6000 கிலோ புளி ஆதாரத்துடன் அகப்பட்டது

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை விற்பனைக்கு தயார்செய்து கொண்டிருந்த போது பொதுச்சுகாதார பரிசோதகரால் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

யாழ் நகர பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்சீவனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய யாழ் மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை அருவருக்கதக்கவகையில் சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்தநிலையில்,
நேற்று (25) மாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவினரால் குறித்த களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது.

மனிதப் பாவனைக்கு உதவாத நிலையில் 6000 கிலோகிராம் வரையிலான பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

6000 கிலோ புளி ஆதாரத்துடன் அகப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More