posted 25th November 2025
இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 18 ஆம் - 19ஆம் திகதிகளின் சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- கட்டார் குடும்பத்தினை இரவானதும் வீட்டை விட்டு வெளியில் துரத்தி கதவைச் சாத்திய சாரதா. இரக்கத்தினால் உள்ளே அவர்களைக் கொணர்ந்த விஜேயும், நெவீனும்.
- உண்மையாக இவர்கள் சந்தானத்தின் குடும்பமா? என்று சந்தேகம் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
- கொடைக்கானலுக்கு வந்து இரண்டு நாட்களாகவில்லை. அதற்கிடையில் இவர்கள் கோட்டிலே stay வாங்குபவர்களாக இருந்தால், இவர்களுக்கு யாரோ உதவி செய்ய வேண்டும், அதுவும் பசுபதியாக இருக்கலாம் என்பது ஒரு ஊகம் இப்போது எழுந்துள்ளது.
- கட்டார் குடும்பமானது நிலத்திலிருந்து உண்ணும் போது அவர்களது தண்ணிப் போத்தலைக் காலால் தட்டி விட்ட ஜமூனா. குற்றத்தினை கிருஷ்ணாவின் மேலே பழியினைப் போட்டாள். நெவீனை, அவன் மேல் கோபமுற வைத்தாள்.
- சென்னையை நோக்கி விரைந்தனர், சாரதாவின் குடும்பம். அங்கிருந்து முழுவதையும் ஆராய்வோம் இந்த கட்டார் குடும்பம் உண்மையாக யார் என்றும், அல்லது, இவர்களை யார் அனுப்பினார்கள் என்றும், இவர்களின் பின்னால் யாரும் இருக்கின்றார்களா என்று சாரதா குடும்பத்திற்கே ஆறுதல் சொன்ன விஜய்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 18 & 19.11.2025
விஜேயிடமும், நெவீனிடமும் தங்களது குடும்பத்தினை பிழையாக எடை போட்டு விடாதீங்கள் என்று மன்றாட்டமாக சாரதா கேட்டுக் கொண்டா. ஏனென்றால், மாப்பிள்ளைகளின் வீட்டில் பிரச்சினைகள் வரலாம்; சந்தானத்தின் கட்டார் குடும்பத்தின் கதை வெளியில் வந்தால், தனது பிள்ளைகளுக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தினால்தான் சாரதா இதனைக் கேட்டுக் கொண்டா. இந்தப் பயமானது பெண் பிள்ளைகளைப் பெத்து கட்டிக் கொடுத்த எல்லா பெற்றாருக்கும் வருவதுதான். இங்கு சாரதாவுக்கு இப்போது வந்துள்ளது.
இப்பதான் பசுபதியினால் கோடு கச்சேரி என்று அலைந்து புயல் ஓய்ந்து போயிருக்கையிலே, சந்தானம் விதைத்து இப்போதுதான் அறுவடைக்கு தயாராகப் பழுத்திருக்கின்றது. சந்தைக்குப் போவதற்குத் தயாராகவும் உள்ளது.
ஆனால், கட்டார் குடும்பத்திற்கு இதனைப் பற்றி ஒருவிதமான கவலையோ அல்லது சமுதாயத்தில் முகம் கொடுப்பதற்கு எந்தவிதமான தயக்கமோ, பயமோ இல்லை. அவர்களுக்கு சந்தானத்தின் சொத்தின் பங்கு மட்டும்தான் தேவை அது கிடைத்தால், தாங்கள் தங்கள் பாட்டில் போய் விடுவோம் என்று கிறிஷ்ணா சொன்னான்தானே.
சொத்தினை வாங்கிக் கொண்டு கட்டார் குடும்பம் கட்டாருக்குப் போய் விடும். ஆனால், இங்கு சாரதா குடும்பம் இங்குதானே இருந்தாக வேண்டும். இதனால் சாரதாவின் குடும்பம் எதிர் நோக்கவுள்ள பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றது. அதெல்லாம் கட்டார் குடும்பம் ஒரு கணம் சிந்தித்தார்களா?
இந்த வீட்டினைக் கட்டவும், பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுத்து வெளிவரவும் சாரதாவின் குடும்பம் பட்ட பாடுகள் எல்லாம் நினைத்துக் கூடப் பாரக்க முடியாதகது. ஆனால், ஒருபக்கம் இடிக்கின்றது. பசுபதி தன்னால் அபகரிக்க முடியாத இந்த சொத்திலிருந்து ஒரு பங்கினையாவது பிடுங்கி எடுக்க வேண்டும் என்று போட்ட திட்டமாக இருக்குமோ? அல்லது பசுவின் மகன், றாகவினது பழிவாங்கும் படலமா இது?
