posted 11th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- வீட்டினை எழுதுவதற்காக சாரதா குடும்பமே புறப்படுகையில் சந்தானத்தால் விதைக்கப்பட்ட வில்லங்கள் வீடு தேடி வந்தன.
- அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியினைச் சொன்னார்கள். சொத்திலே பங்கு கேட்கின்றார்களாக்கும் என்று நினைத்தால், இல்லை கட்டிலில் ஆரம்பமான உறவினைச் சொல்லி வந்த குடும்பம் அது.
- சந்தோஷமாக இருந்த குடும்பம், இப்போது சக்களத்தியிடம் மாட்டிக் கொண்டு திண்டாடப் போகின்றார்களோ?
- சந்தானத்தின் இரண்டாவது மனைவியென்று வந்தவவோ மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் கதைப்பதனை நம்பும் படியாக இருந்தாலும், காட்டும் போட்டக்களானது உண்மையாக இருக்குமோ? இங்கு தாயும், பெண் பிள்ளையும் அமைதியாக இருக்கின்றார்கள், பையன் கொஞ்சம் வில்லங்கமாக இருக்கின்றான்.
- போட்டோக்களை வைத்திருப்பவர்கள் வேறு ஆதாரங்கள் வைத்திருக்க மாட்டார்களா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 11.11.2025
இப்போது காவேரிதான் இந்த வீட்டினை வாங்குவதாக சாரதா முடிவெடுத்திருக்கையிலே, சித்தி என்று, அதாவது, சந்தானத்தின் இரண்டாவது மனைவி கட்டாரிலிருந்து இரண்டு பிள்ளைகளுடன் வருகை. அதுவும் கொடைக்கானலுக்கு, காவேரியின் ஊருக்கு. சாடையாக இந்த விஷயம் அயலுக்குப் புகைத்தது என்றால் காணும், எல்லா இடமும் சந்தானத்தின் இரண்டாவது மனைவி கட்டாரில் இருந்து வந்திருக்கின்றா பிள்ளைகளுடன் என்ற கதை பரவி விட்டால், சாரதாவின் குடும்பத்திற்கு ஒரு சாபக் கேடுதான். இருந்த நற்பெயரும் அழிந்துவிடும்.
காவேரிக்கோ புகுந்த வீட்டில் ததும்பிக் கொண்டிருக்கும் பிரச்சினை காணாததென்று இந்த சித்தியின் கதை காவேரிக்கு ஒரு இழுக்கான செய்தியாக அமையும்.
அதேமாதிரித்தான், நெவீனின் அம்மாவின் காதில் சந்தானத்தின் இரண்டாம் குடும்பம் என்று தெரிந்தால் காணும், ஜமூனாவின் கதை கந்தல்தான். கங்கா தாய் வீட்டில் இருப்பதால் பிரச்சினை இல்லை. ஆனால், சாரதா, பங்கஜம் மாமியின் வீட்டிற்குத் திரும்பினால், அது வேற பிரச்சினையாக எழுந்து நிற்கும்.
வீடு விற்கப் போகின்றதனைத் தெரிந்துதான் இவர்கள் வந்தார்களா என்ற கேள்வி ஒன்று இங்கு தொக்கு நிற்கின்றது. ஆனால், இவர்கள் பசுபதியின் ஆட்களா என்றதிலும் சந்தேகம் எழுகின்றது. ஏனென்றால் இவ்வளவு காலமும் சாரதாவுடன் எதுவித தொடர்பும் இல்லாமல் இப்போது திடீரென்று வந்திறங்கினதுதான், எதேர்ச்சையாக இது இருந்தாலும், ஏதோ எங்கேயோ தொக்கு நிற்கின்றது. இவர்கள் சந்தானம் இறந்த நேரமாவது ஏதாவதென்றினைச் சொல்லி சாரதாவுடன் கதைத்திருக்கலாம். ஆனால், சித்தியாக வந்தவவோ, சொன்ன காரணம் அவ்வளவிற்கு ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.
இங்கு சாரதாவுடன் சென்னை வீட்டிற்கு இரண்டாம் மனைவியின் குடும்பமும் வந்து விட்டார்கள் என்றால் சமுதாயம் ஒரு இழுக்காகத்தான் நினைப்பார்கள். அதனால், சமுதாயச் சிக்கலும், சட்டச் சிக்கலும் ஒன்றன் பின் ஒன்றாக வரப் போகின்றது சாரதாவின் குடும்பத்திற்கு. நிம்மதி தொலையப் போகின்றது. இனி, பசுபதியின் அநியாய வருகை ஆரம்பமாகப் போகின்றது.
வெளியாருக்குத் தெரிந்தால் எப்படி காவேரி சித்தி எப்படி இருக்கின்றா என்று போறவாற எல்லாரும் கேட்கப் போகின்றார்கள். சாரதா வெளியில் தலை காட்டவே முடியாத நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இனி, பாட்டியிடம் எப்படி உங்களது இரண்டாவது மருமகள், பேரப் பிள்ளைகள் என்று கேட்டுக் கேட்டு உயிரினை வாங்கி விடும் இந்தச் சமுதாயம்.
சாரதாவின் மைதினி, குமரனின் அம்மா, துள்ளப் போகின்றா. இந்தக் கதை உண்மையோ, பொய்யோ சாரதாவின் குடும்பத்திற்கு இது ஒரு பெரிய இழுக்காக இருக்கப் போகின்றது. நர்மதாவின் பாடசாலை வாழ்க்கை, அவளது வருங்கால வாழ்க்கை என்பன இழிவாக்கப்படப் போகின்றது.
இது ஒரு பெரிய சகாப்தமாகவும், மிகவும் அருவருப்பான சவாலாகவும் இருக்கப் போகின்றது சாரதாவின் குடும்பத்திற்கு.
இப்போதுதான், பிள்ளைகளுடன் கூடி சற்று நிம்மதியாக குடும்பமாக வெளிக்கிட்ட சாரதா குடும்பம், அடுத்த சவாலான வாழ்க்கையினுள் வாழப் போகின்றது.
ஜீப்பினில் விஜேயுடன் சாரதா வரும் போது, சாரதாவும், பாட்டியும், சந்தானத்தினைப் பற்றி சொன்னதினை எவ்வளவோ பெருமையாக நினைத்துக் கொண்டு வந்த விஜய், இனி என்ன நினைக்கப் போகின்றான் என்றுதான் தெரியவில்லை.
இந்த புதிய வாழ்க்கையானது, கங்காவுக்கும், ஜமூனாவுக்கும் ஒத்துப் போகுமா? இந்த இரு சகோதரிகள்தான் சாரதாவுக்கும், பாட்டிக்கும், காவேரிக்கும் எதிராக இருப்பவர்கள். இந்த புதுக் குடும்பத்தில் மகனாக இருப்பவன் கொஞ்சம் இடக்கு முடக்கானவனாக இருப்பதால் இவனுடன் கங்காவும், ஜமூனாவும் கூட்டுச் சேருவார்களா? வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஊகிக்க இடமிருக்கின்றது.
உங்க,ள் கருத்துக்கள் என்னென்ன என்று கூறுங்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!