posted 3rd November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- கல்யாணிப் பாட்டியும், றாதா சித்தியும், தாத்தாவின் அனுசரணையுடன் 5ஆவது மாத பூ முடிக்கும் நிகழ்ச்சி ஒரே இரவில் ஆயத்தப்படுத்தப்பட்டாயிற்று.
- எதுவுமே தெரியாத நிலையில் வியப்பினில் ஆழ்ந்த விஜேயும், காவேரியும்.
- தடல்புடலாக நடைபெற்ற நிகழ்ச்சி. அனைவரும் சந்தோஷத்தில் மிதக்கையிலே, கங்கா, ஜமூனா, அன்பரசு ஆகியோர் பொறாமையில் வெதும்பிய படியில்.
- சந்தானம் கட்டிய வீட்டிற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று கங்காவும், ஜமூனாவும்.
- அப்பாதான் இறந்து விட்டார்தானே என்று கங்கா சொல்வது நாடகங்களில் இருந்தாலும், நிஜ வாழ்க்கையிலும் இது நடக்கின்றதுதானே!
- தாத்தாவின் ஒரு பரிந்துரையானது, காவேரியே கொடைக்கானல் வீட்டினை வாங்கினால் என்ன என்பதுதான்.
- சந்தோஷத்தில் விஜேய், அதிர்ச்சியில் காவேரி.
- குமரன் வெளிநாடு போனதற்குக் காரணம் பணம் தேவை என்பது ஒருபுறம், ஆனால், கங்காவை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டும் என்பதுதான் நிஜம்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 31.10.2025
கங்காவும், ஜமூனாவும் அடம்பிடிக்கின்றார்கள் தகப்பன் சந்தானம் கட்டிய வீட்டினை விற்க வேண்டும் என்று. காரணமாக கங்கா சொல்வது, குமரன் பணம் இல்லாததினால்தான் உழைப்பதற்காக வெளிநாடு போய் கஷ்டப்படுகின்றார் என்று. இதுவும் ஒரு காரணம்தான் குமரன் வெளிநாடு போனதற்கு. ஆனால், முக்கிய காரணம், கங்காவை விட்டு கொஞ்சக் காலம் குமரன் தள்ளி இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. அதாவது, கங்காவின் குத்தலான கதைகளும், தன்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதுதான்.
ஆனால், ஜமூனாவின் காரணம், நெவீனின் தாய், அதாவது, ஜமூனாவின் மாமியார்தான் என்பதுதான். ஆனால், உண்மையாக இதற்குக் காரணம், ஜமூனாவின் குறுக்குப் புத்திதான். அதாவது, நெவீனை வெருட்டியது மல்லாமல், தற்கொலை முயற்சியினை வைத்து நெவீனை வெருட்டி கல்யாணம் பண்ணியதினால்தான், நெவீனின் அம்மாவிற்கு ஜமூனாவில் கோபம் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், நெவீனும், ஜமூனாவும் ஒன்றாக சந்தோஷமாக வாழவில்லையாதலால், இருவரையும் பிரித்து விடுவோம், என்பதும்தான். அதனால், தன் மகன் நெவீன் சந்தோஷமாக வாழுவான் என்ற நோக்கமும்தான் நெவீனின் அம்மாவின் எண்ணமாக இருப்பதாகத் தெரிகின்றது.
நெவீனுக்கு விவாகரத்து எடுத்துக் கொடுப்பதற்கு தாய் நெவீனிடம் கேட்டாலும், நெவீன் கூறிம் பதில், ஜமூனா ஒரு விளையாட்டுப் பிள்ளை போன்று செய்து விட்டாள் என்பது அவன் சொன்ன காரணமாக இருந்தது. ஆனால் இது தப்பாக இருக்கின்றதே. நெவீன் விவாகரத்திற்கு ஒத்துக் கொண்டால், ஜமூனா, காவேரியைப் பற்றி தப்பு தப்பாகச் சொல்லுவதற்கு 100% chance இருக்கின்றது என்பதுதான் காரணமாகத் தோன்றுகின்றது.
