posted 27th September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடித்தனம் என்றாலும் compare பண்ணுவது தானாகவே நுளையும். இல்லையேல் நுளைக்கப்படும். இது உறவுகளால், நண்பர்களால், அயலவர்களால் நடப்பதனைத் தவிர்க்க முடியாது.
- ஜமூனா தானும் வாழாது மற்றவரையும் வாழ விடாத ஒரு நச்சுக் கிருமி. கங்கா-ஜமூனா இரு சகோதரிகளின் கூட்டினால் வெளியே தூக்கி எறியப்பட்ட குமரன். குமரன் அமைதியற்று இருக்கும் நிலை.
- துடிக்காமல் நடைபயிலும் கங்காவும் – ஜமூனாவும். ஆனால் துடித்துத் துவளுகின்றான் குமரன். ஆனால், குமரனுக்கு ஆறுதலுக்குக் கதைத்தாற விஜேய்- காவேரி இருக்கின்றார்கள். ஆனால், ஒருதரும் இல்லாதோர் வாழ்க்கையும், மனமும் எவ்வளைத்தான் தாங்கும்.
- கங்காவின் நியாயம் ஒருபக்கம் சரியாக இருக்கின்றதுதான். தான் மூத்தவ, தனது கர்ப்பம்தானே முதன் முதலில் அறியப்பட்டது. எனவே, வளைகாப்பு தனக்குத்தான் முதல் நடக்க வேண்டும். ஆனால், இதில், காவேரிக்கு எல்லாம் பெரிய அளவில் நடந்தது என்று கூறுகையில்தான் கொஞ்சம் இடிக்கின்றது. இதற்கு ஜமூனாவும் ஊதித்தள்ளுகின்றாவே!
- சாரதா இதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். சாரதாவின் மனநிலை என்னவாக இருக்குமென்றால், என்னவாக விஜய் மருமகனாக இருந்தாலும், தங்களுடன் கீழே இருந்து சாப்பிட்டாலும், விஜேயின் வாழ்க்கையினை நினைத்து சாரதாவுக்கு கொஞ்சம் பயம் மனதில் இருக்கும்தானே!
- ஒன்றாக வளைகாப்பு நடத்தலாம் என்று காவேரி விரும்பினாலும், கங்கா அதற்கு சம்மதம் சொல்லவில்லை – விருப்பமும் இல்லை அவவுக்கு. குமரன் அமைதியானான், ஏனென்றால், கங்கா-ஜமூனா கை ஓங்கி இருப்பதனால்.
- ஒரே மேடையில் இருவருக்கும் வளைகாப்பு செய்யலாம் என்பதற்குக் காரணம், சாரதா கையில் செலவுக்குத் தேவையான பணம் வேணுமே என்பதுதான்.
- விஜே, காவேரிக்கு தங்கச் சங்கிலி பரிசாகக் கொடுத்ததும், காவேரியின் உடையினை மாற்றம் செய்ய வேண்டும் என்பதும் – நிட்சயமாக பெரிய பாதிப்பினை கங்காவிடம் காணலாம்.
- ஜமூனாவிடம் கங்கா, நீ கெதியில் கலெக்கடர் ஆகினால், உனக்குப் பெரிய வீடு தருவார்கள். அங்கு எனக்கும் இடம் தா நாங்கள் உன்னுடன் வந்த இருப்பதற்கு என்று கேட்டு இப்பவே இடம் பதிவு செய்து வைத்து விட்டா. என்ன பிறளயம் நடக்கப் போகின்றதோ! அப்போ விளங்கும் ஜமூனாவைப் பற்றி கங்காவுக்கு.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 26.09.2025
வளைகாப்பு நிகழ்வுகளில் பிரிவினை ஏற்பட்டது. இரு நிகழ்வுகளையும் வேறு வேறாக நடத்துவது என்பது சாரதாவுக்கு ஒரு பெரிய சவாலாக அமையப் போகின்றது.
பெரிதாக காவேரிக்கு வளைகாப்பு நடக்குமா என்பது இப்போது சந்தேகம்தான். ஏனென்றால், இப்போ விஜய் எந்தவிதமான பணப்புளக்கத்தினையும் கொம்பனியுடன் வைக்கவில்லை. தாத்தா என்னதான் சொன்னாலும், விஜேயுக்கு அதில் உடன்பாடில்லை. எனவே, காவேரிக்கான வளைகாப்பு சாரதா அத்தையின் வசதி வாய்ப்பிற்கேற்றவாறுதான் நடக்கும். இந்த நிகழ்வானது, சில சமயம் கங்காவினுடையதை விட மிகவும் எழிமையானதாகவும் இருக்கலாம்.
அப்பளக் கொம்பனி MD என்றால், உனது உடையினை மாற்றம் வேண்டும் என்பது ஒரு யாதார்த்தம். தனது மனைவி வீட்டிற்கு வரப்போகின்றா அதுவும் தங்கள் வாரிசினை வயிற்றினில் சுமந்து கொண்டு என்றதும் விஜேயின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.
