posted 20th January 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- உறுதியாகியது கிறிஷ்ணாவின் குள்ளத்தனமான வேலையும், துரோகமும்.
- றகாவுடனான தொடர்பினை நெவீனை வைத்துக் கண்டுபிடித்தான் விஜய். ஆனால், இந்த விஷயங்களில் ஒரு துளியினைக் கூட காவேரியின் காதுக்கு எட்டாமல் பார்த்துக் கொண்ட விஜய்.
- தான் ஒரு civil engineer என்று கூறி வேலைக்குள் நுளைந்தான் கிறிஷ்ணா. போலியான ஆவணங்களைத் துணிவாகக் கொடுத்தான் விஜயிடம்.
- இவன் போலியானவன் என்றால், சிந்துவும் போலியான nurseதானா? பாவத்திற்கு இரங்கியவனாக பலவிதமான பொறுப்புக்கள் இவர்களிடன் கொடுக்கப்பட்டது. துரோகம் செய்யத் துணிந்தவர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள்? குடும்பத்திற்கே படியழந்தவினுக்கு குடும்பமாகச் சேர்ந்து துரோகம் செய்வதென்றால் அந்தக் கடவுளும் அவர்களை மன்னிப்பாரா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 19 .01.2026
பொங்கல் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி களையாற விடவில்லை கிறிஷ்ணா. கிறஷ்ணா விரும்பி விஜேக்குத் துரோகம் செய்கின்றானோ அல்லது வெருட்டலுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றானோ தெரியவில்லை.
ஆனால், காவேரியின் வளைகாப்பினிலே கிறிஷ்ணா, தாய் முத்துமலரையும், தங்கை சிந்துவையும் நாங்கள் ஏன் இங்கு வந்தோம், யாருக்காக வந்தோம் என்று மறந்து விட்டீர்களா? என்பதனையும் இங்கு நினைவு கூர வேண்டும். அத்துடன், விஜேய், நெவீனை வைத்து கிறிஷ்ணாவைக் கண்காணித்த போது, கிறிஷ்ணா, றகாவுடன் கதைத்துக் கொண்டிருந்ததனை விஜேயிடம் சொன்னான்.
விஜேயும், நெவீனும், கிறிஷ்ணாவுடனான ஒரு casual சந்திப்பொன்றினை ஏற்படுத்தி கிறிஷ்ணாவிடம், றாகாவுடனான தொடர்பு என்ன என்பதனை கேட்டறிய முனைந்தாலும் விஜேயுக்கு பூரணமான உண்மைகள் கிறிஷ்ணாவிடமிருந்து வரவில்லை. ஆனால், கிறிஷ்ணா மீதான சந்தேகமோ உறுதியாகியது விஜேக்கு.
எல்லாவற்றினையும் வைத்துப் பார்த்தால், விஜேக்கு, கிறிஷ்ணா மேலான அவநம்பிக்கையானது உறுதியாகி விட்டது. இதில் ஒரு துளியும் காவேரியின் காதிற்கு எட்டாமல் விஜேய் பார்த்துக் கொண்டான். நெவீன் சொன்னதை விஜேய் கேட்டானே ஒழிய வாய் திறந்து ஒரு வார்த்தையும் நெவீனுடன் கதைக்கவில்லை. ஏனென்றால், காவேரி பின்னால் இருக்கின்றாள். அத்துடன், அவள் காதில் விழுந்திச்சு, விஜேயிடம் நோண்டி, நோண்டிக் கேட்பாள். காவேரி்க்குப் பதில் சொல்வதிலேயே விஜேய் களைத்து விடுவான்.
கிறிஷ்ணாவிடம், றகாவைத் தெரியுமா என்று கேட்டதற்கு, கிறிஷ்ணா உடனடியாகப் பதில் சொல்லவில்லை. மாறாக, கொஞ்சம் நேரம் எடுத்தான். இதில் என்ன பதில் விஜேக்குச் சொல்லலாம் என்று அந்த gapஇனை எடுத்துக் கொண்டான். அதேபோலத்தான், புரக்கேறியது போன்றும் நடித்தான் கிறிஷ்ணா. இதெல்லாம் விளங்காமலா விஜேயும், நெவீனும் இருக்கின்றார்கள்?
கொம்பனிக்குத் திரும்பிய விஜய், கொம்பனிப் பொறுப்பதிகாரியாக இருக்கும் ஐயப்பனிடம், கிறிஷ்ணாவின் கல்வி சம்பந்தமான சான்றிதள்களைக் கொணரும்படி சொல்ல, ஐயப்பனோ, ஒன்றும் இல்லை என்று ஐயப்பன் சொல்ல, பறவாயில்லை, கிறிஷ்ணாவை வரச் சொல்லி விடுங்கள் என்று விஜய் சொன்னான்.
விஜேயின் cabinனுக்குள் வந்த கிறிஷ்ணாவிடம் அவனுடைய கல்விச் சான்றிதள்களைத் தரும்படி கூறுகையில், அவை ஒன்றும் இப்போது தன் கைவசம் இல்லை என்று கூறினான். அவையெல்லாம் கட்டாரி்ல் விட்டு விட்டு வந்து விட்டோம் என்று கிறிஷ்ணா கூறியதினை விஜேய் நம்பவில்லை. ஆனால், ஒரு கேள்வி விஜய் கேட்டிருக்கலாம். அப்படியென்றால், கிறிஷ்ணா, இங்கு நீங்கள் வேலை தேடுகிறேன் என்று சொன்னது? எப்படி கல்விச் சான்றிதள்கள் ஒன்றும் இல்லாமல் நீங்கள் வேலை தேடினனீங்கள் என்றால், கிறிஷ்ணாவின் அடக்கம் விளங்கியிருக்கும்.
சரி பரவாயில்லை என்று விஜேய் ஒருவாறாக ஏற்றுக் கொண்டு உங்களிடம் உள்ள சான்றிதள்களின் போட்டோ கொப்பிகளை ஈமெயிலுக்கு தனக்கு அனுப்பும்படி கூறியதற்கிணங்க, கிறிஷ்ணாவும் அனுப்பினான். ஆனால், அதனை றகாவுடன் கதைத்து, பசுபதியுடன் மேலும் கதைத்துத்தான் அந்த சான்றிதள்களை அனுப்பினான். எல்லாம் பசுபதியின் ஏற்பாடுதான்.
எல்லாச் சான்றிதள்களையும் விஜேய் தனது நண்பனிடம் பரீட்சித்துப் பார்த்ததில், எல்லாமே பொய்யான சான்றிதள்கள் எனத் தெரியவந்தது.
காவேரியின் சித்தி என்று உள்ளே வந்தவர்கள், முத்துமலரின் குடும்பம். அத்துடன், கிறிஷ்ணாவுக்கும், பசுபதிக்கும் தொடர்பு இருக்கின்றதனை அறிந்து கொண்டான் விஜய். இதனால், சிந்து ஒரு nurse என்று சொன்னது உண்மையாகுமா? அவளும் திருகுதாளம் செய்கின்றாளா? அல்லது உண்மையான nurse தானா என்பது இனித்தான் தெரியும்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!