சந்தானத்தின் இரண்டாவது குடும்பத்தினை வெளியில் விட்டுப் சாரதா கதவினைப் பூட்டி விட்டா. கொடைக்கானலில் இரவு செல்லச் செல்ல குளிருக்கோ பஞ்சமில்லை. இவர்கள் வெறும் வெய்யிலுக்குப் பாவிக்கும் உடுப்புடன்தான் வந்துள்ளார்கள். அதுவும் மாற்று உடுப்புகளும் இல்லாமல். குமர்ப்பிள்ளை வேறு. மூவரும் அந்த குளிரினில்தான் நின்று கொண்டிருந்தார்கள். இதிலேயும் ஒரு சந்தேகம் எழுகின்றது.
இவ்வளவு தூரம் பயணம் வரும் இந்தக் குடும்பம், பக்கத்து வீட்டிலிருந்து வருவது போல, போட்ட உடுப்புடன் வந்துள்ளார்கள் என்றால் சந்தேகம் வராதா?
அத்துடன், சென்னையிலிருந்து, கொடைக்கானலுக்கு நாள் பூராகவும் பயணம் செய்து இரவு வந்து இறங்கிய சாரதாவின் குடும்பம் எவ்வளவோ களைப்புடன் இருந்தார்கள். ஆனால், இவர்கள் கட்டாரிலிருந்து இப்பதான் வருகின்றோம் என்றால், அதுவும் ஒரு சிறு luggage ம் இல்லாமல் தனியே சொத்துப் பத்திரங்களோடே வருகின்றார்கள் அதுவும் freshஆக வந்தார்கள் என்றால் உங்களுக்கும் இது உதைக்கவில்லையா?
மனிதாபமான முறையில் விஜேய் சாராதாவிடம் கேட்டு வீட்டினுள் அவர்களைக் கூட்டி வந்தார். ஆனால், வீட்டிலுள்ள ஒருதருக்கும் இதில் விருப்பமில்லை. Hallக்குள் படுப்பதற்கு அவர்களுக்குத் தேவையானவற்றினை விஜேயும், நெவீனும் கொடுத்தார்கள்.
காலை விடிந்ததும் அதே உடைகளுடன்தான் மூவரும் இருந்தார்கள். ஒருவிதமான மாற்றுடைகள் இல்லாமல் கட்டாரிலிருந்து வந்தார்களா? அல்லது அவர்களிடம் இதை விட நல்ல வேறு உடுபுடைவைகள் இல்லையா? அப்படியான நிலையில் உள்ள குடும்பம் என்னென்று எல்லாருக்கும் கட்டாருக்கு விமானப் பயணச் சீட்டு போடுகிறேன் என்று கிருஷ்ணா சொன்னான். இவர்கள் வறுமைக் கோட்டில் உள்ளவர்களா? இல்லையா?
எல்லாவிதமான கேள்விகளுடன் சாரதாவின் குடும்பம் சென்னைக்கு விரைந்தனர். கொடைக்கானலில் இருந்தால் இரு குடும்பங்களுக்கிடையில் தர்க்கங்கள் அதிகமாகி பகைமைதான் கூடுமே தவிர ஒரு முடிவும் பண்ணவே இயலாது. ஒன்றுமே பண்ணக் கூடாதென்றுதானே கிறிஷ்ணா கோட்டிலிருந்து stay வாங்கி இருக்கின்றான். இதெல்லாம் கட்டாரில் சீவித்துக் கொண்டிருக்கும் கிறிஷ்ணாவின் குடும்பத்திற்கு என்னென்னறு இங்குள்ள சட்டங்கள் தெரியும்? இதிலிருந்து தெரிகின்றது இவர்களுக்கு சட்டத்துடனான பின்னணி ஒன்று இருக்கின்றதென்று.
ஆனால், இதெல்லாம் ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்குள் செய்ய முடியாது. இது வெகு காலமாகப் போட்ட திட்டம் மாதிரித்தான் தெரிகின்றது. அப்போ இவர்கள் போலியானவர்கள் என்று நினைப்பதற்கு, இவர்கள் கட்டாரிலிருந்து நேராக சாரதாவின் கொடைக்கானல் வீட்டிற்கே வந்தார்கள்;
முதல்முறையாக அதுவும் சந்தானம் இறந்து இவ்வளவு காலத்தின் பின்பு வருகின்றார்கள். செத்த வீட்டிற்கே வரவில்லை. அப்போதுதான் தெரியவில்லை என்றால், அவ கூப்பிடும் பசுபதி அண்ணனிடமிருந்து சந்தானம் இறந்த செய்தியுமா இவர்களுக்குப் போகவில்லை.
சரி, பின்புதான் தெரிந்தது என்றால், தெரிந்ததும் துடிச்சுப் பதைத்து வந்திருக்கலாம்தானே! அப்பவும் வரவில்லை. இப்போ வந்திருக்கின்றார்கள் என்றால், அதுவும் அவர்கள் கூறும் காரணம் இருக்கே, அதுதான், வீடு விற்கப் போகின்றீர்கள் என்று அறிந்துதான் வந்தோம், எனது பிள்ளைகளுக்கும் பங்கு இருக்கின்றதுதானே என்று கூறுவதும், இவர்கள் சந்தானத்தினை வெருட்டி வைத்திருக்கலாம் என்று ஒரு ஊகம் எழுகின்றது.
வேலை செய்ய சந்தானம் கட்டாருக்கு போயிருக்கையிலே, ஏன் அவர் அவரது சொத்துப் பத்திரங்களின் கொப்பிகளை அங்கு கொண்டு போனார். இதிலேயும் சந்தேகம் எழுகின்றது.
இவர்களோ, இங்கு சாரதாவையும், அவளது பிள்ளைகளையும், சந்தானத்தின் போட்டோவையும் பார்த்ததும் அவர்களின் கண்கள் கலங்கவே இல்லையே. மாறாக, சாரதாவின் இரண்டாவது மனைவி வந்ததும் வராததுமாக தலைவாசல் நிலையினைத்தான் தடவினாவே தவிர, பத்திரங்களுடனேயே உள்ளே பங்கு கேட்டு அதனை வாங்குவதற்கு ஆயத்துடன் வந்தார்களே ஒழிய, அட சந்தானம் வாழ்ந்த வீடல்லவா என்று ஒருவிதமான கலக்கமே இருக்கவில்லையே.
அதுமட்டுமா, என்னென்று அவர் இறந்தார்? என்ன நடந்தது அவருக்கு? என்று ஒருவிதமான கேள்விகள் ஒன்றும் அவர்கள் கேட்கவே இல்லை. ஆனால், அவர்களின் முழு நினைவும் சொத்தில் பங்கு அதைத்தான் கதைக்கின்றார்கள்.
போட்டோக்கள் உண்மையாக இருக்கலாம். ஏனென்றால், இந்தக் குடும்பத்துடன் அந்நியோன்யமாக சந்தானம் பழகி இருக்கலாம். அந்த நேரம் இவர்கள் திட்டம் போட்டு ஒவ்வொன்றாக ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக எப்படியானவற்றினைத் திரட்ட வேண்டும் என்று நீண்ட காலத் திட்டத்தினைத் தீ்ட்டி இருக்கலாம். அப்படி சேகரித்ததுதான் இந்த சான்றுகளாகவும் இருக்கலாம்.
ஆனால், சொத்துப் பத்திரங்களுக்கு கொப்பிகள் எடுப்பதற்கா இங்கு ஆட்களா இல்லை. ஏன், பசுபதியே ஒருவன் காணுமே! அவனும் போலிப் பத்திரத்தினைக் கொண்டுவந்துதானே பொலிஸையும் ஏமாற்றினான். அவனது ஆதாரத்தினையும் இதே பொலீஸ் உண்மையென நம்பியதுதானே!
இனி, இந்தச் சிக்கலினை அவிள்பதற்கு இங்கு சென்னையில் விஜேய் நின்றால்தான், அங்கு விஜயுக்குத் தெரிந்த ஆட்கள் கட்டாரிலும் இருக்கலாம், அவர்களிடம் இந்த குடும்பத்தினைப் பற்றி அறிந்தும் கொள்ளலாம்.
இன்று தெரிந்த மட்டும், சந்தானத்தின் இரண்டாவது மனைவி என்று வந்தவ, கிறிஷ்ணா, கொஞ்சம் பொறு, நாங்கள் சண்டை பிடிக்க வரவில்லை என்றுதான் சொல்லவாவே ஒழிய, வேறொன்றும் சொல்வதாக இல்லையே!
உங்கள் கருத்துக்கள் என்னென்ன என்று கூறுங்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!