posted 12th October 2025
இந்த Review & Analysisனில்;
- இது குடும்பம். ஒருவருக்கொருவர் adjust பண்ண வேண்டும்.
- கங்கா உன்னை நம்பி கழுத்தை நீட்டியவள். அதற்காக அவள் உரிமை குமரா உன்னுடன் சண்டை போடுவதற்கு.
- உன் மேல் உள்ள அக்கறையில்தான் கத்துகின்றாள் என்பதைத்தன்னும் புரியாத குமரன்.
குமாரா நீ உரிமையைக் கொடுத்துப்பார் – அவள் உனக்காக உயிர் கொடுப்பாள், அதற்று ஒரு செக்கனும் யோசிக்க மாட்டாள். அவள்தான் பெண், மனைவி.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- பசுபதியின் ஆட்டம் ஆரம்பமா? பசுபதியின் செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் விஜேயுக்கு.
- குடும்பத்தினை விட்டு கொஞ்சம் விலகி இருக்கலாம் என்று குமரனின் திடீர் முடிவு.
- தொடர்ச்சியான மன உழைச்சலினால் வேதனையின் எல்லையினைத் தாண்டியதால் மனமுடைந்த குமரன், நாட்டை விட்டு, வீட்டை விட்டு கொஞ்சம் விலகுவதற்கு பணம்தான் தன் குடும்பத்திற்கு முக்கியம் என்றுணர்ந்தவனாய்.
- உண்மையினை சகலன்களுடன் பகிர்ந்து கொண்டு விடைபெறும் குமரன்.
- வாழ்க்கையில் விரிசலுக்கு பணம்தான் முக்கியம் என்பதனால் அன்பிற்கு இடமில்லாத நிலையில் அல்லாடும் குமரன் – கங்கா குடும்பம்.
- மனதினில் கவலையினை மூடை மூடையாகத் தேக்கி வைத்துக் கொண்டிருக்கும் குமரன் அனைவரையும் சந்தோஷத்திற்குள்ளாக்கிப் பிரிகின்றான். இதுதான் அவன் தூங்கலாம் என்று அவனை அறியாமல் சொன்ன வேதாந்தமா?
- ஆண்களுக்கும் மனமுண்டு – ஆனால் எப்பவும் திறந்திருக்காது உண்மையினைப் பார்ப்பதற்கும் உணருவதற்கும். இது வாழ்க்கையின் பாடமா? அல்லது காண்டா?
- ஆனால், பெண்ணானவள் கணவனை மட்டுமே நம்பி வாழக் கழுத்தினை நீட்டுபவள். அவளது உணர்வுகளையும் புருஷனாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 10.10.2025
வளைகாப்பிலும், அதன் பின்பும் ஒருதரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று இன்முகத்துடன் கதைத்துக் கொண்டிருக்கும் குமரனின் அச்சிரிப்பில் அர்த்தம் உள்ளது என்று கண்டுபிடித்த விஜேய்.
ஆண்களின் எல்லாச் சிரிப்புகளின் பின்னால் அவனின் அடுத்த வாழ்க்கையின் அத்தியாயம் ஒன்று இருக்குமென்று புரிந்து கொண்டால் வாழ்க்கை புனிதமாக இருக்கும். இல்லையேல், புரியாத வாழ்க்கையானது இனம் தெரியாமல் மறையும். இதில் நான் குறிப்பிடுவது எல்லாவற்றையும்தான்.
சாரதாவின் கணவன், சந்தானமும் வீட்டை விட்டு வெளிநாடு சென்று உழைத்துக் கழைத்ததை எல்லாம் கொள்ளை அடித்து நடுத்தெருவில் விட்ட பசுபதியின் கணக்கு இன்னமும் முடியவில்லை. அத்துடன், சந்தானம் ஒரு பிள்ளைகளின் பிறப்புகளுக்கும் சாரதாவுடன் இருக்கவில்லை. அதே வழியினை பின்பற்ற முடிவு செய்தது போல குமரனின் வாழ்க்கை அமையப் போகின்றதோ!
எப்படிக் கதைப்பது என்று தெரியாத கங்கா. எப்பவும் கடித்துக் கொண்டிருந்தால் குமரனும் என்ன செய்வான்? கங்கா கத்திக் கதைப்பதற்குக் காரணம் குமரன்தான் – அத்துடன் குமரன் அமைதியாக இருப்பதற்குக் காரணம் கங்காதான். இந்த பிணக்குகளை இவர்களால் தீர்க்கவே முடியாது. இதனை சாரதாவோ அல்லது விஜயோவால்தான் முடியும். ஆனால், விஜேயைக் கண்டால் கங்காவிற்குப் பிடிக்காதே! அப்போ எப்படித்தான் இந்த விளங்காத்தன்மையினை உடைப்பது? குடும்பம் உடைவதற்கு அதாவது தற்காலிகமாக இல்லையேல் நிரந்தரமாக உடைவதற்கு சந்தர்ப்பம் உண்டு.
காவேரி றோட்டிலே நின்றதே பிழை. அதுவும் போணை நோண்டிக் கொண்டிருந்தது அதைவிடப் பிழை. அவவின் நினைப்பு எல்லாப் பிரச்சனைகளும் முடிந்தாயிற்று. பசுபதியால் அல்லது றாகாவால் எப்பவாவது பிரச்சனை வரலாம் என்று கண்ணுக்குள்ளே எண்ணை விட்டு அவதானமாகவல்லவா இருக்க வேண்டும். எப்பவும் விஜேய் பின்னாலே நிற்க முடியாதல்லவா? இதனைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எப்பவும் காவேரி.
