
posted 29th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வனத்துறை காரியாலய அதிகாரிகள் மீது தாக்குதல் சந்தேகநபர் கைது
பூநகரி வனத்துறை காரியாலய அதிகாரிகள் இருவரை அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மரக்கட்டையால் தாக்கியதால் காயமடைந்த இருவர் பூநகரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூநகரி பிரதேசத்தில் காடுகளை வெட்டியமை தொடர்பில் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஒருவர் மது அருந்திவிட்டு வனவள காரியாலயத்தின் ஜன்னல்களை உடைத்து அரச உடைமைகளுக்கு சேதம் விளைவித்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)