காவேரி்க்கு பூ முடிக்கும் நிகழ்ச்சியானது பெண் வீட்டாரால், அதாவது, சாரதாவால், கற்பிணிப் பெண்களுக்கு 5ஆவது மாதம் மாப்பிள்ளை வீட்டிற்கு 5 வகை உணவுகளைச் செய்து கொண்டு வந்து நடத்துவதாகும். இந்த நிகழ்விற்கு முக்கிய காரமாக இருந்து செயல்படுவது கல்யாணிப் பாட்டிதான். ஆனால், கங்காவிற்கோ சந்தேகம்தான். என்னவென்றால், காவேரிக்கும், விஜேக்கும் தெரியாமலா இவ்வளவு ஆயத்தங்களெல்லாம் செய்யப்பட்டது என்பதாகும்.
காவேரி உண்மையினைச் சொன்னாலும், கங்காவும், ஜமுனாவும் நம்புவதாக இல்லை. ஏனென்றால், இவ்வளவு பிரமாண்டமாக பூ முடிக்கும் நிகழ்வு நடைபெறுகின்ற படியால்தான். அதாவது, இதென்ன பூ முடிக்கும் நிகழ்வு மாதிரியா இருக்கின்றது, வளை காப்பு நிகழ்வு மாதிரியல்லவா இருக்கின்றது என்பதுதான்.
கங்கா இப்போது சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம், தனக்கு ஏற்கனவே நல்லபடியாக 5ஆவது மாத கொண்டாட்டம் நடைபெற்றாயிற்று என்பாதனால்தான். காரணம் ஒன்று கங்கா சொன்னா பாருங்க, தனக்கும், காவேரிக்கும் இன்று ஒரே நேரத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றால், தன்னை இங்கு வந்திருக்கும் இவ்வளவு காவேரியின் பக்கமுள்ள சொந்தங்களுக்கு மத்தியில் தன்னை ஒருவரும் கணக்கெடுத்திருக்க மாட்டார்கள் என்பதுதான். அத்துடன், இவ்வளவு சொந்தங்கள் காவேரிக்கு இருக்கின்தே என்ற ஏக்கம் கங்காவிற்கு.
தகப்பன் சந்தானம் தனது வாழ்க்கையினை தனது நான்கு பிள்ளைகளுக்காக, அதுவும், பெண்பிள்ளைகளாகப் பிறந்திற்றார்களே என்று மனைவியையும், குடும்பத்தினையும் பிரிந்து இரத்தம் சிந்தி, பிள்ளைகள் பிற்காலத்திலாவது நல்லாக இருக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்த தகப்பன் கட்டின வீட்டையே விற்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் கங்கா, ஜமூனா போன்ற பிள்ளைகள் இப்பவும் இருக்கின்றார்களே!
பெற்றார்கள் உயிருடன் இருக்கையிலே அவர்களிடம் இருந்து சொத்துகளை எல்லாம் தமதாக்கிக் கொள்ளுவதற்குப் போன பிள்ளைகள் இருப்பதுவும், அவர்கள் இறந்ததும் அவர்களின் மரணச் சடங்குகளுக்குகளில் பங்கு கொள்ளாமல் இருக்கும் எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறும் பலவிதமான காரணங்கள் வேறு.
காவேரிக்கு மட்டும்தான் தகப்பன் தங்களுக்காகக் கட்டின வீட்டிலே மிகவும் பற்று உண்டு. அவளின் நல்ல மனத்தினையும், தகப்பனின் மேலுள்ள பாசத்தினையும், விஜேயும், தாத்தாவும் மிகவும் மதிப்பதால், தாத்தாவின் ஒரு பரிந்துரையானது அந்த கொடைக்கானல் வீட்டினை காவேரியே வாங்கினால் என்ன என்பதுதான்.
இது ஒரு நல்ல அபிப்பராயம்தான். ஆனால், இதற்கு கல்யாணிப் பாட்டி என்ன சொல்லுவா என்பதுதான் இப்போது இருக்கும் கேள்வியாக இங்கு அமைகின்றது.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!