posted 1st October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- கங்காவின் வறட்டலினால் வாடிப் போன குமரன். ஒன்றுக்கும் உதவாதவன் என்ற பெயர் குமரனுக்கு – திடம் கொண்டான் – கங்கா விரும்பியதை செய்து முடிக்க விளைந்தான்.
- குமரனால் இந்த limitக்கு மேலே போக முடியாது என்று தெரிந்தும் குமரனைத் துவைப்பது என்னதான் நியாயம்?
- விஜேயின் புத்திமதி உடம்பைக் கவனிக்க வேண்டுமென்று. ஆனால், இந்த 4 நாட்கள் முடிந்ததும் குமரனுக்கு ஏதாவது சுகவீனம் வந்தால், என்னதான் செய்ய முடியும்? இதன் பின்பு கங்கா உணருவதற்கு அவள் அறிவு உயிர்க்குமா?
- குமரனின் நிலையினை அறிந்து கொண்ட, உணர்ந்து உடனிருந்த நெவீனும், விஜேயும்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 30.09.2025
கஷ்டத்தில் பிறந்து வளர்ந்த குமரன். அவன் எடுக்கும் முயற்சிகளை நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வளவு அதிகம். ஆனால், குடும்பப் பொறுப்புகளினால், அவன் நிலை துர்ப்பாக்கியமாக கீழ் நிலையில்தான் உள்ளது.
காவேரியின் நல்மனமோ அல்லது பிறப்பின் பலனோ தெரியவில்லை, கடவுள் அவளது கைகளினைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகின்றாரோ தெரியவில்லை. அவள் உயர்ந்து கொண்டே போகின்றாள். உயர்ந்த இடமே அவளது வாழ்க்கையாகிற்று.
உனது ஆசை என்ன என்று கங்காவைக் குமரன் கேட்டதுதான் அவள் சொன்னது ஒட்டியானமும், பட்டுப் புடவையும். வியப்பில் அத்துடன் உயிர் இருக்கையிலே விறைத்துப் போனான், குமரன். நமக்குத்தான் வெள்ளி மெட்டி வாங்குவதற்குக் கூட வழியில்லையே! என்று குமரனைக் குத்தாமல் குத்தானாள் கங்கா.
அக்கா மாறிற்றாள் என்று கவலையுடன் சொன்ன காவேரிக்குப் பாட்டி சொன்னது, எப்பதான் அவள் நல்லவளாக இருந்தாள், மாறுவதற்கு என்று சொன்னது கங்காவுக்கும் காவேரிக்கும் இடையிலான மிகப் பாதாள வித்தியாசம் இருக்கின்றது என்பதனைத் தெட்டத் தெளிவாக்குகின்றது.
குமரனால் என்னதான் இயலும் என்ற கங்காவின் வார்த்தைகளின் தாக்கம், விஜேயினை கட்டியணைத்த வண்ணம் குமரன் சொரிந்த கண்ணீரிலிருந்து தெரிகின்றது.
குமரன் முடிவெடுத்து விட்டான், எப்படியாவது இந்த ஓடரினை முடித்து கங்காவின் ஆசையினை நிறைவேற்றுவதென்று. இது குமரனைப் பொறுத்தமட்டில் சின்ன விஷயம் அல்ல. அவனது தலைக்கு மேலால் போகும் விஷயமாகும். இவ்வாறு மன உளைச்சலுடனும், வேதனையுடனும் இருக்கும் குமரனுக்கு ஏதாவது வில்லங்கங்கள் வந்து விடுமா? அதாவது, சுகவீனம் வந்துவிடுமா? ஏனென்றால், விஜேய் சொல்லுவதும் அதுதானே!
இத்தனைக்கும் வளைகாப்பிற்குரிய ஒழுங்குகளையும் பார்க்க வேண்டிய வேலைகளும் உண்டு குமரனுக்கு. கங்காவினால் குமரனோ ஓய்வின்றி இரவு, பகலாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். அதிலும் குமரனிடம் ஆயிரம் கேள்விகள் வேறு. ஆற அமரத்தான் குமரன் கங்காவிற்குச் சொல்லியும், குமரன் முன்னையது போன்று விஜயுடன் ஆள் கடத்தல் வேலை போன்றில் ஈடுபடப் போகி்ன்றானோ என்ற பயம் கங்காவிற்கு.
