11 இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இந்திய மீனவர்கள் 11 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் பத்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 04ஆம் திகதி ஒரு படகில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேபோல் 11ஆம் திகதி ஒரு படகில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 06 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் கைதானவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றது.

இதன்போது 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இரண்டு படகு உரிமையாளர்களும் கைதானவர்களுடன் காணப்பட்டமையால் படகுகள் இரண்டு அரசுடைமையாக்கப்பட்டன.

11 இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY