posted 13th March 2026
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 09ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- காவேரிக்கு தனது அம்மாவில் சந்தேகம் வந்து விட்டது. ஏன் அம்மா விஜேயுடனும், அம்முவுடனும் இவ்வளவிற்கு ஒட்டி உள்ளா என்று.
- அம்முவிற்கே சந்தேகம் வந்து விட்டது, அப்பா ஏன் இவ்வளவிற்கு மிஸ்ஸுடன் வழிகின்றார் என்று.
- தாத்தாவிற்கும், றாதாவிற்கும் காவேரியின் வரவில் ஆட்சேபனை இல்லாதிருக்கையில், அன்புவின் நோக்கமோ சந்தேகமாக இருக்கின்றது.
- விஜேயின் வருகையினை மிகவும் சந்தோஷமாகப் பார்க்கும் கங்காவும், ஜமூனாவும். விஜேயை காவேரிக்கு மீண்டும் கல்யாணம் பண்ணி வைத்தால் என்ன? என்பது மிகவும் நல்ல யோசனையாக இருக்கின்றது.
- அம்முவோ மிகவும் ஒட்டிக் கொண்டாள் சாரதா பாட்டியுடன். ஒட்டத்தானே செய்யும். ஆனால், ஏன் காவேரிக்கு பிள்ளை என்ற உணர்வு வருவதாக இல்லை. உணர்வானது வருமா?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்?
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026
இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
பழைய ஞாபகங்களை நாங்களாக வரவைப்பதற்கு முயற்சித்தால், காவேரியின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று விபத்து நடைபெற்ற சமயம் பார்த்த டாக்டர் என்ன கூறினாரோ அதனையே இப்போது விஜேயுக்குத் தெரிந்த வைத்திய நிபுணரும் கூறினார். ஆனால், காவேரி முன்பு எங்கெங்கெல்லாம் போனாவோ அங்கங்கெல்லாம் கூட்டிச் சென்றால் ஒரு சமயம் பழைய நினைவுகள் மீண்டும் வர வாய்ப்புகள் உண்டு என்று இப்போது பாரத்த வைத்திய நிபுணர் கூறினார்.
இதற்காக விஜேய் அவரது அத்தை சாரதாவுடன் சேர்ந்து காவேரியின் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதற்காக முயற்சிகளை உடனே அடுத்த நாளே தொடங்குகின்றார். இதனை விஜேய் தனது வீட்டிலும் தாத்தாவிடமும், றாதா சித்தியிடமும், அன்பு சித்தப்பாவிடமும் சொல்கின்றார்.
தாத்தாவிடமிருந்தும், றாதா சித்தியிடமிருந்தும் நல்ல முடிவுகள் வருகையிலே, அன்பு சித்தப்பா முன்பு காவேரியுடன் இருந்த சமயம் உருவான பிரச்சினைகளை மேற்கோள் காட்டி காவேரியின் வீட்டாரின் உறவு வேண்டாமே என்று வலியுறுத்தினார்.
ஐந்து வருடங்கள் காவேரி இறந்து விட்டாள் என்ற கவலையில் விஜேய் அனுபவித்த வலி நிறைந்த வாழ்க்கை ஒரு பக்கம், அம்மு அம்மா எங்கே? அம்மா எங்கே? என்று அழுது அடம்பிடித்த கணங்கள் விஜேயின் மனத்தில் ஏற்படுத்திய றணங்கள் மறுபக்கம். இதெல்லாம் புரியாமல், உணராமல் அன்பு கதைப்பது என்பதானது உண்மையாக தங்களுக்கு பசுபதியின் ஆட்களால் ஏற்படும் பிரச்சினைகளையிட்டு சொல்கின்றாரா? அல்லது விஜேயின் வீட்டில் கிடைப்பதற்காக உள்ள சொத்தின் கணக்கினை மனதில் கொண்டு அன்பு போட்ட திட்டமானது காவேரியின் வருகையால் கோட்டை விடப்படப் போகின்றதோ என்ற ஏக்கத்தில் அன்பு கதைக்கின்றாரோ தெரியவில்லை.
அம்முவுடன், காவேரியும், விஜேயும் ஒன்றாக இருந்து சாப்பிடுவதனை பார்த்து பரவசம் சாரதா அடைகையிலே, இது எப்போது உண்மையானதாக வரும் என்ற ஏக்கம் அந்த அசையினை அணைத்து விட்டு விடமோ என்ற ஏக்கத்தினை சாரதாவின் முகத்தினில் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால், கங்காவின் அபிப்பராயமானது முன்னைய நினைவுதான் காவேரிக்கு வருமட்டும் பாரக்காமல், விஜேயைக் காவேரிக்கு கல்யாணம் புதிதாகப் பேசி முடித்து விடலாம் என்பதான அபிப்பராயமானது மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.
