13ஐ நடைமுறைப்படுத்தி தமிழரின் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பேன் -  சஜித்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

13ஐ நடைமுறைப்படுத்தி தமிழரின் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பேன் - சஜித்

'நான் ஜனாதிபதியானதும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பேன்”, என்று ரெலோ, புளொட் கட்சிகளிடம் கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவருமான சஜித் பிரேமதாஸ.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸ தமிழ்த் தேசியப் பொதுக்ஷகட்டமைப்பினரை தொலைபேசி வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று பொதுக் கட்டமைப்பிலுள்ள அரசியல் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகள் அவரை சந்தித்தன. ஏனைய கட்சிகளும் சிவில் அமைப்புகளும் வேலைப்பளு காரணமாக சந்திப்பில் பங்கேற்கவில்லை என்றும் ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பில் பங்கேற்ற ஜனநாயக போராளிகள் தரப்பும் அவரசமாக யாழ்ப்பாணம் திரும்பியதால் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று தன்னை சந்தித்தவர்களிடம் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ,

“நான் ஜனாதிபதியானதும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்ப்பேன். நான் இதுவரை அதிகாரத்துக்கு வரவில்லை. இதனால், ஏனையவர்களுடன் என்னை ஒப்பீடு செய்வது சரியான அணுகுமுறையல்ல.

“வடக்கில் நல்லாட்சி காலத்தில் அமுல்ப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டம் பாதியில் நிற்பதால் பலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்று அறிந்துள்ளேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் தோல்வியடைந்ததால் அதனை சரி செய்ய முடியவில்லை. வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்ததும் இந்தப் பிரச்னையையும் தீர்ப்பேன்.

தமிழ் பொதுவேட்பாளர் தேவையற்ற விடயம். இதனால் இலங்கை தீவில் இனரீதியான முறுகல்கள் எழலாம் - என்றும் சஜித் பிரேமதாஸ ரெலோ, புளொட் கட்சிகளிடம் கூறியுள்ளார்.

நேற்று காலை எதிர்க்கட்சித் தலைவரின் பணிமனையில் நடந்த இந்த சந்திப்பில் புளொட் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன் எம். பி., ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம். பி., கோவிந்தன் கருணாகரம் எம். பி., ரெலோ பேச்சாளர் கு. சுரேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

13ஐ நடைமுறைப்படுத்தி தமிழரின் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பேன் -  சஜித்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)