Mahanadhi - மகாநதி - 25.09.2025

மகாநதி - Mahanadhi - 25.09.2025

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • தாத்தாவும், பாட்டியும் காவேரிக்கு வளைகாப்பு செய்யும் வழக்கம் 5ஆவது மாதத்திலே என்று கல்யாணிப் பாட்டி விஜேயையும், காவேரியையும் அழைக்க வந்தனர். ஆனால் பாட்டிக்கு காவேரி தங்கள் வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை.
  • கல்யாணியைத் தாத்தா இயலுமான வரை சமாளித்துக் கொண்டிருக்கையிலே, சாரதாவின் குடும்பத்தினை ஒரு கணக்கும் கல்யாணி பாட்டி எடுக்காததை அவதானித்த விஜேய், இப்போதைக்கு வளைகாப்பு வேண்டாம் என்ற விஜேய்.
  • வேலை interviewவுக்குப் போன விஜய் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான். தாங்களே ஒரு company தொடங்கலாம் நான் உங்களுக்கு company தாறேன் என்றாள் காவேரி.
  • காவேரிக்கு வளைகாப்பு ஒழுங்குகளைப் பற்றி கதைக்க வந்தார்கள் விஜேயின் தாத்தாவும், பாட்டியும். ஆனால், சாரதாவின் வீட்டார்கள் கங்காவிற்கு வளைகாப்பு என்பதனைப் பற்றி ஒன்றும் கதைக்காததால் கலக்கமும், கவலையும் அடைந்த கங்கா.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

மகாநதி - Mahanadhi - 25.09.2025

7 மாதத்தினில் செய்ய வேண்டிய வளைகாப்பினை இப்போது 5ஆவது மாதத்தில் செய்யலாம் என்று கல்யாணிப் பாட்டி தாத்தாவை இழுத்துக் கொண்டு வந்தா, சாரதா வீட்டிற்கு. மருமகள் உண்டாயிருக்கின்றா என்று இனம், சனத்திற்குச் சொல்லும் விதமாக செய்வதென்று ஒரு முறையினைச் சொன்னா பாட்டி. அனால், அதில் காவேரியை வீட்டிற்குக் கூப்பிடாமல் விஜேயை மட்டும் கல்யாணிப் பாட்டி கூப்பிட்டா. இதில் கல்யாணிப்பாட்டி இன்னமும் காவேரியின் குடும்பத்தில் உண்மையாக அன்புடன் இல்லை என்பதனை விஜேய் உணர்ந்தான்.

விஜேயின் நம்பிக்கையானது, திட்டமானது, ஆசையானது, ஒரு நாளைக்கு பாட்டி மனம் மாறி சாரதா அத்தையின் குடும்பத்தினை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம் என்றுதான். இது நடக்கும் என்றா நினைக்கிறீங்கள்? படங்களில் நடக்கலாம். நாடகங்களில் நிகழலாம். ஆனால், வாழ்க்கையில்....?

இதுவும் உங்கள் வாழ்க்கையினைப் பிரட்டிப் போடும் ஒரு அத்தியாயம். எமது வாழ்க்கையில் பிசகும் வசந்தம் என்ற இணைப்பினைக் கிளிக் செய்து கேளுங்கள்.

பாட்டியையும், தாத்தாவையும் தனது portionக்குக் கூட்டிச் சென்றான் விஜய். தனிப்பட்ட விஷயங்களைக் கதைப்பதற்கு, அதுவும், பாட்டி ஏதும் இடக்கு முடக்காகச் சொல்லி விட்டா என்றால், சாரதா அத்தை அதனையிட்டு வேதனைப்படுவா? பிறகு வாழ்க்கையில் எப்பவும் அவர்களுக்கிடையில் ஒரு தவறுதலான அபிப்பிராயம் நிரந்தராமாக நிலவலாம். அது வாழ்க்கையில் இரு குடும்பங்களுக்கிடையிலான பகையினை வியாபிக்க வைத்தால் வாழ்க்கையானது நரகமாகலாம் என்று விஜய் யோசிக்கலாம் அல்லவா.

