
posted 25th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தினம் நிகழ்வு
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
'வெலிக்கடை சிறைப் படுகொலை' நடைபெற்ற தினமான இன்று வியாழக்கிழமை பிற்பகல் 03.05 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் குரலற்றோரின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
கறுப்பு ஜூலையின் ஓர் அங்கமாக வெலிக்கடை சிறை படுகொலை கடந்த 1983 ஜூலை 25, 28ஆம் திகதிகளில் நடைபெற்றது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை அங்கிருந்த சிங்கள அரசியல் கைதிகள் சிறைக் காவலர்களின் ஆதரவுடன் வெட்டியும் குத்தியும் கொடூரமாகக் கொன்றனர். 25ஆம் திகதி 35 தமிழ் அரசியல் கைதிகளும் 28ஆம் திகதி 18 தமிழ் அரசியல் கைதிகளும் குரூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோரும் அடங்குவர் என்பது நினைவுகூரத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)