்சப்படுத்துவதாகத் தெரிகின்றது. இதுதான் இப்போதைய உலகமென்றும் புரிகின்றது.

காவேரி கர்ப்பிணியாக இருக்கும் போது கல்யாணிப் பாட்டி காவேரியுடன் அவ்வளவாக ஒட்டாக இருந்ததில்லை. அதையும் காவேரி பாட்டியிடம் உங்களுக்கு கொள்ளுப் பேரன்தான் வேண்டும் நான் தேவையில்லையா என்று கேட்டதற்கு, கல்யாணிப்பாட்டி ஓமடி, நீ தேவையி்ல்லைதான் என்று சொன்னதினை எல்லாரும் பகிடியான கதையென்று கணக்கெடுத்ததனால் அதனை விட்டுவிட்டனர். ஆனால், அதுதான் உண்மையிலும் உண்மை.

காவேரியைத் துரத்துவதிலிருந்து பிள்ளையினை வாங்கி எடுக்குமட்டும் விஜேயின் வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றாக நின்று கொண்டு காவேரியையும், குடும்பத்தினையும் கேட்காத கேள்விகளெல்லாம் கேட்டு, சொல்லாத சொற்களை எல்லாம் வீசி எறிந்து இறுதியாக சாரதா குடும்பத்தினையே வீட்டினை விட்டுத் துரத்தி விட்டார்கள்.

வைத்தியசாலைக்குப் போன கல்யாணிப் பாட்டி, தாத்தா, றாதா அனைவரும் காவேரியைத் தேடிய விஜயிடம் காவேரி இறந்து விட்டாள் என்று அப்பட்டமான பொய்யினைச் சொல்லி வீஜேயின் சின்ன அழகான குடும்பத்தினை பிரித்து சுக்கு நூறாக்கி விட்டார்களே!

ஆனால், இப்போது காவேரி தனது பிள்ளையுடன் காலை முழுவதுமாக நேரத்தினைச் செலவழிக்கின்றாள், பாடசாலையிலே. இதனை யாராலே தடுக்க முடியும்? இது இறைவன் போட்ட பாதை. யாராலே இந்தப் பாதையினை இழுத்து மூடமுடியும்?

பிள்ளையின் பரிசம் காவேரியின் உணர்வுகளைத் தூண்டும். அவள் தாயாக இருந்ததனை நினைவுறுத்தும். எல்லா நனவுகளும், நினைவுகளும் அவள் கனவினவினில் கடவுளால் காட்டப்படும். அதை யாரால்தான் தடுக்க முடியும்? வீடு எடுத்துக் கொடுத்தவரின் வார்த்தைகள் பலி்க்கும் என்பதனை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)