வீதி மறியல் போராட்டம் இன்று

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கல்லூண்டாய்வெளி குடியிருப்பு மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத தமது குடிதண்ணீர் பிரச்னைக்கு உடன் தீர்வு வழங்கவேண்டும் என குறிப்பிட்டு யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் கல்லூண்டாய் பகுதி வீதியை மறித்து வீதியின் குறுக்கே பொதுமக்களும், மாணவர்களும் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து ஒரு சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போராட்ட இடத்துக்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் வீதியை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்த மக்களை அகற்றி போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்த மக்களுடன் போச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து தருவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து அதிகாரிகள் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வந்தனர்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜா, மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அ. ஜெபநேசன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார் உள்ளிட்டவர்கள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலில் பிரச்னைக்கு உரிய தீர்வை உடனடியாக பெற்று தருவதாக தெரிவித்தோடு குடியிருப்பு பகுதிக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டதை அடுத்து மக்களின் போராட்டம் நிறைவு பெற்றது.

அத்தோடு கல்லூண்டாய்வெளி குடியிருப்பு மக்களின் குடிதண்ணீர் தேவைக்கு உடனடியாக தீர்வை வழங்குவதற்காக யாழ்.மாவட்ட இராணுவத்தின் 512ஆவது படைப்பிரிவால் குடிதண்ணீர் விநியோகம் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீதி மறியல் போராட்டம் இன்று

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More