
posted 10th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
35 இந்திய மீனவர்கள் மன்னாரில் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் தீவை அண்மித்த தென் கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்பட்டன என்று கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)