
posted 7th December 2021
இலங்கை இராணுவத்தின் 59ஆவது பதவி நிலை பிரதானியாக இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் எச். எல். வி. எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசு மற்றும் படைகளின் பிரதானி மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் அவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக லியனகே கடமையாற்றியுள்ளார்.
இராணுவத்தின் 58ஆவது பதவி நிலை பிரதானியும், கெமுனு ஹேவா படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 35 வருட பணியின் பின்னர் ஓய்வு பெற்ற நிலையில் புதிய பிரதான நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்