காவேரி, கங்காவை ஆறுதல் படுத்திப் பார்த்தா. ஆனால், கங்காவோ ஆறுவதுபோல இல்லை. குமரன் கதை, போக்கு எல்லாம் தப்பாக இருக்கின்றதே என்ற ஊகம் கங்காவுக்கு. ஏனென்றால், வீட்டில் விஜேயும் இல்லை. அங்கு நெவீனும் இல்லை. போட்டுக் கொடுப்தற்குத்தானே ஜமூனா இருக்கின்றாளே!
குமரனுக்கு உறுதுணையாக விஜயும், நெவீனும் இருப்பது குமரனுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கின்றது. பெரிய order ஒன்றினை எடுத்து கங்காவின் வளைகாப்பினை ஆடம்பரமாக, அதாவது, கங்காவின் ஆசையினை நிறைவேற்றி விட வேண்டும் என்று திடசங்கர்ப்பம் பூண்ட குமரனுக்கு அவனது levelக்கு றொம்ப அதிகம். இதில் வெல்லுவானா குமரன்? வெல்லுவான் என்பது எனது வேணவா.
ஆனால், கங்காவிற்கு ஆச்சரியம் வருகையிலே, அதாவது, பட்டுப் புடவையினையும், ஒட்டியாணத்தினையும் குமரன் வளைகாப்பிற்குப் பரிசாகக் கொடுக்கும் போது, குமரனை கங்கா நம்ப மாட்டாள். ஏதோ வில்லங்கம் செய்துதான் மாமா கொண்டு வந்திருக்கின்றார் என்றுதான் சொல்லுவாள்.
தனது ஆசையினை புருஷனிடம் கங்கா சொன்னது தப்பில்லையே. ஆனால், சொன்ன விதம் அதாவது, குத்திச் சொன்னாள் பாருங்க அங்கதான் வலிக்கின்றது. அதற்காக, குமரனை தலையினைப் போய் அடைமானம் வை என்று அவள் சொல்லவில்லையே. இது அவளது ஆதங்கம். யாரிடம் அவள் கொட்டுவாள். புருஷனிடம்தானே! வாழ்க்கையினை வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணம் அவளுக்கு. இதிலே தப்பொன்றும் இல்லையே! அதுவும் தன் புருஷனிடம்தானே சொன்னாள். சொன்ன விதம் தப்பாக இருக்கலாம்.
எண்ணமானது உயர்வாக இருக்க வேண்டும். அந்த எண்ணங்களை எப்பவும் நினைக்க வேண்டும். மனதினுள் உளமாற மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். எமக்குள் இருக்கும் உள் மனசானது மிகவும் சக்தி வாய்ந்தது. எமது நினைவுகளை அத்திவாரத்திலிருந்து கட்டி எழுப்பி முழுமையாகக் கையளிக்கும் சக்தி வாய்ந்தது.
விஜயினதும், நெவீனதும் ஆசை எப்படியாவது குமரன் வென்றிட வேண்டும் என்றுதான். இப்படித்தான் விஜயுக்கும், இவர்களுக்கிடையில், காவேரி காரணமாக, விஜய், குளறுபடிகள் வருவதற்கு முன்பும், பின்பும், குமரனின் முன்னேற்றத்திற்கு விஜய் செய்த எல்லா நன்மைகளினையும் மறக்க முடியாதே. இதனையும் மறந்துதானா விஜேயினைக் குத்திக் காட்டுகின்றாள் கங்கா. அந்த வீரன்தானே கொஞ்ச நாட்களின் முன்பு சிறைக்குள்ளே இருந்தார் என்று சொன்னாளே கங்கா, அதுவும் ஒரு மனிஷன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலே!
குளவியாக கங்கா இருக்கட்டும், மனிஷனாகக் குமரன் வாழட்டும்.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!