posted 28th December 2025
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 18ஆம், 19ஆம், 22ஆம் திகதிகள் வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- அன்பு எப்படி என்று தெரிந்தும் குமரனின் பிரச்சினையினைத் தேடி நெவீனைச் சந்திக்கச் சென்ற விஜய். அன்புவிடம் கொம்பனிக்குப் போகும்படியும் பணித்த விஜய்.
- Outdoors ற்கு அனுப்பப்பட்ட முத்துமலரின் குடும்பம். கிறிஷ்ணாவின் பாசத்தினைப் புரியாத சாரதா குடும்பத்தினர்.
- கொம்பனிக்கு வந்த அன்பரசிடம் பிரச்சினைகளைச் சொன்னாலும், அன்பரசு எப்பதான் பிரச்சினை வரும் என்றிருப்பவனுக்கு அவனது வாய்க்கு கிடைத்த அவலாகி விட்டது.
- அன்பரசு வாடிக்கையாளர்களுக்கு பிரச்சினைகளை அறிவித்ததுமல்லாமல், மீடீயாவையும் வரச் சொல்லி விட்டான். கதை காவுவான் அன்பரசு என்றில்லாமல் கொம்பனியினைக் கவனிக்க விட்டது விஜயின் தப்புத்தானே.
- சாரதா வீட்டாரின் அடுத்தடுத்த பிரச்சினைகளினால் அலைந்து திரிந்த விஜயின் கொம்பனிக்கு வந்த கதி.
- நர்மதா ஒருவரும் இல்லாத நிலையினில் முத்துமலரின் குடும்பம் இருந்த outdoorsற்கு வந்தாள். உண்மைகளைச் சொன்னாள். தனக்கு நடந்த இருதய சத்திர சிகிச்சையினைப் பற்றியும் சொன்னாள். காவேரி – விஜேய் கல்யாணம் நடந்த விதத்தினையும் சொன்னாள்.
- விஜயின் தனிப்பட்ட பிரச்சினைகளினால் திண்டாடிய நிலையினில் கொம்பனியின் பிரச்சினை தலைதூக்கி உள்ளதால், மேலதிகமான ஊழியர்கள் விஜேயுக்குத் தேவைப்பட, கிறிஷ்ணாவினை construction engineerஆக நியமிப்பானா விஜேய்? கிறிஷ்ணாவின் திறமையினால் வெற்றி கண்ட விஜேய் construction.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 18,19,22.12.2025
பிரச்சினைகள் தலைதூக்கியதுமல்லாமல், கொம்பனியின் businessஇன் பாதிப்பு மிகவும் ஈடுசெய்ய முடியாததாக உள்ளது. வீடுகள் நேரத்திற்கு கொடுக்க வேண்டிய நிலையில் இழுபறி உண்டாகியதால், மேலதிகமான உத்தியோகத்தர்கள் விஜேயின் கொம்பனிக்குத் தேவைப்படவுள்ளது.
கொம்பனியில் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளைத் தொடங்கியுள்ளார்கள். இதனைத் தூண்டி விட்டதோ அன்பரசுதான். மீடியாவிற்கு அறிவித்து அதனையும் கொம்பனிக்கு வரவைத்ததும் அன்பரசுதான். இதெல்லாம் வருமென்று விஜேயுக்குத் தெரியாதா? காவேரிக்கும் தெரியாதா? இப்படியா கவலையீனமாக இருப்பார்கள்? அன்பரசு எப்படி கெட்டவன் என்றும், பசுபதியுடன் கூட்டு என்று கூடத் தெரியாதா? ஏன் வீட்டிலே நடந்த நர்மதாவின் பிரச்சினையினையினை ஊதிக் கெடுத்தது யாரு? அன்பரசுதானே. இதன் பிறகும் அன்பரசை கொம்பனியில் உள்ள வேலையினை கவனிக்கும் படி விஜய் விட்டது புத்திசாலித் தனம் என்று கூறிடலாமா?
இப்படி இருக்கையில், குமரனின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காரணம் தெரியாமல் தவிக்கும் கங்கா. பொய் சொல்லிச் சமாளிக்கும் விஜேய். அந்தப் பக்கமே வராமல் இருக்கும் நெவீன். விஜேயும், நெவீனும் சந்தித்தனர், குமரனைப் பற்றி அறிந்து கொள்வதற்கு. நெவீன், மலேஷியாவுக்கு குமரனைத் தேடி செல்வதற்கான திட்டத்தினை விஜயிடம் சொல்லி எல்லா ஆயத்தங்களையும் நெவீன் செய்து விட்டான்.
சிக்கனல் இல்லாத இடம், புது இடம் என்று பொய்யினைச் சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கும் விஜய்.
கொம்பனியில் இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கையிலே, பிடில் வாசித்துக் கொண்டிருந்த ஒரு மன்னனைப் போல மீசையினை முறுக்கிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், இரசித்துக் கொண்டும் நின்ற அன்பினைக் கூட அவதானிக்காமல் இருந்த விஜயும், காவேரியும்.
outdoorsஇன் வாசலினிலிருந்து உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நர்மதா. உள்ளே வர விட்டதினால் உள்ளே போய் இருந்து கொண்டு கிறிஷ்ணாவிடம் மன்னிப்பும் கேட்டாள். பணத்திற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் முத்துமலரின் குடும்பம். அவ்வளவு கஷ்டத்திலும், இவ்வளவு பிரச்சினைகளினுள்ளும் நர்மதாவை இன்முகம் காட்டி அவளுக்குச் சாப்பாடவும் கொடுத்தது. காவேரியின் வீட்டின் கஷ்டத்தினையும் முத்துமலரின் குடும்பம் உணர்ந்தார்கள். #
outdoorsஇனை விட்டு போகலாம் என்றால், போவதற்கு ஒரு இடமும் இல்லையே அவர்களுக்கு. என்றாலும், கிறிஷ்ணாவின் குடும்பம் வெளிக்கிட்டுப் போகலாம், ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல். இதனை காவேரியும், விஜேயும் காணலாம். காரணத்தினையும் கேட்கலாம். இருவரும் இக் குடும்பத்தில் இரங்கினார்கள். மீண்டும் அழைத்து வந்தார்கள். கிறிஷ்ணா ஒரு engineerஆதலால் அவனுக்கு வேலை ஒன்று தரலாம் என்றும், தங்கள் கொம்பனிப் பிரச்சினாயினைச் சரியாக்க வேண்டும் என்றும் விஜேய் கேட்டுக் கொண்டதற்கிணங்க கிறிஷ்ணா வேலையினைத் தொடங்கி வெற்றியும் காண்கின்றான்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!