வீதியில் நெல் உலர விட்டவர்களை அடித்துத் தள்ளிய டிப்பர்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வீதியில் நெல் உலர விட்டவர்களை அடித்துத் தள்ளிய டிப்பர்

நெல் உலர விட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை (07) இரவு 11.30 மணியளவில் கிளிநொச்சி - பூநகரி - சாமிபுலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் பூநகரி வீதியில் சாமிப்புலம் பாடசாலைக்கு முன்பாக இரவுநேரம் நெல்லை வீதியில் உலர விட்டு கொண்டிருந்தவர்களை பூநகரி பக்கமாக இருந்து வேகமாக வந்த டிப்பர் மோதியதனால் நால்வர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தர்கள் - உதயகுமார் குயிலன் (வயது 23) , சபாரத்தினம் தூயவன் (வயது 25), கணேஸ் (வயது 23), கபிசன் (வயது 8) ஆகியோரோவார்.

இந்நிலையில், படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மோதிய டிப்பர் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது காலபோக நெற்செய்கை கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. நெல் உலர விடும் தளங்கள் மிகக் குறைவாக காணப்படுவதன் காரணமாக பெருமளவு விவசாயிகள் வீதியிலேயே நெல்லை உலர விடுகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இது விடயத்தில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு கமக்கார அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

வீதியில் நெல் உலர விட்டவர்களை அடித்துத் தள்ளிய டிப்பர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More