விஜயின் portionனில் விஜய் எதிர்பார்த்ததுதான் நடந்தது. பாட்டி காரசாரமாக விஜய் – காவேரி விஷயத்தில் கதைத்தனை விஜேக்கும் பிடிக்கவில்லை, தாத்தாவுக்கும் பிடிக்கவில்லை. எவ்வளவுதான் விஜயும், தாத்தாவும் சொல்லியும் ஒன்றையும் கேட்காமல் பாட்டி எழுந்து வீட்டை விட்டு வெளியில் போய்விட்டா. இதற்காக விஜய் பாட்டியுடன் சண்டையும் பிடிக்கவில்லை, காவேரிக்காக வேண்டி பாட்டியை ஒதுக்கவுமில்லை.

பாட்டியோ எப்படியாவது, காவேரியை விட்டு விஜயைப் பிரித்துக் கொண்டு போய் விட வேண்டும், விஜயைத் தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும், விஜய் தங்களுடன் வந்து தனிமையில் தங்களுடன் வாழ வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றா.

ஆனால், காவேரி, விஜேயுடன் அவனின் வீ்ட்டில் வாழ்ந்த அந்த ஒரு வருஷத்திலே, பாட்டி காவேரியுடன் எவ்வளவு பாசத்துடன் வாழ்ந்தா என்று யோசிக்கையிலே, இப்போது ஏன் காவேரியை வெறுக்கின்றா என்றுதான் விளங்கவில்லை. அவவுடைய மனதினில் ஏதோ இருக்கின்றது. ஆனால், பாட்டி கூறும் காரணம் இல்லை. அதாவது, பசுபதியினால் தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் காரணமாக இருக்கவே முடியாது. ஆனால், இதில், அவவின் மகள், றாதாவும், மருமகன் அன்பின் ஏதாவது குத்து இருக்குமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.

வளைகாப்பானது செய்வதற்கு குமரனின் பக்கம் குமரனின் அம்மாதான் இருக்கின்றா. அவ இப்போது அதனைச் சிந்திக்கமாட்டா. ஏனென்றால், கங்காவுக்கு 7 மாதம் ஆகவில்லையே. அது அண்மிக்கையிலேதானே சாரதாவும், குமரனின் அம்மாவும் யோசிப்பார்கள்.

பல நேர்முகப் பரீட்சைகளுக்குச் சென்ற விஜேய் over-qualified என்பதனாலும், விஜேயின் கொம்பனிதான் எல்லா கொம்பனிகளுக்கும் முன்னாலும், முன்னுதாரணமாகவும் இருப்பதனாலும், அந்தக் கொம்பனியின் சொந்தக் காரணமாக விஜேய் இருப்பதனால், வேலை மறுக்கப்பட்டது. ஏமாற்றத்தினுடன் வீடு திரும்பிய விஜய்க்கு பலம் நிறைந்த தூணாகத் தாங்கிப் பிடித்தாள் காவேரி. இதுதான் குடும்பத்தின் உறவு என்பது.

குடும்பமானது, கல்யாணம் முடிக்க முன்பு உள்ள சகோதர உறவு வேற, கால்யாணம் முடித்த பின்பு அவரகளுக்கிடையிலான உள்ள உறவு வேற. இதற்கு மூல காரணம், பணம். கல்யாணம் முடிக்க முன்பு குடும்பத்தின் செலவுகள் அவர்களின் பெற்றார்கள்தான் அதற்குப் பொறுப்பாக இருப்பார்கள். ஆனால், கல்யாணம் ஆனதும், செலவுகள் அவரவர் குடும்பங்கள் பங்கு போட வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. இங்குதான் குடும்பத்தினுள் கலவரம் ஆரம்பமாகின்றது. இதுதான் இங்கு சாரதாவின் குடும்பத்தினுள் முளை விடுகின்றது.

எவ்வளவுக்கு இந்த முளை வளருகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00