posted 14th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- குமரன் எல்லா ஒழுங்குகளையும் முடித்துக் கொண்டு இறுதியாகத்தான் கங்காவிடம் சொன்னான். கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு வீட்டில் எல்லாரும் இருந்தாலும், சந்தோஷமாக இருக்காது. ஆனால், கணவன் மட்டும் இருந்தாலே காணும் உலகமே தன்னுடன் உள்ளதாக உணருவாள்.
- குமரன் நகை வாங்கிக் கொடுத்தான். அதில் சந்தோஷம் இல்லை என்று கங்கா சொல்லவே இல்லையே! ஆனால், இதெல்லாம் அவள் கேட்டாளா? இல்லயே!
- எதற்கெடுத்தாலும் பேசுகின்றாளா கங்கா? இல்லையே! குடும்பத்தில் சண்டை வரும்தான். அதற்காக, ஒரு மனைவியை விட்டு விட்டு அதுவும் கர்ப்பிணியான மனைவியினை விட்டு தூரதேசம் குமரன் போகலாமா?
- கடையில் வந்து சந்தித்தாள் கங்கா. அழுது விட்டாள். மனம் உருகி அழுதாள். அந்த நேரம் கங்காவிடம் இப்படி ஒரு நல்ல வேலை வாய்ப்பு மலேசியாவில் வந்திருக்கு என்ன செய்யலாம்? நீயே சொல்லு என்று கேட்டிருந்தால், அவள் சொல்லியிருப்பாள், போங்க அல்லது போகாதீங்கள் என்று.
- இதொன்றும் சொல்லாத குமரன், முடிவெடுத்த பின்பு மனைவிக்குச் சொல்வதென்றால், அவளுக்கு இந்த திடீரென்ற பிரிவினைத் தாங்க முடியுமா? பிள்ளை வயிற்றில் இருப்பதுவும் மன அழுத்தத்தினைக் கொடுக்கையிலே, கணவன் மனைவியை விட்டு வெளிநாட்டிற்குப் போவதென்பது எவ்வளவு மன உழைச்சலாக இருக்கும்? அதுவும் மனவருத்தத்துடன் வெளிக்கிடும்போது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 13.10.2025
பயணம் வெளிக்கிடும் போதே கங்கா போகாதீங்கள் என்று தடுத்தா. ஆனால், குமரன் கேட்கவில்லை. பக்குவமாகச் சொன்னான்தான். ஆனால், குமரன் மலேசியா போவதென்று முடிவெடுத்தாயிற்று. எல்லா அயத்தங்களும் செய்தாயிற்று. இனிப் போவதுதான் பாக்கி. இதுதான் ஒரு குடும்பத்தின் அழகா? அதுவும் மனைவியிடம் இப்படித்தானா சொல்வது?
இதுமட்டுமல்லாமல், குமரன் மனவருத்தத்துடன்தான் கங்காவை விட்டு கொஞ்சநாள் அமைதிக்காகச் செல்வதாகச் சொல்கையிலே, உங்களுக்கு முடிவெடுக்கத் தெரியும் என்ற தட்டிக் கொடுத்தது விஜேயின் தப்பு. இது சரியாக வரும், எப்போது என்றால், குடும்பம் சந்தோஷமாக இருக்கையில் வேலை வாய்ப்போ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பம் என்றால் இது பொருந்தும். ஆனால், இங்கு அதற்குரிய சூழ்நிலைதான் கங்கா-குமரன் குடும்பத்தில் இல்லையே!
ஆனால், ஒன்று சொல்லி இருக்கலாம் விஜய், கங்காவுடன் சந்தோஷமாகக் கதைத்து, அவவின் பூரண சம்மதத்துடன் வெளிநாடு வெளிக்கிடும்படி. இப்போதெல்லாம், நீங்கள் உங்கள் விருப்பத்தின் படி செய்யுங்கள் என்று சொல்வதுதான் அனேகமானோரின் வழக்காமாய் போய்வி்ட்டது இப்போ.
