posted 7th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- நர்மதாவின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு திருப்புமுனை
- காவேரி இழந்தது சொல்ல முடியாத சோகம்
- விஜேய் உறுதுணையாக இருந்ததால் சாரதாவின் குடும்பம் ஆறுதலடைந்தது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 03.06.2026
நர்மதா இப்போதுதான் உலகத்தின் காற்றினைச் சுவாசிக்கத் தொடங்கி உள்ளாள். வாழ்வில் உள்ள வெவ்வேறுவிதமான வாழ்க்கைப் பாதையிலே பயணத்தினை மேற் கொண்டுள்ளாள்.
நன்றாகக் கதைக்கின்றான் இவன்தான் எனது நண்பன் என்று நம்பினாள் நர்மதா. ஆனால், அவளின் மனதினில் ஏதோ ஒரு கீறு அவனைப் பற்றி விழுந்து விட்டது. இதனால் விலக விடலாம் என்று சிந்தித்தவளாய், அவனுடன் உள்ள நட்பினை முறிக்க முடிவெடுத்து விட்டாள்.
ஆண்கள் இல்லாத வீடு என்று ஒருவாறாக இவன் நர்மதாவின் வீட்டின் நிலைமையினை அறிந்து கொண்டான். அதனை ஒரு பெலவீனமாகப் பயண்படுத்தத் தீர்மானித்தவனாய், நர்மதாவின் படங்களை வைத்து வேறு விதமாக உருவாக்கினான். அதனை எல்லாம் வைத்து நர்மதாவைப் பயமுறுத்தினான். வீட்டிற்கு வந்து எல்லாரிடமும் அவற்றைக் காட்டி உன்னைப் பயமுறுத்துவேன் என்றும் கூறி அவன் வரும் நேரத்தினையும் நர்மதாவிடம் கூறினான்.
காவேரியின் முகத்தில் இருந்த வாட்டத்தினையும், அவளின் மனதில் கனத்த பாரத்தினையும் விஜேய் உணர்ந்து கொண்டான். காவேரியிடம் கேட்டுப் பாரத்தும் பலனில்லாமல் போக, விஜேய் சாரதாவின் வீ்ட்டிற்கு வந்தான். எல்லாவற்றினையும் அறிந்து கொண்டான். தான் உங்களுக்கு இருப்பதாக வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும், ஆதாரமாகவும் உறுதியும் கூறினான் விஜய்.
இப்படியான குளப்பங்களையோ, பிரச்சினைகளையோ சிறு பிள்ளைகள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாதென்று விஜேய் உணர்ந்தவனாய், யாழினையை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குப் போனான். இதனால், யாழினியும், அம்முவும் தங்கள் வீட்டிலே விளையாடும்படி விட்டு விட்டு சாரதாவின் வீட்டிற்குப் போய் விட்டான்.
காவேரியின் முன்னால், நர்மதா மிகவும் நிதானமாகத்தான் கதைக்கின்றாள். விஜேயை மாமா என்று கூட அவள் கூப்பிடவும் இல்லை. சாதாரணமான ஒருவருடன் கதைப்பது போன்றுதான் கதைத்துக் கொண்டிருந்தாள். ஆனால், நர்மதாவுடன் கதைக்க வந்த நண்பனை, விஜேய் அறையினுள் கூட்டிப் போய் கதைத்துக் கொண்டிருந்ததனை ஒட்டுக் கேட்டாள் காவேரி. விஜேயின் சம்பாஷனையானது கொஞ்சம் காரமாகத்தான் இருந்தது. ஆனால், விஜேய் கூறிய வார்த்தையில் ஒன்று காவேரிக்கு உறைத்தது. இந்தக் குடும்பம் எனக்கு வேண்டப்பட்டது என்பதுதான்.
அதுமட்டுமல்லாமல், நர்மதா எல்லோருடன் சேர்ந்து கதைக்கையிலே, நர்மதா, விஜேய் மாமா என்னை நம்பியமாதிரி தனது தாய் நம்பவில்லை என்று தாயின் நம்பிக்கையில் சந்தேகத்தினைக் குறை கூறினாள் நர்மதா.
நர்மதா விஜேய் மாமா என்று கூறியதனை உற்று நோக்கினாள் காவேரி. ஆனால், இந்தப் பிரச்சினையில் கொஞ்சம் மறக்கலானாள். ஆனால், வெகு விரைவில் இதனை நர்மதாவிடம் காவேரி கேட்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஒருவாறாக விஜேய் நர்மதாவின் பிரச்சினையினை விலக்கி விட்டான். வீட்டில் இனி அமைதி நிலவும் என்பது அனைவரின் நம்பிக்கை.
விஜேயின் வீட்டில் யாழினியும், அம்முவும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அம்மு, யாழினியிடம் ஒரு சில போட்டோக்களைக் காட்டிக் கொண்டிருந்தாள். அதில் ஒன்றுதான் வீஜேய் – காவேரி கல்யாணப் போட்டோவாகும்.
இதனைக் கண்டதும் யாழினிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில் நின்றது யாழினின் சித்தி, அதாவது, காவேரி. ஆனால், அம்மு கூறினாள், இது தனது அம்மா என்று. இதனை யாழினி நம்பவில்லை. இப்படியாக தனது சித்தியும், விஜேயும் உள்ள கல்யாணப் போட்டோவினை பற்றி யாழினி வீட்டினில் தனது அம்மாவிடம் கதைப்பாளா? அல்லது காவேரியிடம் சொல்லுவாளா?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!