ஆனால், கல்யாணிப்பாட்டியும், றாதா சித்தியும் சேர்ந்து நடத்திய நாடகத்தின் விளைவு விஜய் தனது வீட்டை விட்டுப் போனதுதான் மிச்சம். விஜய் ஒருவரிலும் கோபம் இல்லை என்றாலும் அவனது மனம்படும் பாடிருக்கே அது கோவத்திலும் பெரிது. அவனும் அடக்கிக் கொண்டு, அமைதியாக, ஒருதருக்கும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
கங்காவும், விஜேயின் தற்போதைய நிலைமை தெரிந்தும், ஒரு மரியாதையும் இல்லாமல் விஜேய் கொஞ்சக் காலம் சிறையினுள்தானே இருந்தார் என்று நக்கலாகச் சொன்னது விஜயுக்கும், காவேரி்க்கும் எவ்வளவு வலித்திருக்கும் . இதுதான் உயிருடன் கொல்லுவதா? இப்படியான வித்தைகளுக்கு எங்களில் சிலர் பெரிய பட்டம் வாங்கியுள்ளார்கள்.
வளைகாப்பு ஒவ்வொருவருக்கும் நடத்துவதற்கு சாரதாவுக்கு விருப்பம் இல்லையா? ஆனால், சாரதாவுக்கு வசதி வேண்டுமே. இதனை விளங்கமாட்டேன் என்று இருக்கும் கங்காவுக்கு சொல்லி விளங்கப்படுத்த முடியாது. ஆனால், காவேரியும், விஜேயும் மிகவும் சாதாரணமாகத்தான் வளைகாப்பு செய்ய விரும்புவார்கள். இல்லை இந்த வளைகாப்பு நிகழ்வினைச் செய்யவும் மாட்டார்கள். ஆனால், காவேரிக்கு வளைகாப்பு நடக்காவிட்டால், கங்காவும், ஜமூனாவும் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
காவேரி வீட்டிற்கு வரப்போகின்றா என்ற சந்தோஷத்தில் விஜேய் தங்கள் அறையினைச் சோடித்து, அவவுக்கு பவுண் நகை வாங்கி எல்லாம் கோலாகலமாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தான். இந்தச் சந்தோஷத்தினைக் கெடுக்க கல்யாணிப்பாட்டியும், றாதா சித்தியும் திட்டங்களைத் தீட்டினார்கள். விஜயின் வாழ்க்கையினைத் தீந்து போக வைத்து விட்டார்கள். இவர்களின் basic கான பிரச்சனையானது காவேரி தங்களுடம் உள்ள சொத்துக்குத்தான் ஆசைப்பட்டு விஜேயைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றாள் என்பதுதான். இந்த நினைப்பு கல்யாணி பாட்டிக்குத் தான் நினைவில் உள்ளது.
ஆனால், றாதா, அன்புடன் சேர்ந்து தாங்கள் இந்தச் சொத்து முழுவதனையும் ஆட்டையைப் போடுவதுதான் இவர்களின் திட்டமே. இதற்கு இடைஞ்சலாக இருப்பது விஜய்தான். அதானல்தான், அன்பு பசுபதியுடன் கூட்டுச் சேர்ந்து விஜயை சிறையில் அடைக்க வைத்தான். காவேரியை பசுபதியுடன் சேர்ந்து தீர்த்து வைக்க முயற்சித்தான்.
அத்துடன் இப்போது விஜயுக்கு வாரிசு ஒன்று உருவாகி விட்டது என்றதும், றாதாவின் முகத்தினில் சந்தோஷத்தினைக் காணவில்லை. மனம் பொறுக்க முடியாத வெறுப்பானது அவவுடைய முகத்தில் தெரிந்தது.
இப்படியான வெறுப்புகளுடன் ஒரு குடும்பம் வாழ்க்கையினைத் தொடங்க முடியாது. நிட்சயமாக அழிவானதும், ஆசீர் அற்ற வாழ்க்கையுமாகத்தான் இருக்கும். இதனை ஒருதரும் சொல்லித்தர மாட்டார்கள். இதனால், பலபேரின் வாழ்க்கையானது நரகமானதுமுண்டு. மன உழைச்சலில் துவண்டு மடிவதும் உண்டு.
கங்காவினதும், ஜமூனாவினதும் ஆட்டம் இப்போதுதான் ஆரம்பமாகி உள்ளது. விஜேயும், காவேரியும், கங்காவை விட வாழ்க்கைத் தரம் குறைந்தால் பிரச்சனை வராது. ஆனால், காவேரி, விஜேயின் வாழ்க்கைத்தரம் உயருமாக இருந்தால் நான் மேலே கூறியதுதான் நடக்கும்.
மரமொன்றினை முறிக்க முறிக்க முளைச்சுக் கொண்டிருப்பது போல்தான் வாழ்க்கையானது. முளைத்துக் கொண்டிருக்கும் மரத்தினை முறிப்பதற்கு பலர் உள்ளர்.
ஜமூனாவின் குணத்தினைத் தெரியாமல் காலை விடுகின்றா கங்கா. இப்பவே ஜமூனாவிடம் அவவுடைய வீட்டில் தன் குடும்பத்திற்கு இடம் book பண்ணி இருக்கின்றா. அப்போ கங்கா தாயின் வீட்டினை விட்டு ஜமூனாவுடன் இருந்து மாரடிக்கப் போகின்றா. கங்கா ஜமூனாவின் வீட்டில் எவ்வளவு நாட்களுக்கு தாயை விட்டிருப்பா என்று பார்ப்போம்.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!