
posted 12th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா
கல்முனை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா தொடர் நிகழ்வு நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அ. நிருத்தனின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்திய அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி விஜயசாந்தி நந்தபாலா
தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் இந்து சமய பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் ம. லக்குணம், தொழில் வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் எஸ். சிவசுந்தரமூர்த்தி மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி நா. சிறீ பிரியா, சைவப் புலவர் ஜோ. கஜேந்திரா, வளவாளர் நா. சனாதனன், சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்களான கு. கிலஷன், கோ. திருநாகரன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலைகளுக்கான சுவாமியின் உருவப்படங்களை சமயப்பற்றாளர் எஸ். மகேந்திரன், சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்துக்கு வழங்கி வைத்தார். இதனை பாடசாலைகளுக்கு மன்ற உறுப்பினர்கள் திணைக்களத்துடன் இணைந்து வழங்கினர். இந்த நிகழ்வின் ஏற்பாடுகளை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மேற்கொண்டார். விழாத் தொடரின் நான்காவது பாடசாலை நிகழ்வு இதுவாகும்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)