
posted 18th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உறவுகளின் துயர் பகிர்வு
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்தனர்.
இதன்போது, யாழ். போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் சுகாதார அமைச்சரால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலை விடுதிகள், சத்திர சிகிச்சை பிரிவுகளையும் போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் அமைச்சர் குழுவினர் பார்வையிட்டனர்.
அத்தோடு, குருதி மாற்றுச் சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் சுகாதார அமைச்சர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கியதுடன் ஞாபகார்த்தமாக மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சின் செயலாளர் மஹிபால மற்றும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் அதிகாரிகள், பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)