யாழ்.மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணன் பிரான்ஸ் குழு விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்.மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், யாழ். மாரநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர்.

மணிவண்ணன் குழுவினரை பிரான்ஸ் சர்வதேச விமான நிலையமான பாரிஸ் சார்ள்ஸ் டி கோலில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிரான்ஸ் நாட்டு மாநகர சபைகளின் முதல்வர்கள், பிரான்ஸ் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் அழைப்பை ஏற்று இவர்கள் அங்கு சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் மாநகர முதல்வர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடனான சந்திப்புக்களும் புலம்பெயர் தமிழர்களுடனான மக்கள் சந்திப்புக்களும் இன்று முதல் நடைபெறும் என கூறப்பட்டது.

யாழ்.மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணன் பிரான்ஸ் குழு விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY