posted 19th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- கிறிஷ்ணாவின் மேலான பழியானது மிகவும் காரசாரமாக்கப்பட்டது, அன்பரசினால். ஊதித் தணல் விட்டெரிக்கப்பட்ட பிரச்சினையானது சாரதாவால் கிறிஷ்ணா மேல் கை வைக்க வேண்டியதாயிற்று. ஆத்திரக்காரனுக்கு ஏதோ மத்திமம் என்பது இங்கு நிரூபணாகின்றது.
- ஆனால், முத்துமலரின் குடும்பமோ மிகவும் நிதானமாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். கிறிஷ்ணாவை ஒருதரும் ஒன்றும் சொல்ல விடவில்லை.
- காவேரியும் கை வைத்தாள் கிறிஷ்ணா மேலே, கங்காவின் சொல்லைக் கேட்டு. அப்பவும் அவர்கள் சொல்வதனை ஒருவரும் கேட்கவில்லை.
- கிறிஷ்ணாவும் பெண் சகோதரத்துடன் பிறந்தவன்தானே. படித்தவன், பணமில்லாவிடில் பழக்கத்தில் கெட்டவனா?
- சாரதா வீட்டின் பிரச்சினைகளினால் விஜேயின் அலுவலகத்தில் நடைபெறும் வேலையானது மிகவும் ஸ்தம்பிதமானது.
- வீட்டைவிட்டு வெளியேறும்படி கலைக்கப்பட்ட முத்துமலரின் குடும்பம். பணத்திற்காக அலையுதுகள் என்று முத்துமலரின் மேல் பழியினைச் சுமத்தி கேவலப்படுத்திய சாரதா.
- இதெல்லாவற்றிற்கும் பிழையான தீர்ப்பினை வழங்கிய விஜேய்தான் காரணமாகக் கூறலாம்.
- இதொரு சாட்டாக ஒன்றும் இல்லாதததை உண்மையாக்கி ஒன்றும் கொடுக்காமல் முத்துமலரின் குடும்பத்தினை வெளியில் திரத்திவிட எண்ணும் விஜய் என்றும் கூறலாமா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 17.12.2025
வாழ்க்கையில் நோகக் கூடாது, கிறிஷ்ணாவின் குடும்பம் போல. கஷ்டப்பட்டாலும் இப்படி சாரதாவின் வீட்டில் வந்து நிற்கக் கூடாது. அவர்களின் குடும்பத்தின் கஷ்டத்தினை சிந்து கண்ணீருடன் சொல்லியும், கிறிஷ்ணாவின் மேலே கை வைத்த காவேரி.
என்ன நடந்தது என்று தீர விசாரிக்காமல் ஆளுக்கு ஆள் கிறிஷ்ணாவை அடிப்பது என்பது அறாஜகம். கிறிஷ்ணாவை சாரதாவின் குடும்பமே சேர்ந்து அடிக்கும் போது, தீர்ப்பு வழங்கிய விஜய் தனது வாயினைத் திறந்து தான் கண்டதினைச் சொல்லி இருக்கலாம்தானே!
விஜேய், உண்மையாக, கிறிஷ்ணா, நர்மதாவை misbehave பண்ணியதைக் கண்டானா? விழப்போன நர்மதாவை விழவிடாமல் கிறிஷ்ணா ஏந்தியது போலத்தான் தெரிகின்றது. அதனைப் பல கோணத்திலும், அத்துடன் அவரவர் மனநிலையிலும் வைத்து வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லலாம்.
மனதினுள் கறையினைத் தேக்கி வைத்திருக்கும் அன்பரசு எப்பதான் சந்தர்ப்பம் கிடைக்கும் காவேரியின் குடும்பத்தினைப் பழி வாங்கலாம் என்றிருக்கையிலே, இந்த கதை களைகட்டியது. விஜேயும் கிறிஷ்ணாவை கண்டித்ததும், நர்மதாவிற்கு இனி கிறிஷ்ணாவுடன் விளையாட வேண்டாம் என்பதனையும் கருத்தாக எடுத்து விஜேயும், காவேரியும் கொம்பனிக்குப் போன பின்பு பத்த வைத்தான் அன்பரசு.
சாரதாவும், காவேரியும் இவ்வளவு பிரச்சனைப் படுகையிலேயும், முத்துமலரின் குடும்பம் எவ்வளவோ மரியாதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று இங்கு தெரிகின்றது. என்னதான் நடந்தது என்று கூட சிந்திக்காமல், உன்னிப்பாகக் கவனிக்காமல், விஜய், கிறிஷ்ணாவை விரட்டி அனுப்பி, அவனின் மனதினில் இரத்தக் கசிவை ஏற்படுத்தி விட்டான் விஜய்.
இதன் கனாகனத்தினை, அதன் பார தூரமான விளைவுகளை விளங்காத சாரதா ஒன்றுமே சிந்திக்காமல் முத்துமலரின் குடும்பத்தின் மேல் கோபம் கொண்டதுமல்லாமல், மரியாதையீனப் படுத்தினா. இதற்குப் பெயர் கோபம் இல்லை.
ஆனால், இவ்வளவு கொடூரங்களைச் செய்த அன்பின் சொல்லினைக் கேட்டு ஆட்டம் ஒன்றினை ஆடினா சாரதா பாருங்க, இது மன்னிக்கவே முடியாததொன்றாகும்.
இந்தக் கதையின் உண்மை நிலையினை பின்பு அறிந்து கொண்டால் சாரதா என்னதான் செய்வா? கொட்டின சொற்களை பொறுக்கி எடுக்கலாமா? பட்ட காயமானது ஆறிவிடுமா? ஆனால், ஒன்று அதன் பின்பு, சாரதா ஒன்றுமே நடக்காத பச்சாத்தாப முகத்தோடு மன்னிச்சுக் கொள்ளுங்கள் என்றும் கேட்பாவோ. இது சாரதாவின் நடிப்பு என்று கூடக் கூறலாம்தானே! இவ்வளவு வயசான ஒரு மனிசி, ஒன்றையுமே சிந்திக்காமல் வாயினை விடலாமா?
சாரதாதான் கத்தி அட்டகாசம் பண்ணுகின்றா என்றில்லாமல், கங்கா கொஞ்சம் கவனமாக இதனை அணுகி இருக்கலாம்தானே! பாட்டி எவ்வளவோ சொல்ல சாரதா நடந்து கொண்ட விதம் பிழையாக இருப்பதாக இங்கு தெரிகின்றது. சாரதா ஒரு தாய் என்ற றீதியில் கோபப் படலாம். என்றாலும், இது சாரதாவின் பக்கம் overறாகத் தோன்றுகின்றது.
உண்மையான நிலையினை நர்மதாவிடம் தனிமையில் கேட்பதனை விட்டு விட்டு, இப்படி எல்லார் முன்னாலும் அதட்டிக் கேட்பது பிழையென்று நினைக்கத் தோன்றுகின்றது. அன்பரசு கேட்ட கேள்விகளானது பிழையாக இருக்கின்றன. ஆதாவது, அன்பின் கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலைத்தான் சொல்ல முடியுமே தவிர, வேறொன்றும் சொல்வதற்கான கேள்விகளாக அவை அமையவில்லை. அத்துடன், இதனை அமைதியாகக் கதைப்போம் என்று அங்கு இருந்த ஒருவரும் சொல்லவும் இல்லை, சொல்வதாகவும் இல்லை.
இனி இவர்கள் இங்கு இருக்கக் கூடாதென்று தாத்தாவும் முடிவெடுத்தார். அன்புவுடன் சேர்ந்து கொண்ட சாரதாவும் கடுப்பாக இருந்தா. அதுமட்டுமா, காவேரி, கங்காவிடம் நர்மதா என்ன சொன்னாள் என்றதற்கு, கங்கா அவளும் ஆமா என்றுதான் சொன்னதாகச் சொன்னதும் எவ்வளவு தவறு என்றும் தோன்றுகின்றது.
இது ஒரு கவனமாகக் கையாள வேண்டிய விஷயமாக இருக்கின்றது. ஆனால், இவர்களே கெட்ட மனம் கொண்ட அன்பரசின் கையில் இதனைக் கையளித்தது போலல்லவா இருக்கின்றது. இனி இது எல்லாருக்கும் பரவாமல் தவிர்ப்பது என்பது முடியாத காரியம் என்று கூடச் சொல்லலாம்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!