வசமாக மாட்டிய கையடக்கத் தொலைபேசிக் கள்வன்

யாழ். போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக அலைபேசிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து பெறுமதி வாய்ந்த 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் சாவற்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். போதனா மருத்துவமனையில் நீண்ட நாள்களாக ஊழியர்கள், நோயாளிகளின் அலைபேசிகள் திருட்டுப்போயிருந்தன.
கதைத்துவிட்டுத் தருவதாக தெரிவித்துவிட்டு அபகரித்துச் செல்வது, சார்ஜ் போடும்போது மற்றும் நோயாளிகள் மலசல கூடங்களுக்கு செல்லும் போது என அலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றன. அவை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வசமாக மாட்டிய கையடக்கத் தொலைபேசிக் கள்வன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More