posted 10th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- தாத்தாவின் அறிவுரையில் fix ஆகிக் கொண்ட விஜேயும், காவேரியும்.
- காவேரியின் மேலே பொறாமை கொண்டு எதிரிகளாகின கங்காவும், ஜமூனாவும்.
- பிறப்பையும், பணத்தையும் தராசில் போடுகையில், பணமே கீழிறங்கி பிறப்பைத் தூக்கி எறிந்த துர்ப்பாக்கிய நிலையில் காவேரியின் குடும்பம்.
- கங்காவையும், ஜமூனாவையும் சமாளிக்க முடியாமல் திண்டாடும் சாரதாவும், பாட்டியும்.
- குடும்பத்தில் அனேகமாக ஒன்று மட்டும்தான் நல்ல குணத்துடன் பிறக்கும், மற்ற அனைத்தும் வில்லங்கங்கள்தான். வாழ்க்கையிலும் காண்பதுதானே!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 07.11.2025
காவேரி எவ்வளவோ இறங்கிப் பார்க்கின்றாள். எப்படியாவது சந்தானத்தின் குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று. ஆனால், கங்காவும், ஜமூனாவும் பொறாமையின் காரணமாகவும், பணம்தான் எல்லாவற்றிற்கும் மேன்மையானது என்று அதற்கு முன்னிடம் கொடுத்து முறுகிக் கொண்டு நிற்கின்றார்கள்.
காவேரிக்கும், விஜேயுக்கும் இது கவலையினைக் கொடுத்தாலும், விஜேய் காவேரியின் குடும்பத்துடன் பார்க்கையிலே பிறத்தியான உறவுதானே அவன். அவனும், காவேரியிடம் உண்மையினைச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றான். உண்மையினையும் சொல்லுகின்றான். காவேரி இதனை ஏற்றுக் கொள்ளுகின்றாளோ அல்லது காவேரியால் விஜேய் சொன்னதினை விளங்கிக் கொள்ளுகின்றாளோ என்ற சந்தேகமும் தொக்கு நிற்கின்றது.
அதாவது, குமரன், கங்காவைப் பிரிந்து வெளிநாடு போய் விட்டான், நெவீன், ஜமூனாவுடன் இன்னமும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழவில்லை. ஆனால், எங்களைப் பாரு, நாங்கள் ஒன்றாய் இருக்கின்றோம், சந்தோஷமாக இருக்கின்றோம், இதனால், அவர்களுக்குப் பொறாமை என்று ஒரு பிசாசு அவர்களின் மனதினுள் புகுந்து எல்லாரினதும் நிம்மதியினை கெடுத்துக் கொண்டிருக்கின்றது.
இதுதான் உண்மையான நிலைமை இப்போது என்று, விபரமாகவும், நேராகவே சொல்லியும் விட்டான்.
காவேரியால், கங்காவினதும், ஜமுனாவினதும் மாற்றத்தினையும், முக்கியமாக வீட்டினை விற்கத்தான் போகின்றோம். ஆனால், உனக்குத் தரமாட்டோம் என்ற முகத்துக் நேராகச் சொல்லி விட்டனர். இதனை காவேரியால் tolerate பண்ண முடியவில்லை. குளம்பிப் போய் திக்காடினாள். இதற்குக் காரணமாக ஒன்றினை கங்கா சொன்னாள் பாருங்க, சுப்பறாக இருந்தது.
இந்த வீடு அப்பாவின் வீடு. அதனால், எங்கள் எல்லாருக்கும் அது சொந்தம். இனி நீ வாங்கினால், அது உனதாகி விடுமே. அந்த வீட்டிற்கு வரும் போது அப்பாவின் வீடு என்ற வந்தோம், அதில் சந்தோஷமும் இருந்தது. ஆனால், நீ அதனை வாங்கினால், உன்னுடைய வீட்டிற்கு வருகின்றோம் என்றல்லவா நினைக்கத் தோன்றும். எனக்குப் பிள்ளைகள் பிறந்தால், அப்பாவின் வீடாக இருந்தால் அது அம்மப்பாவினது வீடென்றுதானே வருவார்கள். ஆனால், நீ அதனை வாங்கி விட்டால், இது சித்தியின் வீட்டிற்கு அல்லவா எனது பிள்ளைகள் சொல்லிக் கொண்டு வரவேண்டிவரும். இதில், கங்காவின் கருத்தினைப் பாருங்கள்.