அம்முவின் போட்டோவினைப் பார்த்ததும், கங்காவுக்கும், ஜமுனாவுக்கும் உருவான சந்தோஷமானது அணைகடந்த வெள்ளமாக ஓடிற்று. அம்முவிற்கோ தான் பெரியம்மா என்று கங்காவின் சந்தோஷம், தானோ சித்தி என்று ஜமூனாவுக்கு சந்தோஷம் ஊற்றெடுக்கத் தொடங்கிற்று. அப்படி என்று அவர்கள் நினைக்கையிலே, சாரதாவிற்கு எப்படி இருக்கும்? அம்மு உண்மையான சொந்த பேத்தி என்றால் மிகையாகாது.
இவ்வளவு நாட்களாக அம்முவை பாடசாலைக்குக் கூட்டிக் கொண்டு போன விஜேய், இப்போது வேறு மாதிரியாக நடந்து கொள்ளும் விதத்தினை அறிந்தும், உணர்ந்தும் கொண்டாள் அம்மு. ஏனென்றால், ஐந்து வருடங்களாக உலகத்தினை விட்டுப் போய் விட்டாள் காவேரி என்று கவலையில் உலகமே வெறுமையாகத் தோன்றுகையிலே, இப்போ அதே காவேரி தன் காதலி, தன் மனைவி உயிருடன் அவன் கண்முன்னாலேயே நிற்கையிலே எப்படி இருக்கும் விஜேக்கு? தன்னை விட்டுப் போக மாட்டாள் காவேரி என்று மனம் விஜேயுக்குச் சொன்னாலும் எதார்த்தம் அது இல்லையே. அதாவது, ‘மாண்டார் வருவாரோ’ என்பதுதானே நிஜம்.
சாரதாவால் தனது சந்தோஷத்தினை குதித்துக் கொண்டாட முடியாமல் தனது மனத்தினுள்ளேயே அடக்கிக் கொண்டிருக்கும் வேதனையினை அனுபவித்தால்தான் தெரியும்.
அதேபோல்தான் விஜேயுக்கும். உரிமையாக சாரதாவை அத்தை என்று கூப்பிடவும் முடியாமல் தவிப்பதும், வாய் தடுமாறி சாரதாவின் உணவினை இப்பவும் சுவை மாறாமல் இருக்கின்றது என்பதனையும் சொல்லி காவேரியின் முன்னால் சங்கடப்படுவதனையும் சொல்லி விபரிக்க முடியாது.
எல்லாவற்றினையும் சிந்தித்து பேச வேண்டிய நிலையினில் சாரதாவும், விஜேயும். காவேரி ஒரு பக்கம் கேள்வியினைக் கேட்கின்றாள் என்றால், அம்முவுமல்லாவா கேள்வி கேட்கத் தொடங்கி விட்டாள்.
ஆனால், காவேரி கேட்கும் கேள்விகளுக்கு அம்மு சொன்ன பதிலானது காவேரிக்கு கொஞ்சம் அதிருப்தியாகவும், அசௌகரியமாகவும் இருந்தது. அதுதான், தன்னைப் பார்த்தால் மட்டும்தான் விஜேய் இப்படி நடக்கின்றார் என்று அம்மு சொன்னது.
அத்துடன், விஜேய் காரினில் காவேரியை கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போகையிலே அடிக்கடி பின்பக்கக் கண்ணாடியில் காவேரியைப் பார்த்தது காவேரிக்கு மிகவும் ஒரு மாதிரியாக இருந்தது. இதனை விஜேய் கொஞ்சம் அடக்கிக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், காவேரி, முன்பு, அதாவது, விபத்திற்குள்ளாகு முன்பு உள்ள அவளது குணத்தினை விஜேயுக்குத் தெரியாதா என்ன? இத்தனைக்கும் இப்போது அம்முவின் அப்பாவாகத்தான் காவேரிக்கு அறிமுகமாகி உள்ள நிலையில், விஜேய் உத்துத்து கண்ணாடியால் காவேரியைப் பாரத்தால் கதை கந்தலாகி விடுமல்லவா.
அப்படி விஜேய் பார்க்காமல் இருந்திருந்தால் கோவிலுக்கு விட்டு விட்டு மீண்டும் காவேரியை வீட்டினிலே கொண்டு போய் விடுவதற்கு ஒரு சமயம் காவேரி ஒத்துப் போயிருக்கலாம். பார்வைதான் எல்லாவற்றையும் கெடுத்து விட்டது. இதைத்தான் காவேரி வீட்டிற்கு வந்து தாயிடம் முறைப்பாடாக சொன்னாள். அதுமட்டுமா, சாரதா அதனைக் கண்டு கொள்ளாததும், கோவிலுக்கு உடுத்திப் படுத்தி ஜோடித்துக் கொண்டு போக வைத்ததையும் காவேரிக்கோ பொறுக்க முடியவில்லை.
ஆனால், சாரதா, காவேரிக்குச் சொல்லும் சாட்டானது பிள்ளையுடனான பாசத்தினை வைத்துத்தான். இது எவ்வளவிற்குத்தான் நீடிக்கும்? இதில் முன்னேற்றம் வருமா? அல்லது சிக்கல் வருமா? காவேரியின் பிறந்த நாளுக்கு கங்காவும், ஜமூனாவும் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதில் சாரதாவின் நோக்கம்தான் என்ன?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!