posted 16th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- 5ஆவது மாத scan கங்காவுக்கும், காவேரிக்கும் செய்ய வேண்டிய கட்டாயம். இதற்கு சாரதா, காவேரியின் பிள்ளைக்கு ஒன்றும் ஆகக் கூடாதென்று மட்டும் கோவிலில் நேத்தி வைத்ததும், கங்காவுக்கு வைக்காததும் சாரதாவின் பிழையெனப்படுகின்றது.
- அங்க பிரதிஷ்டையினைச் செய்தா சாரதா. தன்னைத் தனிமைப்படுத்தியதாக கங்காவின் ஓரவஞ்சம் என்ற நினைவு.
- தாயானவள் தன் பிள்ளகளை ஒரே மாதிரித்தானே பார்க்க வேண்டும் என்று ஜமூனாவிடம் புலம்பும் கங்கா. ஆதரித்து வாக்களித்த ஜமூனா.
- தானும், காவேரியும் இருப்பதனால் வீட்டுச் செலவினில் பங்கு கொள்ள வேண்டுமென்பதில் விஜேயின் கருத்து.
- ஜமூனாவின் தற்கொலை முயற்சியால் நெவீனின் நியாயத்தினையும், விருப்பத்தினையும் ஒன்றும் கேட்காமல் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தனை தனது பிழை என்று கவலையுடன் காவேரியிடம் புலம்பிய விஜேய்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 14 - 15.10.2025
அங்கப்பிரதிஷ்டை செய்து வீடு திரும்பிய சாரதா, தான் ஏன் காவேரிக்காக மட்டும் நேர்த்தி வைத்தவ என்று கங்காவிற்குச் சொல்லாததையிட்டு கோவப்படும் கங்கா. இதனை ஜமூனாவிடம் சொன்னால் ஆறுதலான இரண்டு வார்த்தைகளாவது அவளிடம் இருந்து கிடைக்கும் என்று நினைத்தாள் கங்கா. ஆனால், ஜமூனாவோ கங்காவின் ஆதங்கத்தினை ஊதித் பெருப்பித்து விட்டாள்.
இந்த மாதிரி, வீட்டில் ஒவ்வொரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கும். அதனை எல்லாருக்கும் சொல்லி கொண்டிருக்க முடியாதல்லவா? ஆனால், பிள்ளைகள் அதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதேபோலத்தான், பெற்றாரும், ஒரு பிள்ளைக்கு ஒன்றினைச் செய்து, மற்றப் பிள்ளையினைப் புறக்கணித்தால், வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் உண்டு.
அதுமட்டுமல்லாமல், விஜேய் காவேரியுடன் மிகவும் அன்பாக இருப்பது கங்காவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதைத்தான் சொல்லுவார்கள், இரண்டு சேலைகள் பக்கத்துப் பக்கத்திலே காய விட முடியாது என்று.
ஏற்கனவே குமரனிடம் கங்கா சொன்னாள், இந்த வீட்டு வாடகையினைத் தான்தான் கட்டுவேன் என்றும், காவேரியும், விஜேயும் தனது காசில்தான் இருக்க வேண்டும் என்றும். இதைத் திரும்பச் சொல்வதற்கு குமரன்தான் இப்போ இல்லையே! இப்போது காவேரி தங்களது பங்கினை சாரதாவிடம் கொடுத்தால் என்ன நடக்கும்? அதற்கும் சண்டை ஒன்று உருவாகுமோ என்று சிந்தையில் ஓடுகின்றது.
இது சாதாரணமாக ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைதான். ஆனால், செலவானது பெற்றோரின் பொறுப்பென்றால் குடும்பம் அமைதியாக ஓடும். இல்லாவிட்டால் இப்போ ஆரம்பிக்கும் சாரதா குடும்பம் மாதிரித்தான் இருக்கும்.
கங்காவின் தாழ்வு மனப்பான்மை, எப்படியென்றாலும் தான்தான் இவர்களுக்கும் படி அளப்பேன் என்றும், அவர்களின் ஒரு சதத்திற்கும் தான் கடன் காறியாகவோ, கடமைப்பட்டவளாகவோ இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்ற நினைவுகள் அவளுக்கு.
பெருந்தன்மையான குணமும், தாயாள சிந்தனையும் காவேரிக்கு, ஆனால், கங்காவுக்கோ சரி எதிர்மாறாக இருக்கின்றதே! இதைவிட ஜமூனாவைச் சொல்லவா வேண்டும்.
குமரன் ஜமூனாவிடம் தான் வரும்போது கலெக்டர் ஆகி விடுவாய்தானே என்று கேட்டதற்கு, ஜமூனாவோ அவ்வளவு சீக்கிரமாக வர முடியாது என்று சொன்னது உண்மையா? அல்லது குமரன் தான் திரும்பி வர பல வருடங்கள் ஆகும் என்ற திட்டத்தில் குமரன் சொன்னானா தெரியவில்லை.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!