அது மட்டுமல்லாமல், கங்காவிற்கு, வயிற்றுக்குள் இருக்கும் பிள்ளையே இன்னமும் இந்த உலகத்தினைப் பார்க்கவில்லை. அதற்குள் இவ்வளவு வஞ்சகமான கதைகளை இங்கு பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணானவள், பிள்ளையனை வயிற்றினுள் வைத்துக் கொண்டு இவ்வளவு ஆவேஷமும், அகங்காரமும் அவளுக்கு இருக்கக் கூடாது. ஆனால், அவளோ அமைதியானதும், சந்தோஷமாகவும் தனது கர்ப்பக் காலத்தினை நகர்த்த வேண்டும்.
சாரதாவுக்கும் என்ன செய்வதென்று முடியாமல், என்னென்று இந்த பிரச்சினையினைச் சமாளிக்கலாம் என்றும் குளம்பிப் போயிருந்தா.
சாரதாவால் நிம்மதியாக வீட்டினில் இருக்க முடியவில்லை. நொய் நொய் என்று கங்காவின் பாட்டு ஒருபக்கம் அவவின் காதினில் றீங்காரம் செய்து கொண்டிருந்தது. இதற்கு கெதியில் முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று திடமாக முடிவெடுத்தா சாரதா.
ஆனால், சாதரணமாக, அனைவரும் செய்யும், சொல்லும் பிழையான வார்த்தை என்னவென்றால், நான் உயிருடன் இன்னமும் இருக்கின்றேன்தானே என்பதுவும், அல்லது நான் உயிருடன் இருக்கும் மட்டும் இதை விடமாட்டேன், என்று வீர வசனம் கதைப்பதும்தான். இதன் விளக்கத்தினை நீங்களே சொல்லிப் பாருங்கள். அப்போது அதன் விளக்கம் உங்களுக்குத் புரியும். அத்துடன், இனி இதனை சொல்லத்தான் வேண்டுமா என்று கூட எண்ணத் தோன்றும்.
கங்காவினதும், ஜமூனாவினதும் முடிவானது யாராவது ஒருவனுக்கு இந்த வீட்டினைக் கொடுப்போமே அல்லாமல், உனக்குத் தரமாட்டோம். அட, சட்டங்கள் புரியாமல் கதைக்கும் கங்காவும், ஜமூனாவும். கொடைக்கானல் வீடானது சாரதாவிற்குத்தான் முழுச் சொந்தம். அத்துடன், இந்த வீட்டிலிருக்கும் கங்காவோ கல்யாணம் பண்ணி விட்டா. அதனால், கங்காவிற்கு ஒரு சட்டத்தின் படி உரிமையில்லை.
அதேபோலத்தான், ஜமூனாவும், தன் இஷ்டத்திற்குக் கல்யாணம் பண்ணிக் கொண்டு போய் விட்டா. எனவே, அவவிற்கும் இதில் பங்கில்லை.
ஆனால், அந்த வீட்டினை விற்றால், 50%மான பங்கு சாரதாவிற்கும், மிகுதி 50%தத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு சாரதாவின் மாமியாருக்கும், அதாவது, சந்தானத்தின் தாயாருக்கும், அதில் மிச்சமாக உள்ள பங்கானது நான்கு பெண் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும். எனவே, கங்காவிற்கும், ஜமூனாவிற்கும் நாலில் ஒரு பங்கை விடக் கம்மியாகத்தான் கிடைக்கும். இதனை வைத்துக் கொண்டு இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?
எல்லாவற்றினையும் அவதானித்துக் கொண்டிருந்த சாரதா. உண்மையாக, கொடைக்கானல் வீடானது விற்பதற்கு சாரதாவிற்குத்தான் அநேகமான உரிமை உண்டு. அதுவும், அவவின் முடிவில்தான் தங்கி உள்ளது. தாங்கள் கெயெழுத்துப் போட மாட்டோம் என்று கங்காவும், ஜமூனாவும் அடம்பிடித்தால், உங்களுக்குக் கையெழுத்துக்கான கூலி தரலாம் என்ற நியாயத்திற்குப் போக வேண்டி வர வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்லாமல், யார் பணம் கூடத்தருகிறார்கள் என்று விஷயமும் இங்கு அடங்கி இருக்கின்றது.
இப்படி இடக்கு முடக்காக வில்லங்கள் கங்காவும், ஜமூனாவும் பண்ணுவார்களாக இருந்தால், வருங்காலத்தில், சில சமயம், மழைக்குக் கூட ஒதுங்குவதற்குத் தன்னும் காவேரி அந்த வீட்டு வளவுக்குள்தன்னும் வரவிட மாட்டாள். அந்த நிலைக்குத்தான் கங்காவும், ஜமூனாவும் பாதையினை அமைக்கின்றார்கள் போன்று தோன்றுகின்றது.
உங்கள் கருத்துக்கள் என்னென்ன என்று கூறுங்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!