
posted 24th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பான பெயர்ப் பட்டியலை வெளியிடாதமை ஏன்?
முஸ்லிம் களின் ஜனாஸா எரிப்பு தொடர்பான பட்டியலை தற்போதை சுகாதார அமைச்சரிடமும், முன்னாள் அமைச்சரிடமும் தான் கோரிய போதும் அந்த பட்டியலில் இல்லை என மறுத்ததன் காரணம் என்ன என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (23) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
தகனக்கிரியை பற்றி அமைச்சரவை மன்னிப்பு கோர தீர்மானித்துள்ளது. மேலதிகமாக இதன் காரணமாக நாங்கள் பல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். அதைப்பற்றி கதைத்திருக்கிறேன். சுகாதார அமைச்சர் இங்கே இருக்கின்றார். இந்த சபையில் முன்னாள் அமைச்சரிடமும் இது பற்றி கேட்டேன். இது தொடர்பான வினாவினை சமர்ப்பித்திருந்தேன்.
அதாவது, தகனக் கிரியைக்குரிய ஆட்களின் பெயர்ப் பட்டியலை கோரியிருந்தேன். இருந்தபோதிலும் அவர்கள் அதற்குரிய பெயர் பட்டியல், இல்லை என்று கூறியிருந்தார்கள். இது உண்மையிலேயே விடயங்களை உண்மையை மறைப்பதற்கான முயற்ச்சியாகும். எத்தனை ஆட்களை தகன கிரியைக்கு உட்படுத்தினீர்கள்? அவர்களின் சொந்தக்காரர்கள் யார்? என்பது பற்றிய விளக்கம் தரவேண்டும்.எல்லாவற்றையும் செய்த பின்னர் நீங்கள் மன்னிப்பு கோருகிறீர்கள். இது தொடர்பான பதிலை நான் உங்களிடம் எதிர்பார்க்கின்றேன் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)