
posted 23rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்
வீதியால் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து நேற்று (22) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவர், மூளாய் வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமசாமி சிவலிங்கம் (56 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் உரும்பிராயில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளுக்கு காற்று நிரப்புவதற்காக உரும்பிராய், வேம்பன் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)