31ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
31ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஐயாத்துரை நடேசன்

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் தொழிற்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஆய்வாளருமான ஐயாத்துரை நடேசனின் 18ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 31 ஆம் திகதி (செவ்வாய்) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும், கவனயீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் வா. கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்கா வளாகத்திலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டமும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டமானது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறையினைக் கண்டித்தும், தமிழ் மக்களின் உரிமையினை அங்கீகரிக்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கவனயீர்ப்பில் அனைத்து ஊடகவியலாளர்களையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும், பொதுமக்களையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்புத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் தொழிற்சங்கம் என்பன ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

31ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY