
posted 13th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மு. கா. இளைஞர்களுடன் ஹக்கீம் எம். பி. சந்திப்பு
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களுடன் அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வரும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான சிராஸ் மீரா சாஹிப் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)