கோள் எடுக்கிறேன் கங்கா என்று குமரன் சொன்னாலும், கங்கா நான் கதைதக்க மாட்டேன், கதைக்கவே மாட்டேன் என்று சொன்னதன் அர்த்தம் குமரனுக்கு விளங்கவில்லை. அதாவது, இப்படிச் சொன்னாலாவது குமரன் பயணம் போகாமல், பயணத்தினை இரத்துச் செய்யலாம் என்ற ஒரு கடைசியான முயற்சிதான். ஆனால், குமரன் அதையும் கேட்கவில்லை. பயணம் புறப்பட்டு விட்டான்.
வழி அனுப்புவதற்கு கங்கா வெளியில் வரவேயில்லை. அதனைக் கோபம் என்று எடுக்க முடியாது. ஆனால், இந்த ஒதுக்கமாது, கவலை, துக்கம், அவளுக்கே தெரியாத இனம் புரியாத தன்னைத் தானே தனிமைப்படுத்தும் ஒரு மனித இயல்பு என்றும் சொல்லலாம். அதாவது, தாங்காத துயரத்தினால் ஏற்பட்டதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இங்கு காவேரியை விஜய் தனது உள்ளங்கையினில் வைத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிப்பது கங்காவிற்கு வேதனையாக இருப்பதாகத் தெரிகின்றது.
5ஆவது மாத கிளினிக்கிற்குப் போக வேண்டும். புருஷனுடன்தான் வரவேண்டும் என்று டாக்டரின் அறிவிப்பு. ஆனால், இன்றுதான் அந்த கிளினிக், கங்கா புருஷன் இல்லாமல் தனியாகத்தான் போக வேண்டி சூழ்நிலையாகி விட்டது. அதுவும் கங்காவிற்குக் கவலையினைத் தரும்தானே.
இந்த scanதான் முக்கியமானது. அதாவது, கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கியமாக இருந்தாலும், காவேரிக்கு இது மிகவும் முக்கியம். ஆதாவது, விஜயுக்குத் தெரிந்தது, காவேரிக்கு அவ்வளவாகத் தெரியாது. அப்படிய என்றில்லை இதனைக் காவேரி மிகவும் seriousஆக எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
குமரன் airportஐ அடைந்ததும் வீ்ட்டிற்குக் கோள் எடுத்தான். ஆனால், கங்காவோ கதைக்கவில்லை. அவள் ஒதுங்கி அறையினுள் அடைக்கலமாக இருந்தாள். குமரன் சந்தோஷமாக கங்காவுடன் கதைத்து வெளிக்கிட்டிருந்தால் இந்தப் பிரிவு கங்காவை அவ்வளவுக்குத் தாக்கி இருக்காது. அப்படி இருந்தாலும் இருக்கக்கூடிய தாக்கமானது அவ்வளவுக்கு வலியினைக் கொடுத்திருக்காது. ஆனால், இது அப்படியா இல்லையே!
உண்மையாகக் குமரன் 2 அல்லது 3 மாதங்களில் வந்து விடுவேன் என்று சொன்னது உண்மையா என்று ஒரு கேள்வியாக இருக்கின்றது. அது என்னவோ வருஷக் கணக்குகள் செல்லும் என்பதுதான் எனது ஊகம்.
குமரனுக்கோ கங்கா சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று உள் மனதினில் நினைத்தாலும், தான் ஒன்றுக்கும் இலாயக்கும் இல்லை என்று மீண்டும், மீண்டும் சொல்லப்பட்ட வார்த்தை அவனைக் கொன்று கொண்டு இருக்கின்றது.
இந்த வார்த்தையின் தாக்கமானது ஒருவனை ஒன்றும் இல்லாத ஒரு முடமாக்கியும் விடக்கூடிய சமயத்தில், அதைத் தாண்டி குமரன் உற்சாகமாக இருப்பது என்பது ஓரு அதாரணமான விஷயம்தான்.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!