11 மாத சிசுவின் உயிரைக் குடித்த காய்ச்சல்

கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த 11 மாதக் குழந்தை சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தை, கட்டுப்படுத்த முடியாத காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தது.

நேற்று செவ்வாய்க் கிழமை (03) காலை இக் குழந்தை காய்ச்சலால் அவதியுறும் போது, குழந்தைக்கு பனடோல் கொடுத்து காய்ச்சலை கட்டுபடுத்த முற்பட்ட போதும், காய்ச்சல் குறையாத காரணத்தால் குழந்தையை பெற்றோர்கள் அருகிலிருந்த மிருசுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனாலும், காய்ச்சலைக் கட்டுபடுத்த முடியாத காரணத்தால் உடனடியாக குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

ஆனால், துர்வசமாக குழந்தையைக் காப்பற்ற முடியாமல் போய் விட்டது. குழந்தையை சோதனை செய்த மருத்துவக் குழுவானது இக் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக உறவினருக்கு அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இறந்த அக்குழந்தையின் உடலானது திடீர் இறப்பு விசாரணைக்காகக்காக கையளிக்கப்பட்டது. திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டார்.

11 மாத சிசுவின் உயிரைக் குடித்த காய்ச்சல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More