posted 5th March 2026
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 23ஆம், 24ஆம் திகதிகள் வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- காவேரி கனவினில் தென்பட்டவர் நனவினில் வந்தார். அம்முவின் அப்பாவா என் கனவினில் வந்தார் – வியப்பினில் காவேரி – வீழ்ந்து அழுதாள் அம்மு.
- அன்புவும், றாதாவும் காவேரியையும், சாரதாவையும் விரட்டினார்கள். சாரதாவுக்கு விளங்கினாலும், காவேரிக்கு விளங்காதவர்களாக இவர்கள்.
- தாய்க்குத் தெரியாத சேய், சேய்க்குத் தெரியாத தாய். காவேரி அம்முவிற்குச் சொன்னது நனவாகும் நாள் கெதியில் வருமா?
- கனவிலும் நினைக்கவில்லை விஜேயின் குடும்பமே ஒத்து நின்று தனக்குத் துரோகத்தினாச் செய்தார்கள் என்று. தாத்தாவும் இவர்களுடன் சேர்ந்தா?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி 23 - 24.02.2026
சாரதா வீட்டாருக்கோ விஜேய் உயிரோடிருப்பது தெரியாது. அதேபோல, விஜேயுக்கு காவேரி இறந்து விட்டாள் என்பதுதான் தெரியும். காவேரிக்கோ பழைய நினைவுகளை இழந்தவளாய் ஆனால், காவேரி என்ற அவளது பெயரினை சாரதா வீட்டார் அனைவரும் அவளுக்குச் சொல்லி வைத்துள்ளமையானது மிகவும் புத்திசாலித் தனமாக இருக்கின்றது.
ஆனால், விஜேயோ முழு அறிவுடனே முன்னைய நினைவுகளுடனே காவேரி வெளிநாட்டில் இருக்கின்றாள் என்று அம்முவிற்குச் சொல்லி விட்டாலும், அம்முவிற்குத் தெரியும் தனது அம்மா, காவேரி, சாமியிடம் போய்விட்டா என்று. இதனை அம்மு அவவின் வகுப்பு ஆசிரையையாக இருக்கும் காவேரியிடம் சொல்லியுள்ளாள்.
அம்முவோ, வகுப்பு ஆசிரியையாக இருக்கும் காவேரியிடம் பொருந்தனை செய்துள்ளாள் இன்று அப்பாவை தனது வகுப்பு ஆசிரியைக்கு அறிமுகப் படுத்துவதற்கு. அதன்படி பாடசாலை முடிந்ததும் காத்திருந்து ரீச்சரைக் கூட்டிக் கொண்டும் வந்தாள். ஆனால், அந்த நேரம் ரீச்சருக்குக் கைகூடவில்லை. அம்முவும், விஜேயும் பாடசாலை வளவில் காத்திருந்து விட்டு வீடு திரும்பினார்கள்.
ஆனால், தெய்வச் செயலினை இங்கு பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அதாவது, காவேரியோ தனது அலுவல் முடிந்ததும் வெளியில் வந்தவளாய் வெளியில் நின்று கொண்டிருந்த அம்முவையும், அவவின் அப்பாவையும் கண்டாள். காவேரிக்கோ அம்முவின் அப்பாவைத்தானே தான் தனது கனவினில் அடிக்கடி காண்பதாகவும் நினைவு கூர்ந்தாள். இதனை வீட்டிற்குச் சென்ற காவேரி தனது கனவில் அடிக்கடி வரும் அந்த உயர்ந்த மனிதனைத் தான் இன்று பாடசாலையில் கண்டேன் என்று தனது தாய் சாரதாவிடம் கூறினாள். காவேரி சொல்வதனை நம்ப முடியாமல் இருந்த சாரதா, விஜய் உயிருடன் இருந்திருந்தால் சாரதா விஜய்தான் காவேரியின் கனவினில் வருகின்றார் என்று நினைப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு. ஆனால், விஜேய்தான் இப்போது உயிருடன் இல்லையே என்றுதானே அவர்களுக்குத் தெரியும்.
இப்படியான நம்பிக்கையுடன் சீவிக்கும் சாரதாவின் குடும்பம் காவேரியின் கனவினை நினைத்து வியந்தாலும், கொஞ்சமும் காவேரியின் முன்னைய வாழ்க்கையினை சிந்திக்க வாய்ப்போயில்லை.
உண்மையாக ஒருவர் உயிருடன் இருக்கின்றார் என்றால், அவரைக் கனவினில் காண்பது, அல்லது, கன காலத்தின் பின்பு நேரில் காண்பது என்பதானது சாத்தியமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், இறந்த ஒருவரைக் கனவினில் அடிக்கடி காண்பது என்பது, அப்படிக் கண்டவரை இப்போது உயிருடன் காவேரி பாடசாலையில் காண்பது என்பது நினைக்கக் கூடிய உண்மையாக இருக்கும் என்று நம்புவதற்கு மிகவும் அரிதாகவே இருக்கின்றது.
நெவீனினால் ஒழுங்குபடுத்தப்பட்ட காவேரிக்கான சம்பத்தத்தினை எப்பவோ காவேரி வேண்டாம் என்று சொல்லியிருக்கையிலே, அந்தக் கதையானது மீண்டும் காவேரி வீட்டில் கங்காவாவாலும், ஜமூனாவாவாலும் எழுந்துள்ளது. அதாவது, காவேரியைப் பெண் பார்ப்பதற்காக வருவதாக மாப்பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்களாம் என்று காவேரியின் சகோதரிகள் சாரதாவிடம் அறிவி்த்தார்கள். இதனையிட்டு ஆத்திரம் கொண்டாள் காவேரி. ஆனால், இப்படியான வாழ்க்கையினை வாழும் காவேரி்க்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று சகோதரிகளும், மைத்துணனும், தாயும் நினைப்பதில் தவறில்லைதானே!
இப்படி சகோதரங்கள் அமைவது மிகவும் அரிது. அநேகமானோருக்கு இது அமைகின்றதோ இல்லையோ ஒரு சிலருக்கு அமைவதே இல்லை. இதில், காவேரியோ கொடுத்து வைத்தவள் என்றுதான் சொல்ல முடியும். மாப்பிள்ளை வீட்டாரும் வந்தார்கள். பெண்ணைப் பார்த்தார்கள். நன்கே காவேரியைப் பிடித்துக் கொண்டது என்று விருப்பம் தெரிவித்தாலும், காவேரிக்கோ ஒருவிதமான அபிப்பராயமும் கல்யாணத்தில் இல்லை.
தெய்வத்தால் பொருந்தி வைக்கப்பட்ட கல்யாணம்தான் காவேரிக்கும், விஜேயுக்காமான கல்யாணம். இப்படியான கல்யாணத்தினை வேறு ஒருவனுடன் தெய்வம் சேர்த்து வைக்குமா? மானிடப் பிறவிகள் படைத்தவனுடனே சவால் விடுவதனை நினைக்கையிலே மிகவும் கேவலமாக இருக்கின்றது. இந்தச் சூழ்நிலையினைத்தான், காவேரி – விஜேய் வாழ்க்கையிலும் காணக்கூடியதாகவும் இருக்கின்றது. கூடி இருந்தவர்கள், தூக்கி வளர்த்தவர்கள், உற்றார் உறவினர் அனைவருமே காவேரிக்கும், விஜேயுக்கும் அனைவருக்கும், காவேரியின் குடும்பத்தில் அன்பு என்பதே இல்லையே! அதைத்தான் கல்யாணிப்பாட்டி அடிக்கடி கூறியிருக்கின்றாவே!
இதற்கிடையில், காவேரியை றோட்டினிலே தற்செயலாகக் கண்ட அன்புவும், றாதாவும், ஆச்சரியத்தில் பார்த்தார்கள். காவேரியை வெருட்டி எப்படியாவது இங்கிருந்து துரத்திவிட வேண்டும் என்ற முடிவுடன் காவேரியுடன் கதைத்தார்கள். ஆனால், இவர்கள் யாரு? தன்னுடன் ஏன் கதைக்கின்றார்கள்? என்று ஒருவிதமான விஷயமும் விளங்கவில்லை. இவர்களெல்லாம் யார் என்று காவேரி சிந்திக்க முன்னமே, அன்புவும், றாதாவும் தங்களைச் சுதாகரித்துக் கொண்டு காவேரியுடனான கதையினை நிறுத்தி விட்டு விலகினார்கள்.
ஆனால், சாரதாவைக் கண்ட அன்புவும், றாதாவும், மிகவும் கடுமையாகவும், அடக்கு முறையுடனும் சாரதாவுடன் கதைத்தார்கள். ஆனால், சாரதாவோ மிகவும் அமைதியாகவும், பயத்துடனும் அவர்களுக்கெதிராக ஒன்றுமே கூறாமல் அவர்கள் கேட்பதற்கு பதிலினை மட்டும் கூறினாவே ஒழிய, பேத்தியைப் பற்றி மட்டும் கேட்டா. அதையும், மிகவும் காரசாரமாகத்தான் பதில் சொன்னான் அன்பு. பேத்தியைப் பற்றிய நினைப்பு உங்களுக்கெல்லாம் இருக்கக் கூடாதென்று வெருட்டினான் அன்பு.
ஆனால், இவர்களுக்கு என்ன தெரியும்? அம்முவோ பகல் பூராகவும் தனது தாயுடன்தான் இருக்கின்றாள். காவேரியோ அம்மு கேட்ட கேள்விக்கு, அவளது தாய் சாமியிடம் போயிருக்கையிலே உன்ர அம்மா உன்னிடம் வருவா அம்மு என்று கூறியது இ்ப்போ நனவாகப் போகின்றது.
காவேரி அம்மு விளையாடுவதனைப் பார்த்துக் கொண்டு, தான் கண்ட கனவினில் வந்தவர் அம்முவின் அப்பாவா என்பதனையும், அம்முவின் அம்மா சாமியிடம் போய் விட்டா என்று சொன்னதினையும் யோசித்துக் கொண்டு நிற்கையிலேதான், அம்மு ஊஞ்சலிலிருந்து வழுக்கி விழுந்தாள். காயத்திற்கு மருந்தினைப் போட்ட காவேரி, அம்முவின் தகப்பனுடன் கதைக்க வேண்டிய கட்டாயமான சூழ்நிலையானது உருவானது. விஜேயுக்கோ தன்னுடன் கதைத்த அம்முவின் வகுப்பு ஆசிரியையின் குரலைக் கேட்டு அந்தக் குரலானது காவேரியின் குரல் போன்றுள்ளது என்பதனைச் சிந்திக்கலானான்.
ஆனால், விஜேயுக்கோ தனது குடும்பமாகக் கூடி தனக்குத் துரோகம் செய்துள்ளார்கள் என்பதனை அறியாமல், அம்முவின் வகுப்பாசிரியை கதைத்தது காவேரி கதைத்தது போல இருந்தது என்று வீட்டிலுள்ள தாத்தா, அன்பு, றாதாவிடம் சொன்னானாகில் காவேரி்க்குத்தான் பிரச்சினை வர வாய்ப்புகள் உண்டு.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!