posted 17th March 2026
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 12ஆம், 13ஆம் திகதிகள் வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- அழுகையினால் காவேரியின் மனதினை அசைத்த சாரதா. தாயின் துக்கத்தினைத் தாங்காத மகள் காவேரி, அவளுக்கு விருப்பமில்லாவிட்டாலும் அம்முவின் வீட்டிற்கு வருவதற்கான சம்மதத்தினைச் சொன்னாள்.
- அம்முவிற்கோ சாரதா பாட்டி எப்போது வருவா என்று அப்பா விஜேயை அருட்டிக் கொண்டிருந்தது அவளையும் அறியாத பாசம்.
- கங்காவும், ஜமுனாவும், அம்முவைப் பார்ப்பதற்கு உள்ளதும் பாசம்தான்.
- ஐந்து வருடங்களைத் தாண்டியும் அம்மாவிற்கும், அம்முவிற்குமான உறவு இனித் தெரியவரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026
டாக்டர் சொன்னதன் பிரகாரம் காவேரிக்குப் பழைய நினைவுகள், நடந்தேறிய சம்பவங்கள் தானாகவே ஞாபகம் வரக்கூடியதாக இருந்தால் நல்லது என்றதற்கிணங்க காவேரியை பழைய இடங்களுக்கும், தனது வீட்டிற்கும் கூட்டிக் கொண்டு போவதற்காக காவேரியையும், சாரதவையும் விருந்திற்காக விஜேய் அழைத்தார்.
சாரதாவின் குடும்பம் காவேரியுடன் வருவது விஜேயின் தாத்தாவிற்கும், றாதாவிற்கும் விருப்பமாகவும், சந்தோஷமாகவும் இருந்தாலும், அன்பிற்கு விருப்பம் இல்லைதிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. காரணம் பசுபதி ஆட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம் அல்லது பிரச்சனைகளுக்குப் பயந்தா அல்லது காவேரி உள்ளே வந்தால், தான் நினைத்திருக்கும் சொத்தில் உள்ள பங்கானது குறைந்து அல்லது இல்லாமல் ஆகிவிடும் என்ற நினைவுகளா? புரியவேயில்லை.
ஆனால், விஜேயின் உணர்ச்சிகள் காவேரியைக் கண்ட சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருப்பதுவும், எப்பதான் காவேரி தனது சுயநினைவுக்கு வந்து தாங்கள் அனைவரும் ஒன்றாக குடும்பமாகவும், சந்தோஷமாகவும் இருக்கலாம் என்றொரு அங்கலாய்ப்பு விஜேயுக்கு.
அதேசமயம், அம்மு, எப்பதான் காவேரிதான் தனது அம்மா என்று தெரிய வருவதும், காவேரிக்கு எப்பதான் தான் தான் அவளது புருஷன் என்றும், அம்முதான் அவளது பிள்ளை என்றும் தெரியவரப் போகின்றது என்றொரு வேணவாவில் தலை கால் தெரியாமல் இருக்கும் நிலையானது, காவேரி்க்கு, விஜேய் ஒரு அசாதாரண நிலையில் இருப்பது போன்ற உணர்வானது அவளில் உதயமாகி உள்ளது.
விஜேய் தனது வீட்டிற்கு விருந்திற்குக் கூப்பிட்டதும், சாரதாவிற்கோ கையும் ஓடவில்லை, காலும் நிற்கவில்லை. அவவை அறியாத ஒரு சந்தோஷம் வேறு சாரதாவிற்கு. சாரதாதான், அம்முவின் உண்மையான பாட்டி. அது தெரியாமல் அம்மாவிடம் இருந்த மாற்றமானது விபரிக்க முடியாமலும், ஏன் அம்மா இப்படி என்று கூறுமுடியாமலும், காவேரிக்கு ஒரே குளப்பமாக இருக்கின்றது.
அம்முவை நேரில் பார்க்காத கங்காவும், ஜமூனாவும், போட்டோவில் அவளைப் பார்த்ததும், அவர்களுக்குள் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை. எப்படா அம்முவைக் காணலாம் என்ற ஆவலில் ஒரு சந்தர்பத்தினை எதிர்பார்த்திருந்தார்கள். அதுவும் உடனே அவர்களின் கைக்கெட்டியது.
இப்படியான சூழ்நிலைகளை பலரும் வாழ்க்கையில் அனுபவித்திருப்பீர்கள். ஐந்து வருடங்களின் பின்பு பாட்டியின் அரவணைப்பானது அம்முவிற்கு ஏற்பட்ட மாற்றத்தினை காணக் கூடியதாக உள்ளது. அதையும் விட சாரதாவில் ஏற்பட்ட திகைப்பானது சொல்லத் தேவையே இல்லை.
ஆனால், பல சகாப்தங்களில் ஒரு பிள்ளைக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பம் உருவாகுமானால், அந்தப் பிள்ளையில் ஏற்படும் மாற்றத்தை எனது அனுபவத்தில் கண்டுள்ளேன், உணர்ந்தும் உள்ளேன். இங்கு நான் குறுப்பிட்டது பல சகாப்தங்கள் என்பது, 20 வருடங்கள் தாண்டி. இந்த காலங்கள் காவேரியைப் போல அறிவினை இழந்த காலங்களால் அல்ல, மாறாக, முழு அறிவுடனே இந்த உலகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலைமையில்தான் அது. முன்னையதை விட பின்னையது மிகவும் கொடுமையானது அல்லவா!
பாடசாலையிலிருந்த வந்த காவேரிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியினை சாரதா கொடுத்தா. வகை வகையான பலகாரங்களைத் தயார் செய்து கொண்டிருந்த சாரதா. காவேரியை எடுத்து விரும்பியவற்றினைச் சாப்பிடவும் சொன்னா. கொதிப்படைந்த காவேரி அவளது அம்மாவை கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்டதனால் ஒரு வழி பண்ணி விட்டாள். காவேரி்க்கும், தாய்க்குமான தர்க்கம் பலத்தது. காவேரியின் பெலவீனத்தினை அறிந்த தாய் சாரதா, தனது சந்தோஷத்திற்காகத்தானே இவற்றையெல்லாம் செய்கின்றேன் என்று அழுது கொண்டு சொன்னா. காவேரியோ மனம் கலங்கினாள். தான் அம்முவின் வீட்டிற்கு வருவதற்குச் சம்மதித்தாள்.
சாரதாவும், காவேரியும் அம்முவின் வீட்டிற்குப் போவதற்கு ஆயத்தமானார்கள். அம்முவோ மீண்டும் சாரதா பாட்டிக்குக் கோள் பண்ண வேண்டும் என்று தனது தகப்பனை கேட்டுக் கொண்டே இருந்தாள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!