
posted 18th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
7 சிறுவர் இல்லங்களுக்கு உலர் உணவு பொருட்கள்
கிறிசாலிஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 7 சிறுவர் இல்லங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் காகி தாதிகள், சுகாதார பொருட்கள் என்பன காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவஞானம் ஜெகராஜன் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.
இதன்போது அம்பாறை மாவட்ட உள சமுக உத்தியோகத்தர் யூ. எல். அசார்டீன், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர் ஐ. எல். எம். இர்பான் மற்றும் சிறுவர் இல்ல முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)