posted 30th October 2025
இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 27ஆம், 28ஆம் திகதி சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- சாரதாவின் கொடைக்கானல் வீட்டினை விற்பதற்காக கங்காவும், ஜமூனாவும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கையில், நெவீனுடன் தனது வாழ்க்கையினை தக்க வைப்பதற்காக பொய் சொல்லும் ஜமூனா.
- நெவீன் தனக்குரிய உதவிகளை வேண்டாம் என்று மறுத்ததுமல்லாமல், ஜமூனாவைப் படித்து நல்ல நிலைக்கு வந்தால் காணும் என்று கூறிய நெவீன்.
- நெவீனின் அம்மா, ஜமூனாவை விவாகரத்து பண்ணும்படி கட்டாயப்படுத்துவதனால், இதற்கு ஒத்துப் போகாத நெவீன்.
- காவேரியும், விஜேயும் தாத்தாவின் வீட்டிற்கு வாழுவதற்காகப் புறப்பட்டு விட்டனர். சந்தோஷமாக வரவேற்கப்பட்ட விஜேயும், காவேரியும்.
- Businessஜப் பொறுப்பேற்கும்படி விஜேயிடமும், காவேரியிடமும் கேட்டுக் கொண்ட தாத்தா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 27 - 28.10.2025
ஜமூனா தனது வாழ்க்கையினை நெவீனுடன் தக்க வைப்பதற்காக சாரதாவின் வீட்டினை விற்பதனால் தனக்கு வரும் பங்கினை நெவீனுடைய businessக்குகாக தருவதாக சொல்லியும் ஏற்றுக் கொள்ளாத நெவீன்.
நெவீனின் அம்மாவும் ஜமூனாவின் விவாகரத்துக்குத் தூண்டிக் கொண்டிருப்பதற்கு தனது சொத்து முழுவதையும் நெவீனுக்குத் தருவதாகச் சொல்லியும் நெவீன் அதற்கு ஒத்து வரவில்லை. இதனால் சந்தோஷமடைந்த ஜமூனா.
தாத்தாவிற்கு சத்தியம் பண்ணிய காவேரி, அதன்படி விஜேயை வீட்டிற்குக் கூட்டிச் சென்றாள். சந்தோஷத்தில் அனைவரும் தம்பதியினரை வரவேற்றனர். ஆனால், அன்பரசுக்கு மட்டும் விஜேய், காவேரியின் வரவு பிடிக்கவே இல்லை. காரணம் சொத்துத்தான். அதுமட்டுமல்லாமல், officeக்கு விஜேயும், காவேரியும் வருவதிலும் அன்பரசுக்கு விருப்பமில்லை. என்னென்ன குளறுபடிகள் office இல் அன்பரசு செய்தானோ என்று தெரியாத நிலையில் தாத்தா.
இது உங்கள் business என்பதனை விஜேயுக்கும், காவேரிக்கும் சுட்டிக் காட்டி, அதனை நீங்கள்தான் பொறுப்பெடுத்து நடத்தியே ஆக வேண்டும் என்பது தாத்தாவின் வேணவா. அதனை மீண்டும் பொறுப்பேற்பார்களா? காவேரியின், விஜேய் மீதான பார்வை ஏதோ விளங்கப்படுத்துகின்றது. அதாவது, இல்லை என்றல்லவா முடிவெடுத்தனாங்கள் என்பது போன்ற பார்வையாக அது இருந்தது.
விஜேயைச் சமாளித்து தாத்தாவின் வீட்டிற்கு, அதாவது, விஜேயின் வீட்டிற்குக் கூட்டிவர எவ்வளவோ பாடுபட்டாள் காவேரி. விஜேயுடன் சேர்ந்து முடிவெடுக்கு முன்பு காவேரி தாய் சாரதாவுடனும், பாட்டியுடனும் சேர்ந்து முடிவெடுத்து அனுமதியும் வாங்கி விட்டாள்.
சாரதாவுக்கும், பாட்டிக்கும் இவர்கள் இருவரும் விஜேயின் வீட்டிற்குப் போவது என்பது மிகவும் கஷ்டமாகவும், விருப்பமில்லாமலும் இருந்தது. இவர்கள் இருவரும் போகையில், வீட்டிலுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆகக் குறைந்து விட்டது என்பது சாரதாவின் கவலை. ஆனால், என்ன செய்வது, பெண்ணாகப் பிறந்தவள் மாப்பிள்ளையின் வீட்டிற்குப் போய்த்தானே ஆக வேண்டும்.
சாரதாவுக்கோ நான்கும் பெண்பிள்ளைகளாச்சே! ஆகையால், நாலு பேரும் சாரதாவை விட்டுப் போக வேண்டிய நிலையில்தானே உள்ளார்கள். இறுதியில், சாரதாவும், பாட்டியும்தான் வீட்டில் மிச்சமாக இருப்பார்கள்.
காவேரியை நம்பலாம். ஆனால், கங்காவையும், ஜமூனாவையும் நம்பவே முடியாது. அவர்கள் நேராகவே சாரதாவைப் புறக்கணிப்பார்கள். காரணம், காவேரியால்தான்.
ஆனால்,, ஒருநாள் வரும், கங்கா, காவேரியைப் புரியும் காலம். இது எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒருநாள் வரும். அப்போது வரும் கஷ்டம் இருக்கே அதனை அனுபவிக்கவே முடியாது. அவ்வளவிற்கு கொடூரமாக இருக்கும். அப்போ, இதுதான் வாழ்க்கை என்பதனையும் உணர்த்தும்.
இப்போது காவேரியும், விஜேயும், தாத்தா – பாட்டியுடன் இருக்கின்றார்கள். ஆனால், அடிக்கடி, காவேரி தனது இருப்பையும் பாட்டிக்கு நினைவூட்டுவதனையும் இங்கு காணக் கூடியதாக இருப்பதனையும் நினைவிற்குக் கொண்டு வர வேண்டியதாக உள்ளது. இதில் ஏதாவது பாட்டியின் உள்குத்து இருக்கின்றதோ என்பதனைப் போகப் போகத்தான் தெரியும்.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!