posted 2nd November 2025
இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 29ஆம், 30ஆம் திகதி சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- 5ஆவது மாத பூ முடிக்கும் நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியானது பெண் வீட்டார் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வந்து நடத்தும் நிகழ்ச்சியாகும்.
- அறையினுள் சென்ற காவேரி தனது வாழ்க்கையினை இரை மீட்டாள். பலவிதமான, கசப்பான நிரந்தரமற்ற வாழ்க்கையின் நினைவுகள் அவளை வாட்டின. ஆனால், அவளின் சந்தோஷமான சாட்சியான நினைவுகள் மகிழ்ச்சியில் மிதக்க வைத்தன.
- இவை அனைத்திற்கும் சாட்சியாக இருந்தது நான்கு சுவர்களே! இத்தனைக்கும் அந்த இரவின் ஞாபகார்த்தமாக இன்று 5ஆவது மாதத்தினைக் கொண்டாடும் அந்த சிசுவின் உதயம்.
- உறவுகளின் காதில் எட்டிய கதையினை பொய் என்று நிரூபிப்பதற்காக உடனே செய்யப்படும் நிகழ்வாகவும் இதனைக் கொள்ளலாம்.
- கல்யாணிப் பாட்டிக்கும் புத்துயிர் வந்தது. சாரதாவுக்கும் இளமை மீண்டது. காவேரியின் பாட்டி என்றால் என்ன சும்மாவ இருந்தா. அவவும் 3 மணிக்கெல்லாம் எழுந்து சாரதாவுக்கு ஒரு கை கொடுத்தா. எல்லாம் இனிதே நிறைவேற்றப்பட்டன.
- கங்காவின் குதர்க்கமான கேள்விகளுக்கு ஒரு தாயாக சாரதாவின் பதில்கள் எவ்வளவோ பதுமையாகவும், நிதானமாகவும் இருந்தன.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 29 - 30.10.2025
தாயும், பாட்டியும், இரண்டு பெண் சகோதரங்களும், ஒன்று மூத்தது, அடுத்தது இளையது, ஒன்றுகூடி சீராக மேல் வீட்டிலிருந்து காவேரியைக் கூட்டி வந்தது எவ்வளவு அழகாக இருந்தது. இதற்குக் காவேரி கொடுத்து வைத்தவ என்றே கூறலாம். ஆனால், எத்தனை பேருக்கு இவ்வாறான நிகழ்வுகள் உறவுகள் இருந்தும் நடைபெறாமல் இருந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்வினைப் பார்த்ததும் அவர்களின் இதயம் நின்றும் துடிக்க மறுத்திருக்கும். இவற்றினை மறவுங்கள். நல்ல நினைவுகளை மீட்டுக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் பிரகாசம் அப்போ தெரியும்.
பலவிதமான இன்னல்களை எல்லாம் தாண்டி, உருக்குலைந்து இப்போ ஒருவாறாக எழுந்து நிற்கும் காவேரியும், விஜேயும், அவர்களின் அறையினுள் இருந்து மீட்ட நினைவுகள், கசப்பான இரவுகள், மறக்க முடியாத கனவுகள், ஏங்கியிருந்த வாழ்க்கையின் அத்தியாயங்கள், காலாவதியான agreement, வாழ்ந்ததை விட்டு வியாபித்த ஆகாயத்தினைப் பார்த்து வெறுமனே தெரிந்த உலகத்தினுள் போன காலங்கள், ஏற்பட்ட காயங்கள், கசப்புக்கள், இப்போ இருக்கும் ஆறாத வடுக்கள், காற்றினில் கலந்த வாயினால் உதிர்த்த வார்த்தைகள் இப்படி பலவிதமான எண்ணங்கள் உதயமாகி மறைந்தன.
