posted 5th March 2026
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- விஜேயின் குடும்பமே சேர்ந்து விஜேயுக்குத் துரோகம் செய்ததினை என்னென்று விஜயால் மன்னிக்க முடியும்.
- அம்மு உண்மையாக பாவம்தான்.
- நினைவினை இழந்த காவேரிக்கு மருந்து விஜேயும், அம்முவும்தான்.
- விஜேயுக்கான துரோகமானது ஆரம்பிக்கப்பட்டது கல்யாணிப் பாட்டியே.
- மனிதரால் பிரிக்கப்பட்ட காவேரியையும், விஜேயையும் சேர்க்க முன்வந்த கடவுள்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 25 - 27.02.2026
விஜேயின் மகளான அம்மு விளையாடிக் கொண்டிருக்கையிலே தவறுதலாக கீழே விழுந்து காயப்படுகின்றாள். அம்மு விளையாடிக் கொண்டிருந்ததனை பார்த்துக் கொண்டிருந்த காவேரி ஓடிச் சென்று அவளுக்கு முதலுதவியினைச் செய்தாள். அத்துடன் அம்முவின் தகப்பன் விஜேக்கும் போஃன் பண்ணி அறிவித்தாள், உடனடியாக வந்து அம்முவை வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போகும்படி.
விஜேயும் வந்தார் பாடசாலைக்கு. அம்முவிடம் டாக்டரிடம் போவோம் என்று கூறி டாக்டரைத் தொடர்பு கொண்டார் விஜய். டாக்டரோ கிளினிக்கில் இல்லாததினால், டாக்டர், வீடியோவில் அம்முவைப் பாரத்து வைத்தியம் சொல்கின்றேன் என்றதற்கிணங்க டாக்டர் வைத்தியம் சொல்கின்றார்.
விஜேயும் டாக்டர் சொன்னபடி மருந்தினை வாங்கிக் கொண்டு வருவதற்காக, என்ன மருந்தென்று பார்ப்பதற்காக டாக்டருடன் கதைத்தனை பதிவு செய்த வீடியோ கோளின் பதிவினை அலசிப் பார்க்கையிலே, விஜே காவேரியைக் கண்டான். இது உண்மைதானா என்று பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்து, காவேரி இருக்கும் வீட்டு விலாசத்தினைப் பெற்றுக் கொண்டு அங்கு விரைந்தான்.
காவேரியோ அப்போது வீட்டில் இல்லை. அயலில் விசாரித்தான் விஜய். விபரம் சரியாக எடுக்க முடியாததினால் காவேரியின் படத்தினைக் காட்டி விசாரிக்கையிலே அயலில் வசிக்கும் அந்தப் பெண்மணி, இவதான் என்று உறுதிப் படுத்தினா. அத்துடன், தாயும், மகளுமாகத்தான் வாழுகின்றார்கள். இப்போது அண்மையிலேதான் இங்கு குடிவந்தார்கள் என்பதனையும் கூறினார் அந்தப் பெண்மணி.
இதற்கிடையில், தாத்தாவும், றாதாவும், அன்புவும் காவேரியைப் பற்றியும், சாரதாவைப் பற்றியுமான கதை ஒன்றையுமே விஜேக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். இது குடும்பமாகச் சேர்ந்து விஜேக்கும், காவேரிக்கும் துரோகமல்லவா செய்கின்றோம் என்று கூட கொஞ்சமும் குற்ற உணர்ச்சியொன்றும் இல்லாமல் இந்த 5 வருடங்களைத் தாண்டியுள்ளார்கள்.
ஐந்து வருடங்களாக விஜேய், தனது வீட்டாரையும், அவர்கள் கூறிய கதைகளையும் நம்பித்தான் ஒருவிதமான வார்த்தைகளும் திரும்பிக் கேட்காமலும், ஒருவிதமான சிந்தனையுமில்லாமல் காவேரியின் வீட்டாரைப் பற்றி ஒன்றும் விசாரிக்காமலும் இருந்திருகின்றான். காவேரிதான் இறந்து விட்டாள் என்றால், காவேரியின் குடும்பத்தினைச் சந்தித்து விஜேய் பிள்ளையினைக் காட்டாமலும், சாரதாவிற்கு ஆறுதலாக இருக்காமலும், ஒருவிதமான தொடர்புகளும் இல்லாமலும் இருந்தது என்பது விஜயின் தவறாகத் தெரிகின்றது.
காவேரி இறந்த பின்பு, விஜேயைத் தனது மகன் என்று ஆரம்பத்திலிருந்து கூறிய சாரதா, எவ்வளவு துன்பத்தினை அனுபவித்திருப்பா என்று கூட விஜய் சிந்திக்காமல், அப்படியே ஒருவிதமான அசைவாட்டமும் இல்லாமல் இருந்தது என்றால், இதனை யார்தான் நம்புவார்கள்? நம்பலாம். ஏனென்றால், இவ்வாறாக வாழ்க்கையினையே பூச்சியமாக, ஒரு விதமான சிந்தனையுமில்லாமல் கிட்டத்தட்ட 25 வருடங்களாக சீவித்துக் கொண்டிருந்தவர்கள் இருக்கின்றார்கள்தான்.
