Mahanadhi - மகாநதி - 18.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • சாரதாவின் கண்ணீரின் சக்தியினை இங்கு காணலாம்.
  • ஆங்காரத்தில் ஆடிய பசு இப்போ சாரதாவின் காலடியில்.
  • நோவு என்றால் என்ன என்று பசு இப்போவாவது உணர்ந்திருப்பான் என்று நினைக்கிறீர்களா? அது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.
  • வீ்ட்டுப் பத்திரங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. போலியான பத்திரம் கிளித்தெறியப்பட வைக்கப் பட்டது.
  • இனி, றாகவ் தனது ஆட்டத்திலே இறங்குவானா? இறங்கினால் அடுத்தது, றாகினிதான். றாகினி மாட்டினால் காவேரியிடமும், கங்காவிடமும் அடி வாங்காமல் நாடகம் ஓயாது.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 18.09.2025

மாட்டினான் றாகவ். இது தேவைதானா பசுபதியின் குடும்பத்திற்கு. தாங்கள் பாய்ந்தால்தான் பாயலாமா? மற்றவர்களுக்குப் பாயத் தெரியாதா?

காவேரியைக் கடத்தி வைத்து என்ன ஆட்டம் ஆடினான் பசு. அதுமட்டுமா றாகினியின் ஆட்டத்தினைச் சொல்லவா வேண்டும். றாகவின் கடத்தல் நாடகம் இனித் தொடங்கித்தான் பார்க்கட்டுமே – அவன் கதை கந்தலாகிவிடும்.

கங்காவிடம் கும்பிடு போட வைத்தான் குமரன். இது எப்படி இருக்கு?

சாரதாவிடம் காலில் தொட்டு மன்னிப்புக் கேட்டான் பசு. இது தேவைதானா அவனுக்கு?
சொல்லச் சொல்ல செய்யும் பொம்மையானான் பசுபதி.

தன் மகனை மீட்கும் மட்டும் வாயினை அடக்கியே இருப்பான் பசு. ஆனால், விஜயையின் பிடியில் உள்ள றாகவ் சொண்டினைச் சுழிச்சுக் கொண்டிருப்பது, விடுங்கடா என்னை உங்களுக்கெல்லாம் சங்குதான் என்ற அவனது முகபாவனையில் நன்கு தெரிகின்றது. இவனுக்குத் தெரியுமா, விஜேய் வீட்டினுள் புகுந்து பசுவின் கையை முறித்தது. புடலங்காய் மாதிரி இருக்கும் றாகவ், வாலாட்டினால், விஜய் முறுக்கி எறிந்து விடுவான். அதற்குப் பிறகு உழுக்கெடுப்பதிலே இவர்களின் காலம் போய் விடும்.

போலியான பத்திரங்களைக் கொண்டு சாரதாவின் குடும்பத்தினையே சிப்பிலி ஆட்டம் ஆட்டியது இப்போ பசுவிற்கு கொஞ்சம் விளங்கியிருக்கும். ஆனால், இவன் அடங்குவானா? இல்லை, அடக்கப்படுவான், இந்த மும்மூர்த்திகளினால். பசுபதியால் சாரதாவின் குடும்பம் இழந்தவை கணக்கிலடங்கா. காவேரியின் தகப்பனின் உயிருக்கு எதுதான் நிகராகும்.

பசுபதிக்கு அவ்வளவு கோபம்தான் எதற்கு சாரதா குடும்பத்தின் மேலே. சாரதாவின் குடும்பத்தவர் யாரும் பசுவின் குடும்பத்திற்கு ஏதாவது அநியாயம் செய்தார்களா? இல்லையே! பசுபதியாலேதான் சாரதாவின் குடும்பம் அளவில்லா துன்பத்தினை அனுபவித்தார்கள். அந்த வலிகளுக்கு ஒரு நாள் பசுபதியின் குடும்பம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். அதுதான் இதுவோ?

சாரதாவின் வீட்டினைப் பசுபதி பறித்ததும் பாட்டி இயக்கமின்றி விழுந்ததில் சாரதாவின் குடும்பமே ஆடிப் போயிற்று. அந்த சமயம் பாட்டிக்கு ஏதும் நடந்திருந்தால், என்னென்று அல்லது என்னத்தினை வைத்து அதனை நிவரத்தி செய்வது? முடியாதல்லவா? இதனை உணருவானா பசுபதி அல்லது றாகினி?
இப்போது பசுபதி தன் மகனுக்கு நோகிறதென்று துடிக்கின்றானே! சாரதாவின் குடும்பத்தின் நோவு பசுபதிக்கும், அவன் குடும்பத்திற்கும் தெரியத்தானே வேண்டும். அதுமட்டுமல்லாமல் நோகத்தானே வேண்டும்.

பத்திரங்கள் அனைத்தும் அசல் என்று சொன்ன காவேரி, இத்துடன் அமைதியாக இருக்க முடியாது. பசுபதியால் அல்லது அவனது குடும்பத்தினரால் ஏதாவது பிரச்சனைகள் வரலாம். ஆனால், அந்த பத்திரங்கள் எல்லாம் அசல் என்று ஒரு சட்டத்தரணியை வைத்துத்தானே முடிவெடுக்க வேண்டும். அது இங்கு நடக்கவில்லை. ஆனால், போலியானவை என்றாலே பிரச்சனைகள் வேறாகலாம்.

கங்காவைக் கும்பிட்ட பசுபதி கங்காவிற்கு ஆச்சரியத்தினைக் கொடுத்தான். காவேரியிடம் மன்னிப்பும், சாரதாவிடம் மன்னிப்பும், அவவின் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டதினை உண்மையென்று நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனென்றால் எல்லாமே அவர்களின் கண் முன்னாலேதானே நடக்கின்றதே!

ஆனால், அடிபட்டவன் பசுபதி இப்போ, தனது அடியாட்களை சாரதாவின் வீட்டின் பக்கத்தில் நிற்பாட்டி வைத்திருக்கலாம். எப்போது றாகவினைத் தன்னிடம் ஒப்படைக்கின்றார்களோ அப்பவே காவேரியின் வீட்டினுள் புகுந்து அட்டகாசம் பண்ணும்படி பசுபதி சொல்லி வைத்திருக்கலாம். ஆனால் இது பெரிய riskகாகவும் அமையலாம்.

பசுபதி சாரதாவின் முழு வீட்டுப் பத்திரங்களையும் கொடுத்த பின்பு கங்கா இன்னமும் குமரனின் மேலே கடுப்பாக இருப்பாவா. காவேரி மாதிரி கங்கா அவ்வளவுக்கு துணிந்த சுபாவம் இல்லை.
காவேரியைத் துவைச்செடுத்தவன்தான் பசுபதி, எனவே, அதற்கு ஒரு தண்டனை கொடுக்கப்பட வேண்டுமல்லவா? அதற்குத்தான் விஜய் காவேரியிடம் வாங்கிய கடனை உடனே கொடுக்கும்படி சொன்னான். கடனும் கொடுக்கப்பட்டாயிற்று. இதெல்லாவற்றினையும் பசுபதி பொறுத்திருவானா? மேலும் மேலும் இனி போறவாற இடத்திலெல்லாம் அடியாட்களை வைத்து பிரச்சனை பண்ணலாம்.

இது இப்படித்தான் நடக்கும் என்றுதானே நீங்களும் நினைக்கின்றீர்கள்?

எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!