இத்தனைக்கும் பசுவினால் அடித்துத் தூக்கி இருக்கலாம் காவேரியை. அவன் அடிக்கவில்லை ஒரு பயம் காட்டியது போலத்தான் இருக்கின்றது. அல்லது விஜேய் காவேரியை இழுத்ததனால் காவேரி தப்பினாளோ தெரியாது. கொஞ்சம் miss ஆகிவிட்டது. ஆனால், tract பண்ணி ஊகித்துக் கொண்டான் விஜேய். பசுபதியின் ஜீப்பினை அடையாளம் கண்டு கொண்டான் விஜேய். இதனால், விஜய் றாகினியைக் குறி வைப்பானா? ஏனென்றால், பசு குறி வைத்தது அவன் வாழ்க்கையை, காவேரியை.
குமரனும் தான் வெளி நாட்டிற்குப் போகப் போகின்றேன் என்று கங்காவிடம் சொல்லாதது பிழைதான். முன்புதான் கங்கா கோபப் பட்டதற்கு தனக்கு மாமா என்ன செய்கின்றார், எங்கே போய் விட்டார் என்ற ஒன்றும் தெரியாது என்று மீண்டும், மீண்டும் சொன்னாள்தானே. அதைக் கூட ஒருதராலும் உணர முடியாதது வீட்டிலுள்ள அனைவரின் பிழைதானே.
குமரனுக்குக் கோபம்தான், மனவருத்தம்தான். ஏன் கங்காவிற்கும் மனவருத்தம்தான். அது கோபமாக வெளிவந்தது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்தாள், கங்கா. அதிலிருந்து தெரிகின்றதுதானே அவளுக்கு குமரனின் மேலே அன்பு இருக்கின்றது என்று. அவள் திரும்பியும் சொன்னாள், என்ன விருப்பம் என்று கேட்டதற்கு ஒட்டியாணம் என்று சொன்னது தப்பா? ஆனால் கங்கா அதுதான் வேண்டும் என்று கேட்கவில்லையே! தனது விருப்பத்தினைக் கூடச் சொல்லுவதற்குக் கங்காவிற்கு சுதந்திரம் இல்லையா. அதற்காக, சின்னப்பிள்ளை போல மிட்டாய் வேண்டும் என்று அழுது அடம்பிடித்தாளா, கங்கா? இல்லையே! சொல்லாததுதான் பிரச்சனை என்று, இது கூட குமரனுக்கு விளங்கவில்லையா?
வெளிநாட்டு வேலை வாய்ப்பினை முடிவெடுத்து விட்டு கடைசியாக வந்து தன் முடிவினைச் சொன்னால் கங்கா மனைவியாக இருக்கத் தேவையில்லையே! கங்கா கத்துவாள்தான், ஏன் கத்துகின்றாள் என்று யோசிக்கவும் தெரியாதா குமரனுக்கு. சரி, அவள் கத்தட்டுமே! இதையும் சொல்லுவோம். நீதான் பொறுமைசாலி என்றால், பொறுமையாகச் சொல்லித்தான்பாரன், கங்காவிடம். விளங்கப்படுத்தலாம்தானே!
கங்காவிற்கு தான் அதை உடுத்தி, அந்த நகை போட்டு, அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் என்று ஆசைப்படத்தானே செய்வாள். அவளும் ஒரு சாதாரண பெண்தானே! அதில் என்ன தப்பு இருக்கு? அதற்காக முண்டம் மாதிரி ஆண்கள் தங்கள் இஷ்டத்திற்கு செய்யலாம் என்றால் அது தவறு.
உனக்கு இந்த வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது என்று நீ என்ன செய்திருக்க வேண்டும். ஒரு நிமிஷம் கங்காவுடன் அதைக் கதைத்திருக்கலாம் அல்லவா? கங்கா கடைக்கு வந்தாள்தானே! பக்கத்திலிருந்து அழுதாள்தானே! மனம் நோக நோக அழுதாள்தானே! அப்ப நீ தண்ணி கொடுத்து தட்டி விட்டது எல்லாம் நடிப்பா? அப்ப உனக்குத் தெரியா விட்டாலும், தெரிந்த பின்புதன்னும் கங்காவுடன் நீ கதைத்திருக்க வேண்டுமல்லவா? நீ நல்லவன் என்றும், கங்காவை வில்லியாகவும் அனைவரின் முன்னால் படம் காட்டிவிட்டாயே குமரா. இது குடும்ப வாழ்க்கையிலே தப்பு.
சேர்ந்து கதை – முடிவு எடுப்பதற்கு உனது பக்கமாக உள்ள நியாயங்களைக் கதை. சண்டைவரும் – கொஞ்ச நேரத்தில் அது அடங்கும். நமக்கு உள்ள தேவைகளை – விருப்புகளை – நிறைவு செய்ய வேண்டுமென்றால் வெளிநாட்டில் உள்ள உழைப்பினை விடக்கூடாது கங்கா என்று விளங்கப்படுத்து. அவள் சொல்லும் நியாயத்தினையும் நீ கேளு. ஒரு முடிவுக்கு வரலாம். அதைவிட்டு யாரோ ஒரு பிறத்தியாருக்கு information சொல்லுவது போன்று உன் மனைவிக்குச் சொன்னால் அவளுக்கு மட்டும் கோபம் வரக்கூடாதென்று சட்டம்போட்டா கல்யாணம் பண்ணினாள் கங்கா.
அடக்குவதும், அதட்டுவதும் வாழ்க்கை இல்லை. வாழ்க்கை புனிதமாக வேண்டுமென்றால் இருவரும் Adjust பண்ண வேண்டும். அப்படியென்றால் சந்தானம் போனது போன்று மிகவும் சந்தோஷமாக சந்திர மண்டலத்திற்கே நீ போகலாம்.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!