posted 10th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- காரணம் ஒன்றும் சொல்லாமல் காவேரிக்கு எங்கள் வீட்டினைக் கொடுக்க மாட்டோம் என்று அடம்பிடித்ததனால், சாரதாவின் கோபத்திற்கு ஆளான கங்காவும், ஜமூனாவும்.
- நீங்கள் இருவரும் பேசாமல் பதிவு அலுவலகத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டு விட்டு உங்களுக்குரிய பணத்தை வாங்கிச் செல்லுங்கள், என்று சாரதா, கங்காவிற்கும், ஜமூனாவிற்கும் கட்டளை போட்டாள்.
- காவேரிதான் கொடைக்கானல் வீட்டினை வாங்குவதனால் கங்காவும், ஜமூனாவும் வீட்டின் மதிப்பினைக் கூட்டியும் அதற்கும் சம்மதித்த காவேரி. அதன் பிறகும் ஒத்துக் கொள்ளாத கங்காவும், ஜமூனாவும்.
- குமரன் வெளிநாடு போகாமல் இருந்திருந்தால் அவனால் நிம்மதியாக இங்கு கங்காவுடன் இருக்கத்தான் முடியுமா? வாழத்தான் முடியுமா? அல்லது கங்காவிடம் தான் வெளிநாடு போவது என்று கலந்தாலோசித்தால் கங்கா விட்டு விடுவாவா? இல்லையே!
- நெவீன் காசு கேட்காத போதும், ஜமூனா கொடைக்கானல் வீட்டின் பங்கினால் நீங்கள் உங்கள் business இனைத் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்று ஜமூனா சொன்னதினை மறுத்த நெவீன். இதனைக் கேட்டதும் ஒன்றும் விளங்காமல் திகைத்துப் போன கங்கா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 10.11.2025
பொறாமை என்பது எதற்கு வரும், என்னத்திற்காக வரும், ஏன் வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், வரும். அதனை ஒருநாளும் நிவர்த்தி செய்யவே முடியாது. அது, ஒரு சூறாவழியினை உருவாக்கி வாழ்க்கையினை உருக்குலைத்து விடும்.
காவேரியின் மேலே அவ்வளவிற்கு கங்காவிற்கும், ஜமூனாவிற்கும் ஏன்தான் பொறாமை? இதனை என்னத்திற்கு என்று புரியாமல் சமாதானப் படுத்த முயலும் சாரதாவும், பாட்டியும்.
குடும்பமாக இரு வாகனங்களில் கொடைக்கானலுக்குப் பயணமான விஜேய், சாரதா குடும்பங்கள். இந்தப் பயணம் வீட்டினை விற்பதற்காக என்பது அவர்களின் பயணத்தின் போது இருந்த கதைகளிலிருந்து தெரிகின்றது. தூரப் பயணமாதலால் – களைப்புடன் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். ஆனால், எதிர்பாராத வியப்பானது தலைவாசலில் வந்து நின்றதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாரதா குடும்பம்.
வீட்டினை விற்பதாக அறிந்த சந்தானத்தின் சகோதரி குடும்பமாக வந்து நின்ற நிலையினைப் பார்த்தால், அவவும் பங்கிற்கு வந்தது போன்றுதான் தெரிகின்றது. எல்லாம் பணத்தினை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையைத்தான் எங்கும் காணலாம்.
இங்கு பிரச்சினையானது மேலும் வர வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகின்றது. ஏனென்றால், சந்தானத்தின் இந்த கொடைக்கானல் வீடானது இன்னமும் அவரது பெயரில்தான் இருக்கின்றது. அதனை சந்தானம் தனது மனைவி சாரதாவிற்கும் சேர்த்து எழுதி இருந்தால், சந்தானத்தின் சகோதரி இப்போ இங்கு குடும்பத்துடன் வந்திருக்க மாட்டா. ஆனால், இந்த வீடு சந்தானத்தின் பெயரில் மட்டம்தான் இன்னமும் இருக்கின்றது என்பதனை வீட்டிலே வைத்து கங்காவிற்கும், ஜமூனாவிற்கும் சொன்னதினை இவர்கள் மெதுவாக சந்தானத்தின் சகோதரி்க்குச் சொல்லி இருக்கலாம்.
காவேரி இந்த வீட்டினை வாங்கினால், அங்கு போய் நாங்கள் எல்லாரும் நிற்கலாம், எங்கள் வீட்டின் ஞாபகம் அப்படியே இருக்கும். ஆனால், வேறு யாருக்கும் விற்றால், ஒருதருக்குமே அந்த வீட்டினில் உரிமை இருக்காது. போகவும் முடியாது. இந்த இடத்தில் காவேரி மாதிரி ஒரு சகோதரி இருக்காதா என்று பல பேர் இந்தப் படைப்பினை பார்க்கையில், வெளியில் கூடச் சொல்ல முடியாமல் மனதினுள் ஏங்குவது எனக்கு விளங்குகின்றது.
கொஞ்சமும் விளக்கம் இல்லாமல், சொத்திற்காக சகோதரியை எதிர்த்தி நிற்கும் உடன் பிறப்புகள். காவேரியின் பணிவுத் தன்மையினை பெலவீனமாகப் பயன்படுத்துவதே இவர்களின் வேலையாகப் போய் விட்டது. ஒன்றுக்குமே கங்காவும், ஜமூனாவும் ஒத்து வராததினால், சாரதா 4 பிள்ளைகளையும் ஒன்றாக வரச் சொல்லி தனதும், மாமியாரினதும் முடிவினைச் சொல்ல வேண்டியதாயிற்கு.
ஒற்றுமையாக இருந்த குடும்பம் ஒரு சொத்துக்காக அடிச்சுப் பிச்சுக் கொண்டிருக்கும் சகோதரங்கள். வீடாக, ஒரு பொருளாக இருக்கையிலே ஒருவரும் வருகை தரவில்லை. ஆனால், விற்கப் போகும் போது பணத்திற்காக எங்கேயோ இருந்தெல்லாம் ஒரு party வந்துள்ளது இப்போ. இன்னமும் யார் யார் எல்லாம் வர இருக்கின்றார்களோ தெரியாது. அது மட்டுமா, யார், யாரெல்லாம் பொய் ஆவணங்களைக் கொண்டு வர இருக்கின்றார்களோ?
இதெல்லாம், கங்காவின் வேலையாகத்தான் இருக்கும். ஆக மொத்தம் இந்த வீடு காவேரிக்குப் போகவே கூடாதென்றும், காவேரி சின்னா பின்னமாகப் போக வேண்டும் என்பதுதான் கங்காவின் விருப்பமும் கூட. இதற்கு ஜமூனாவும் ஒத்து ஓதிக் கொண்டு கங்காவுடன் நிற்கின்றாள். நர்மதாவை கங்கா என்ன சொல்லி மிரட்டப் போகின்றாளோ?
உங்கள் கருத்துக்கள் என்னென்ன என்று கூறுங்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!