posted 1st October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- அளவுக்கு மீறிய ஆசை கொண்ட கங்காவின் ஒவ்வோரு சொல்லினால் வறுக்கப்படும் குமரன்
- அறிவில் மந்தமானவன் குமரன், ஆனால், அன்பினிலும், வஞ்சகமில்லாத ஒரு நல்ல ஆத்துமம்.
- விஜேயின் நினைவுகளோ பெரிய அளவில் வளைகாப்பினைச் செய்ய வேண்டும் என்ற வேணவா. ஆனால், காவேரி, கங்காவை நினைத்து அடங்கிப் போனாளோ என்னவோ, மிகவும் சாதாரணமாகச் செய்யலாம் என்று தன் விருப்பமாக விஜயிடம் சொன்ன காவேரி.
- எப்பவோ வாங்கிய முருகனின் பவுண் சங்கிலியினை இப்போது காவேரிக்கு அணிந்துவிட்ட விஜேய். ஆனால், அதனைக் கூட கங்காவால் அனுசரிக்க முடியவில்லை. கங்கா கவலைப் பட்டதனைப் பார்த்து வெதும்பினாள் காவேரி.
- கூட்டுக் குடும்பத்தில் சந்தோஷமும் இருக்கும், அனைவரும் அனுசரிச்சுப் போனால், இல்லாவிடில், அது நரகமாகும்.
- குமரனின் வேதனையினை ஆற்றிக் கொண்டிருக்கும் விஜய்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 30.09.2025
கங்காவிற்கு 5 ஆவது மாதத்தில் வளைகாப்பு ஒழுங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காவேரி, 7ஆம் மாதத்தில் ஒரு கிழமை முன்னும் பின்னும் வைத்துக் கொள்ளலாம் என்றால் அதற்குச் சம்மதிக்காத கங்கா. குமரனின் இயலாமையினைச் சுட்டிக் காட்டி வார்த்தைகளினால் கொன்று கொண்டிருக்கும் கங்கா.
வசதியாக வாழ வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசையி்ல்லை. ஆனால், அப்படியான வாழ்க்கைக்காத்தானே கங்கா அவ்வளவு காலமும் தவம் இருந்தா. மாப்பிள்ளை அமையவில்லை. எனவே, முறை மாப்பிள்ளைதான் கணவனாக அமைய வேண்டுமென்றது விதி.
கல்யாணம் கூட ஏனோ தானோ என்று நடந்ததாக விபரித்தாள் கங்கா. அந்த நிகழ்வு நெஞ்சினை நெகிழ வைத்திருக்கும்தான். ஆனால், வாழ்க்கை என்பது ஒருவரை வாட்டி எடுக்கும், மற்றவரை ஆராத்தி எடுக்கும். நினைத்தது நடக்குமென்றால் அது கனவினில்தான் அமையும், நனவினில் அல்லவே! அப்படி நடக்குமென்றால் அது அவரவருக்குக் கிடைத்த வரம்.
உங்களால ஒரு வெள்ளி மெட்டி கூட வாங்க முடியாத நிலையில்தானே நாங்கள் இருக்கின்றோம் என்று சொன்ன வார்த்தைகள் குமரனை நொறுக்கியது. வாங்குவோம் கங்கா நீ ஆசைப்பட்டபடி என்று அவவின் ஆசையினை, அதாவது, ஒட்டியாணமும், பட்டுப் புடவையும், என்பதனை ஒருக்கால் சொல்லிப் பார்த்தான், கங்காவை நினைத்துப் பார்த்தான். அதற்காக கங்கா இதுதான் வேண்டும் இல்லாவிட்டால் வளைகாப்பு வேண்டாம் என்று குமரனை கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்தவில்லை.
கங்காவுக்கும் தெரியும் தங்களால் அந்த அளவிற்கு நல்ல புடவை கட்ட வேண்டும் என்று ஆசை இருந்தால், அத்துடன்தான் வைக்க முடியுமே தவிர, மேலே ஒன்றும் வராது. எட்டி நின்று கடையினில் தொங்குவதனை இரசிக்கலாமே தவிர, வேறொன்றுக்கும் லாயக்கில்லை என்பதுதான் உண்மை.
சாரதாவின் கூட்டுக் குடும்பமானது, சந்தானத்தின் ஆசை. ஆனால், இப்போது அதுதான் வசதியும் கூட. ஆனால், ஜமூனா, நெவீனின் வீட்டில் வசதியாக இருக்கின்றாள். ஆனால், நெவீன் கங்காவுக்கு ஏதாவது, பொருளால் குமரனுக்கு உதவி செய்தது தெரி்ந்தால் என்ன நடக்குமோ தெரியாது.
ஆனால், விஜேயால் எப்படி காவேரியின் வளைகாப்பினை அவவின் விருப்பத்தின்படி செய்யலாம் என்றால், காவேரி கங்காவையும் நினைக்கின்றாள். இதனால், தனது வளைகாப்பினை மிகவும் simpleஆகச் செய்திடலாம் என்று விஜேயிடம் சொன்னதினை உண்மையாக நம்பினான். ஆனால், குமரனின் அழுகையினால் அதிர்ந்து போன விஜேய் கங்காவின் வளைகாப்பினை மிகவும் உணர்வுபூர்வமாகச் செய்யத் திட்டமிட்டான். ஆனால், இறுதியாக, காவேரியின் வளைகாப்பானது மிகவும் simpleஆக நடைபெற்றதனையிட்டு அதிர்ந்து போனாள் கங்கா.
ஏனென்று ஒருவருக்கும் விளங்கவில்லை. இது காவேரி, கங்காவை, தனது அக்காவை மகிமைப் படுத்தும் நிகழ்வாகச் செய்கின்றாள். இது ஒருவகைத் தியாகம்.
இவ்வாறு வாழ்க்கையிலே நடக்கும் என்பது மிகவும் அரிதானதாகத்தான் இருக்கும்.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!