உறவுகளின் விடுப்பான கதைகளை மூடி மறைப்பதற்காக காவேரிக்கு இந்த 5ஆவது மாதம் நிகழ வேண்டிய பூ முடிக்கும் நிகழ்வானது மறுநாளே கொண்டாட வேண்டியதாயிற்று. இவ்வளவுக்கு விழுந்து விழுந்து செய்யும் சாரதாவைக் கடிந்து கொண்டா கங்கா. ஆனால், விழாவிற்கு வந்த ஜமூனாவோ மிகவும் energetic moodடிலும், சந்தோஷமாகவும் இருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இது ஏன் என்று நினைக்கத் தோன்றுகின்றது?
நெவீன் ஜமூனாவுக்கு சொன்ன வார்த்தைகள்தான் இவ்வளவு மாற்றத்திற்கான காரணம். அதாவது, ஒருதரையும் பற்றி நீ யோசிக்க வேண்டாம் என்றும், உனது படிப்பினில் மட்டும் உனது கவனம் இருக்க வேண்டும் என்றும் கூறிய அந்த வார்த்தைகள்தான்.
இது ஒரு சின்ன விஷயம் அனைவருக்கும். ஆனால், அது ஜமூனாவைப் பொறுத்த மட்டில் மிகவும் பெரிய விஷயம் என்றே சொல்லலாம். நல்லதாக இரண்டு வார்த்தைகள் நெவீனிடம் இருந்து வராதா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த ஜமூனாவுக்கு இந்த வார்த்தைகளானது எவ்வளவு மாற்றத்தினைக் கொண்டு வந்துள்ளது.
இதனால்தான், ஜமூனா, காவேரியின் வீ்ட்டிற்கு வந்து அங்கு நடக்கவுள்ள நிகழ்வுகளை பார்த்து தனக்கு ஒருநாள் இது வரும் என்று கனவுலகத்தில் மிதக்கையிலே கங்கா அவளைக் குளப்பி விட்டாள். பின்பு காவேரியின் அறையினுள் போனவள் காவேரியிடம் தனக்கும் make up போட இயலுமா? என்றதும் தன்னையும் ஒரு படம் பிடிக்கும் படியாகவும், மூன்று சகோதரிகளும் நின்று selfie ஒன்று எடுத்துக்கலாமா என்ற எடுத்துக் கொண்டதும் அவளில் தெரிந்த மாற்றங்கள். ஜமூனாவோ, கங்கா ஏன் முகத்தினை ஒரு பக்கம் திருப்பி வைத்திருக்கின்றா என்று கூட ஒரு அவதானிப்போ, கேள்வியோ இல்லை.
இனி, ஜமூனா படிப்பாள். தகப்பன் சந்தானம் நினைத்ததனை முடிப்பாள் என்று ஒரு அபிப்பராயம் இப்போது வந்து விட்டது. ஆனால், கங்கா எரிந்து கொண்டிருந்தால், அவள் தனது வாழ்க்கையினை எரித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
சாரதாவும், பாட்டியும் 5 விதமான உணவு வகைகள் தயாரித்துக் கொண்டு வந்தார்கள். தனது கையாலேயே மாலையினை உருவாக்கி சாரதா கொணர்ந்தா. காவேரியின் வீட்டார்கள் வந்திறங்குகையிலே விஜேயின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. இப்படியான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் வந்திருக்கமே! சந்தோஷம் பொங்கி இருக்குமே! மீட்டுப் பாருங்கள், அது மிகவும் சந்தோஷமான இன்பம் பொங்கும் நினைவுகளைத் தரும்.
ஆனால் என்ன, அன்பரசுவுக்குத்தான் முகமோ விடிவதாக இல்லை. றாதா ஒரு வகையாக தன்னை மாற்றிக் கொண்டா. ஆனால், அன்பரசால்தான் மாற முடியவில்லை. ஏனென்றால், அவனின் மனதில் சொத்துக் கணக்கு இருப்பதால்தான். அதுவும் தனது மகன் வாழாமல் இருக்கின்றான், ஆனால், விஜேய் வாழுகின்றான் என்பதுதான்.
சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் அன்பரசு மாற வேண்டும். இல்லாவிடில், இல்லை மாறத்தான் வேண்டும்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!