Mahanadhi - மகாநதி - 18.05.2026 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;

  • கவலையுடனும், மனத்தின் கனத்துடனும் வீடு நோக்கி விரையும் காவேரி
  • அம்முவிற்கு காவேரி கேட்டது விளங்கி விட்டது என்று விளக்கம் தெரிந்த விஜயின் தப்பான முடிவில் காவேரி கசங்கிப் போனாள்
  • காவேரி தவறுதலாக வேறு ஒருவனைக் கல்யாணம் பண்ணி விடுவாளோ, அம்முவை, தனது பேத்தியை, காவேரியின் பிள்ளையையும் உண்மையான புருஷனையும் இழக்க நேருடுமோ என்ற தவிப்பில் சாரதா காவேரியின் மேலே கோபத்தைக் கொட்டி விட்டா.
  • மெதுவாக, பணிவாகச் செய்ய வேண்டிய விஷயமானது இடக்கு முடக்காகப் போய்க் கொண்டிருக்கின்றது. இதுவும் நன்மைக்குத்தான் என்று தோன்றுகின்றது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Mahanadhi - மகாநதி - 18.05.2026

காவேரி அம்முவுடன் கதைத்தது விஜேக்குப் பிடிக்கவில்லை. அம்முவுடன் ஒரு நல்ல பொண்ணாக அல்லது ரீச்சராக தன்னும் கதைத்திருக்கலாம். மாறாக, அம்மு நீயாகச் சொல்கின்றாயா? அல்லது உனது அப்பா இப்படிக் கேட்கச் சொன்னாரா? என்று அம்முவிடம் கேட்டுக் கொண்டிருந்ததை விஜேய் அறைக்குள் வந்ததபோது அறிந்து கொண்டான்.

இதனால், கோபம் கொண்டான். ஏற்கனவே, காவேரி விஜேயுடன் கதைத்ததால் ஏற்பட்ட தாக்கத்தால், விஜேய் சாரதாவுடனும், கங்காவுடனும் இனி இந்த உறவை விட்டு விடுவோம் என்று ஒரேயடியாகச் சொன்னதை சாரதாவால் ஜீரணிக்க முடியாமல் இருக்கையிலே, காவேரியைக் காணாமல் தவிக்கின்ற நிலைமை அதைவிடக் கொடூரமாக இருந்தது.

காவேரி மனம் மாறி வீட்டிற்கு வந்து விட்டாவோ என்ற ஏக்கத்தில் விஜேய் ஒரு கணம் தடுமாறி நிற்கையிலே காவேரியின் கேள்வியானது அம்முவை எப்படி தாக்கி இருக்கும் என்றும் விஜேய் நினைத்திருக்கலாம். ஆனால், அம்முவிற்கு காவேரி கேட்டது ஒரு கேள்வியாக இருக்குமே ஒழிய அதன் அர்த்தத்தின் ஆழமானது புரியும் அளவிற்கு அவள் பெரிய மனிசி இல்லை அம்மு.

விஜேயின் கேள்விகளுக்குக் காவேரியால் எந்தவிதமான பதில்களும் சொல்ல முடியாமல் திக்காடிப் போய் நின்றாள். அவளுக்கும் என்னதான் நடக்கின்றது என்று கூட விளங்கவில்லை. ஏனென்றால், அவளின் மறந்து போன கடந்த காலங்கள்தானே ஒருவராலும் நினைப்பூட்டக் கூடாத நிலையினில் காவேரியின் உடலும், மனமும் இருக்கின்றதே!

ஆனால், அம்மு சொன்னது போன்று, காவேரிக்கும் அம்முவுடன் கதைக்கும் போது ஏதோ இனம் தெரியாத உணர்வுகள் உருவாகின்றது என்று விஜேயின் கேள்விக்கு பதிலிறுத்தாள் காவேரி.
அந்த உணர்வு ஏன்தான் வருகின்றது என்று காவேரிக்கோ புரியவில்லை. ஆனால், விஜேயுக்கு புரியும்தானே. ஆனால், விஜேயால் காவேரியிடம் சொல்ல முடியாத நிலைமை. அதேபோலத்தான் அம்முவிற்கும். அதாவது, காவேரியுடன் இருக்கும் போது அம்முவிற்குத் தனது அம்மாவைத் தெரியாவிட்டாலும், தனது தாயுடன் இருப்பது போன்ற உணர்வானது வருவதை தான் உணருவதாகவும் அம்மு காவேரியிடம் கூறி இருக்கின்றாளே!

இது ஏன் இப்படியான உணர்வானது எனக்கும், அம்முவிற்கும் வருகின்றது என்று காவேரி ஆராய முன்பு விஜேயின் வார்த்தைகளானது அவளது கவனத்தினை வேறு திசைக்குத் திருப்பியது. காவேரியை இனி ரீச்சர் வேலை மட்டும் பார்த்தால் காணும். வேறு மேலதிகமான வேலை ஒன்றும் அம்முவிற்குச் செய்யத் தேவை இல்லை என்று இறுக்கமாக விஜேய் காவேரியிடம் சொன்னதினை காவேரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உறைந்து போனாள் காவேரி.

சாரதாவோ தேவையில்லாமல், ஒருகாலமும் இல்லாமல் காவேரியுடன் கடினமாக ஏசி விட்டோமே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்த வண்ணமாக இருக்கின்றா. நேரம் செல்லச் செல்ல காவேரி வீடு திரும்பாததும் சாரதாவிற்கும், குடும்பத்தவர்களுக்கம் பீதியைக் கிளப்பியது.

நெவீன் விஜேயின் வீட்டிற்கு வந்து அங்கு விஜேயிடம் காவேரியைக் காணவில்லை என்று கூறுகையிலே, விஜேய் இங்குதான் வந்தாள் என்றும், பிறகு வெளிக்கிட்டு விட்டாள் என்பதனையும் நெவீனுக்குச் சொன்னதினை நெவீன் சாரதாவிற்கு அறிவிக்கவில்லை. ஆனால், தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நெவீன் உடனே அறிவித்திருக்க வேண்டும்.

காவேரியைத் தேடி விஜேயும், நெவீனும் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். எவ்வளவோ வீதிகளைத் தாண்டிய பின்பு ஒரு வீதியால் காவேரி அன்ன நடை பயின்று கொண்டு வாறாள் என்று விஜேய் வர்ணிக்க, நெவீன் காவேரிடம் போகின்றான். ஆனால், காவேரியின் மனமோ விஜேய் சொன்ன வார்த்தைகளால் கனக்கின்றது. அந்த பாரமான மனத்துடன் அவளின் உடலோ விரைவாக நடக்க மறுக்கின்றது.

எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)