
posted 22nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புக்களும் களத்தில்
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஈடுபடவுள்ளன என்று தெரியவருகின்றது.
இதற்கமைய சார்க் மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இலங்கை வரவுள்ளன. ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வருமா என்பது பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
அத்துடன், உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தற்போதிருந்தே தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அவை முழு வீச்சுடன் களமிறங்கவுள்ளன.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் கண்காணிப்பாளர்களை நியமிக்கவுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)