posted 18th October 2025
16- 17.10.2025
இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 16ஆம், 17ஆம் திகதி சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Review & Analysisனில்;
- காவேரி உதாசீனப்படுத்திய விஜேயின் பாட்டி.
- பாட்டி தனது அடுத்த நாடகத்தினை தொடங்கியதாகத் தெரிகின்றது.
- இதில் விஜயும் சேர்ந்துள்ளானா?
- சாரதாவின் குடும்பம் பழிவாங்கப் படுகின்றதா? காவேரியும் அடங்குவாளா இதற்கு.
- விஜேய் தனது பிள்ளையினையும், வெண்ணிலாவுடனும் வாழ்க்கையினைத் தொடங்குவதாக நினைக்கத் தோன்றுகின்றது.
- Contract கல்யாணமானது உண்மையானதாக மாற்றப்படவில்லை – இது காவேரியின் வாழ்க்கையின் அஸ்தமனமா?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 16 - 17.10.2025
இதற்குத்தான் விஜய் காவேரியை தனது வீட்டிற்கு வர வேண்டாம் என்று மீண்டும், மீண்டும் சொன்னான். கேட்டாளா காவேரி. ஏதோ தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும், தான் போனால்தான் கல்யாணிப்பாட்டிக்கு சுகம் வரும் என்ற நினைப்பு அவளுக்கு. ஆனால், காவேரியின் நல்ல மனத்தினை அவளது சகோதரிகளே புரிந்து கொள்ளவில்லையே. கல்யாணிப்பாட்டி யாரோ அல்லவா காவேரிக்கு, புரிந்திடுவாவா? அது ஒருகாலும் நடக்காது.
விஜேய் கல்யாணிப்பாட்டியைப் பார்த்து விட்டு விடியற்காலை 2.30மணிக்கு வீடு திரும்பி வருகையிலே காவேரி விஜேயை எதிர் பார்த்து துயிலாமல் விளித்திருந்தாள்.
பாட்டியின் நிலைமையினைச் சொன்னான் விஜய். அதுமட்டுமல்லாமல், தான் போயிருக்கையிலும் பாட்டிக்கு தலைச் சுற்று வந்தது என்றும், தானும் அவவை வைத்தியாசாலைக்கு கூட்டிச் சென்று வீட்டே கொணர்ந்தாகவும் கவலைப்பட்டான் விஜய். அத்துடன், எப்போது பிள்ளை பிறக்கும் என்றும், எப்போது அந்தப் பிள்ளையை தான் தூக்கி வைத்திருக்கலாம் என்றும் மிகுந்த கவலை கொண்டதாகவும் விஜய் சொன்னான்.
இன்னமும் இருக்கு சொல்லுவதற்கு, விஜய் தன் பிள்ளையுடன் கதைக்கின்றான், நீ எப்போது பிறந்து வருவாய் என்று பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், நீ பிறந்ததும், நீ, நான், பாட்டி அனைவரும் ஒன்றாக இருக்கலாம் என்றும் விஜய், காவேரியை விட்டு விட்டுச் சொன்னதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதோ தெரியவில்லை. எனக்கு இருக்கு. இது காவேரிக்கு விளங்கவில்லை.
ஏன் விஜய் காவேரியை விட்டு விட்டு மற்றவர்களின் பெயரினைச் சொன்னான். இதில், விஜயும் காவேரியின் வாழ்க்கையில் திட்டமிட்டு விளையாடுகின்றானா என்று சந்தேகம் வருகின்றது. அதாவது, விஜயும் நடிக்கின்றானா? பிள்ளை பிறக்கும் மட்டும், காவேரியுடனும், காவேரியின் குடும்பத்துடனும் நல்ல விதமாகப் பழகி இறுதியில் பிள்ளையுடன் காவேரியை வி்ட்டு விட்டு தனது வீ்ட்டிற்குப் போய் விடுவானோ என்றும் இப்போது தோன்றுகின்றது.
பாட்டிக்கு விஜய் இருக்கையிலே ஒன்றும் தெரியவில்லையாம். ஆனால், விஜய் இல்லாத நேரம், அவவின் அம்மா வந்ததாகவும், வேறு யார் யாரோவெல்லாம் வந்ததாகவும், ஆகவே, விஜய் நீ என்னை விட்டு மட்டும் போய் விடாதே, எனக்குப் பயமாக இருக்கின்றது என்று விஜேயுக்குப் பூட்டு ஒன்றினைப் போட்டா.
குளிசைகளால் அவற்றி்ன் பகுதி விளைவுகள் என்று ஒரு கூற்றினை றாதாவை வைத்துச் சொல்ல வைத்தா. இதில், தாத்தாவுக்கு இருவரும் திட்டம் போட்டு நடிக்கின்றார்கள் என்பது பற்றித் தெரியுமா என்று ஒன்றும் தெரியவில்லை. பேரன் விஜயையே பாட்டிக்குத் தெரியவில்லையாம். ஆனால், சொன்னதும் விஜயை ஞாபகத்திற்கு வந்து விட்டதாம்.
ஆனால், காவேரி கிட்ட வந்ததும், இவ யாரு என்று ஒன்றுமே தனக்குத் தெரியாத மாதிரி நடித்ததாக உணர முடிகின்றது. அப்போ காவேரி தன்னை நான்தான் பாட்டி, காவேரி, விஜயின் மனைவி என்று அறிமுகப்படுத்தியதும், உடனே பாட்டி நீதான் எனது பேரனை என்னிடம் இருந்து பிரித்துக் கொண்டு போனவள் என்று மட்டும் ஞாபகம் வந்து விட்டதோ? உடனே, போ என்று துரத்துவதிலிருந்து தெரியவில்லையா பாட்டி சுப்பராக நடிக்கின்றா என்று.
ஆனால், காவேரி என்று சொல்லுகையில் தெரியவில்லை, விஜேயின் மனைவி என்று சொல்லுகையில் மட்டும், விஜேயைத் தன்னிடம் இருந்து பிரித்துக் கொண்டு போனனி என்று மட்டும் அவவுக்கு ஞாபகமானது உடனே வந்துவிட்டது.
இதை நம்புகின்றான் விஜேய். அல்லது நம்புகிற மாதிரி அவனும் நடிக்கின்றானோ தெரியவில்லை.
கங்காவிற்கு குமரன் கோள் எடுத்தான். அவவும் ஒருநாளும் கதைக்க மாட்டேன் என்று கோவித்தவள், இப்போ கதைத்தாவாம். இப்படித்தான் குடம்பத்திற்கிடையிலான சண்டை. இவ்வாறான கணவன் – மனைவுக்கிடையிலான சண்டையானது கானல் நீராக இருக்க வேண்டும். வச்சீரம் மாதிரி இறுக்கி இருக்கக் கூடாது.
காவேரி இடிந்து போனாள். விஜயும், தாத்தாவும் ஆறுதல் சொல்வார்கள். ஆனால், இதெல்லாம் உண்மையா என்று சந்தேகம் எனக்கு வந்து விட்டது.
அத்துடன், விஜேய் மறுநாள் தனது வீட்டிற்கு போக வெளிக்கிடுகையில், காவேரியும்தானே வெளிக்கிட்டாள். அப்போது விஜய் மீண்டும் மீண்டும் தடுத்தான். ஆனால் காவேரி விடுவதாக இல்லை. இந்தப் பேச்சு வார்த்தையில் விஜய் சொன்னதாவது, நான் உனக்காகவா வந்தேன் இங்கு என்றான். இதுவும் காவேரிக்கு விளங்கவில்லை. அப்போ விஜய் காவேரிக்காக வரவி்ல்லை. தனது பிள்ளை, அதாவது, காவேரியின் வயிற்றில் உள்ள தனது பிள்ளைக்காகத்தான் என்றுதானே அர்த்தமாகின்றது.
காவேரி – விஜய் வாழ்க்கையானது, மலை உச்சியில் உள்ளவன் விஜய், ஆனால், அந்த மலையின் நிழலினைக் கூடத் தொடத் தகுதியில்லாதவளாகக் காவேரி.
காவேரியின் குடும்பம் எந்தளவிற்கு விஜேயைப் பிளிந்தெடுத்தார்கள். அதன் வலி விஜேயுக்கு இலகுவாக மாறிருமா? அதற்குப் பழி வாங்கும் படலமா என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!