posted 7th December 2025
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 02ஆம் திகதி தொடக்கம் 05ஆம் திகதி வரையான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- விஜேய் எவ்வளவோ கீழிறங்கிச் சொல்லிப் பார்த்தும் கிறிஷ்ணா ஒத்து வரவில்லை.
- பசி தாங்காத சிந்து சமையலறைக்குள் போய் அங்கு சமைத்திருந்ததில் கொஞ்சம் எடுத்துச் சாப்பிடத் தொடங்கியதுதான் தாமதம் றாதா சிந்துவை மிகவும் கீழ்த்தரமாகப் பேசினா.
- சிந்துவின் மேல் மனமிரங்கிய காவேரியும், கங்காவும். உணவினை எடுத்து வந்து கொடுத்த காவேரி.
- பசிக்கு உணவினைப் போட்டாளே காவேரி என்பதனையும் மறந்தான் கிறிஷ்ணா. காவேரி கோபத்தில் தள்ளி விட கிறிஷ்ணா காவேரி கர்ப்பம் என்றும் பார்க்காமல் காவேரியைத் தள்ளி விட்டான்.
- அரைவாசியாகத் தரவேண்டும் என்று கிறிஷ்ணா சொல்லிக் கொண்டிருக்க, அதனை மறுத்த விஜயை நோக்கி வந்த ஆச்சரியமான செய்தி, பொலிஸிடம் இருந்து.
- பதிவுத் திருமணம் சந்தானம் முதன் முதலாகச் செய்தது முத்துமலரையே! சாரதாவையல்ல. எனவே, சட்டப்படி மனைவி முத்துமலரே தவிர சாரதாவல்ல.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 02 - 05.12.2025
சந்தானம், சாரதாவுக்கு செய்தது பச்சைத் துரோகமே! அதாவது, சந்தானம் உண்மையாக மனைவியாக ஆக்கியிருந்தது முத்துமலரையே ஒழிய சாரதாவை அல்ல. சாரதா, சந்தானத்திற்கு இரண்டாம்தரம். உண்மையாக சந்தானத்தினை நம்பி வாழ்ந்தவ சாரதாவும், அவவின் பிள்ளைகளும். ஆனால், இப்போ சாரதாவின் குடும்பம் அம்போ என றோட்டிற்கு வந்து விட்டனர்.
கொடைக்கானல் வீடானது இப்போது முத்துமலரின் குடும்பத்திற்குத்தான் சொந்தமாகப் போகின்றது. இதனால், சாரதாவின் குடும்பத்திற்கு எந்த விதத்திலும் சொத்துக்களில் சம்பத்தம் இல்லை. இனி முத்துமலரோடு ஒன்றும் சாரதா கதைப்பதற்கு இடமில்லை.
சந்தானம், சாரதாவிற்கும், பிள்ளைகளுக்கும் செய்தது மன்னிக்க முடியாத துரோகம் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. இனி, ஒன்றுமே சொல்லாமல் சாரதாவும், பிள்ளைகளும், முத்துமலரின் குடும்பத்தினை விட்டு அவர்களாகவே விலக வேண்டித்தான் ஆக வேண்டும். இனி சாரதாவின் குடும்பமோ, சந்தானத்தின் சொத்து எதுவும் வேண்டாம் என்று ஒதுங்குவார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால், சாரதாவும் சரி, பிள்ளைகளும் சரி நியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அத்துடன், மானம் மரியாதையானவர்களும் கூட.
இவ்வளவு நாட்களாக, சாரதாவின் பிள்ளைகளும் தாங்கள்தான் சந்தானத்தின் ஒரே வாரிசுக்கள் என்றும், சாரதாதான், சந்தானத்தின் ஒரேயொரு மனைவி என்றும் பெருமிதத்துடன் இருந்த காலங்களை எண்ணி வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டியதாயிற்று. அப்படியென்றால், சாரதா, சந்தானத்திற்கு வைப்பாட்டியாகி விட்டாவா? எந்தவிதமான உரிமையும் எதிலும் இல்லை. சாரதாவின் குடும்பமோ வாயைப் பொத்திக் கொண்டு விலக வேண்டியதுதான், மரியாதையும் கூட.
இனி, முத்துமலர் ஏதாவது பாவத்திற்கிரங்கி சாரதாவிற்கும், குடும்பத்திற்கும் கொடுத்தால்தான் உண்டு. ஆனால், இதற்கு, சாரதாவோ இடம் கொடுக்க மாட்டா. ஏனென்றால், சாரதாவும், அவவின் பிள்ளைகளும் மானஸ்தர்கள். தூக்கி எறிந்து விட்டுப் போய் விடுவார்களே ஒழிய, இவர்கள் பின்னால் கைகட்டியோ அல்லது கையேந்தியோ நிற்க மாட்டார்கள். பொலிஸின் முன்னாலே சாரதா கொடைக்கானல் வீட்டின் சாவியினைக் கொடுத்து விட்டும் போக வேண்டியதுதான்.
இனி, சாரதா, தான் இந்த வீட்டிற்கு இவ்வளவு பணம் செலவழித்தனான் என்றெல்லாம் சொன்னாலோ அல்லது இவ்வளவு பாடுபட்டனான் இந்த வீட்டினைக் காப்பாற்றுவதற்காக என்றெல்லாம் சொல்லுவதற்கு எந்தவிதமான சாட்சிகளோ அல்லது சான்றுகளோ இல்லை.
இதெற்கெல்லாம் காரணம் சந்தானம், சாரதாவை 30 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் பண்ணியிருந்தாலும், அவவை பதிவுத் திருமணமாகச் செய்யவில்லை. ஆனால், முத்துமலரை சந்தானம் பதிவுத் திருமணம் செய்துள்ளார். அதற்குரிய அத்தாட்சிப் பத்திரம் முத்துமலரிடம் உண்டு. இனி சாரதாவால் எதுவும் செய்ய முடியாது என்று பொலிஸும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
உறைஞ்சு போனார்கள் சாரதாவின் குடும்பம். கிறிஷ்ணாவின் கேள்விகளுகளுக்கு சாரதாவினால் பதில் சொல்ல முடியாமல் வாய் பொத்தி நின்றா.
நீ வைப்பாட்டி என்று சாரதாவைப் பார்த்து கிறிஷ்ணாவின் குடும்பம் அனைத்தவரும் சொல்லுவது போன்று இருந்தது. விறைத்துப் போனார்கள். சந்தானம் இரண்டாம் கல்யாணம் செய்ததையே நம்ப முடியாமல் உறைந்து போய் இருக்கையிலே, இப்போ சாரதா தன்னை பதிவுத் திருமணம் செய்யாத்தையிட்டு ஏற்பட்ட அதிர்ச்சி இருக்கே இதனை யாராலே தாங்க முடியும்?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!