இதற்கு சாரதாவின் பக்கமாகவோ அல்லது கங்காவினதோ அல்லது நெவீனினதோ பிழையினைச் சொல்ல முடியாது. ஏனென்றால், விஜய் இறந்து விட்டான், என்பதனால், அவனது ஞாபகமாக அவனின் பிள்ளையாவது இருக்கட்டும் என்றும் இவர்கள் சொல்லியிருந்தால், சாராதாவின் பக்கமிருந்து ஒரு கேள்வியினையும் யாரும் கேட்க முடியாது.
ஜமூனா விழுந்ததினால் ஏற்பட்ட காயமானது, கையில் ஒரு சிறு முறிவினை ஏற்படுத்தியுள்ளதானால், ஜமூனா இப்போது உதவி கலெக்டர் பதவியினை பொறுப்பெடுக்க முடியாமல் வீட்டினிலே இருக்கின்றா. ஜமூனாவிற்கும், நெவீனுக்கும் இப்போது நல்லவிதமான உறவானது நிலவுகின்றது. இதனால், வீணாக லீவினைப் போட்டு விட்டு வந்த காவேரியையும், சாரதாவையும் பார்த்து அனுதாபப் பட்டார்கள்.
சந்தானத்தின் கனவான கலெக்டராகும் எண்ணமானது இப்போது ஜமூனாவால் நிறைவேறி உள்ளது.
கங்காவும் வேறு இடத்தி்ல் தனது பிள்ளையுடன் இருக்கின்றாள். ஓரளவிற்கு சாரதாவின் குடும்பமோ இந்த ஐந்து வருடங்களில் ஒரு முன்னேற்றத்தினை அடைந்துள்ளார்கள். ஆனால், காவேரியின் நிலைமைதான் இப்போது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
காவேரி்க்கு இப்படியான ஞாபக சக்தியானது இல்லாமல் போய் விட்டது என்று தெரிந்திருந்தால், காவேரி, விஜேயுடனும், பிள்ளையுடனும் சீவித்திருந்தால் எப்பவோ அவளுக்கு சுகமாகி இருக்க வாய்ப்புகள் உண்டு எனலாம்.
ஆனால், விஜேயின் வீட்டார், வைத்தியசாலையிலிருந்து நேராக வீட்டிற்கு வந்த காவேரியை வீட்டினை விட்டுக் கலைத்து விட்டு மிகவும் துரோகத்தினைச் செய்து விட்டார்கள் அல்லவா?
அதுமட்டுமா, விஜேயின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போயிருந்தார்களே விஜேயின் வீட்டார்கள். தாத்தா இறுதி வரைக்கும் உண்மையினைச் சொல்லவே இல்லையே! காவேரியின் போட்டோவைக் காட்டிய பின்பும் காவேரி உயிரோடு இருக்கின்றாள் என்று கூடச் சொல்வதற்கு வார்த்தையானது தாத்தாவின் வாயிலிருந்து வரவில்லையே. அவருக்குத்தான் தெரியும்தானே காவேரி உயிரோடு இருக்கின்றாள் என்பது.
அம்முவிற்கு எத்தனை பேர்கள் சுற்றி இருந்தாலும், அவளுக்கு தாயின் அரவணைப்பு இல்லாதிருக்கையிலே அவள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருப்பாள். காவேரி, விஜேயுடன் இருந்திருந்தால், காவேரி சுகமில்லாமல் இருந்தாலும் அம்மு தாய்ப்பால் குடித்து வளர்ந்திருப்பாளே! அத்துடன், தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியானது அம்முவிற்குக் கிடைக்காமல் போனதற்கும் விஜேயின் வீட்டார்தானே காரணம். ஆக மொத்தமாக அம்முவிற்கு கிடைக்கவிருந்த சந்தோஷம், அன்பு, பாசம், தாயின் அரவணைப்பு எல்லாவற்றையும் அழித்து விட்டார்களே விஜயின் குடும்பத்தவர்கள் எல்லாரும் சேர்ந்து.
ஆனால், எங்கேயோ இருந்த காவேரியையும், சாரதாவையும் இங்கு, அதாவது, விஜேய் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்ததுமல்லாமல், அம்மு சேர்ந்த பாடசாலையிலே காவேரி டீச்சராகவும், அதுவும் அம்முவின் வகுப்புப் பொறுப்பாசிரியையாகவும் இருக்க வைத்தது யாரென்று நினைக்கத் தோன்றும். விதி என்று சொல்லுவார்கள். ஆனால், காவேரியையும், விஜேயையும் ஒன்றாகக் கல்யாணப் பந்தத்தில் இணைத்தது அந்த இறைசக்திதான். அந்த சக்திதான் இப்போதும் இவர்களின் வாழ்க்கையிலே கைவைத்துள்ளது.
இனி, காவேரியை எப்படியாவது விஜய் அவளது வீட்டினிலே சந்திப்பான்.
எல்லாக் கதைகளையும் கேட்டறிவான்.
காவேரி்க்கு விஜயைக் கண்டதும் தான் கனவினில் கண்டவர் இவர்தான் என்று அம்மா சாரதாவிடம் சொல்லுவாள்.
விஜேய் காவேரியைத் தேடி வந்ததினை ஜமூனா, நெவீன், கங்கா எல்லாரிடமும் சாரதா சொல்லுவா.
இனி என்னதான் நடக்கும்? விஜேய் காவேரியைக் கூட்டிக் கொண்டு தனது வீட்டிற்குப் போவாரா? அல்லது அம்முவையும் கூட்டிக் கொண்டுவந்து காவேரியுடன் இருப்பாரா?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!