
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கு சகல மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை நிறுவுங்கள் - வடக்கு மாகாண ஆளுநர்
வடக்கின் அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை நிறுவுமாறு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (08) வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாகாண சுகாதாரத் துறையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பொறிமுறை மாற்றம் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை நிறுவுமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவுக்கான ஆளணியை நியமிக்குமாறும் உரிய பயிற்சிகளை வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார். அத்துடன், மருத்துவமனைகளை ஒருங்கிணைப்பதற்கான தரவு பொறிமுறை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார்.
சுகாதாரத்துறைக்கு தேவையான ஆளணி, வளப்பற்றாக்குறை, தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்பிக்குமாறும் மாகாண சுகாதார பணிப்பாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)