முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இனவிடுதலை வேண்டி வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி 16.05.2022 அன்று மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகி, மட்டக்களப்பு நகர், ஊறணி, செங்கலடி, வந்தாறுமூலை, சித்தாண்டி, வாழைச்சேனை, கதிரவெளி, வாகரையூடாக திருகோணமலை சிவன் கோவில் வளாகத்தை இன்று வந்தடையவுள்ளது.

இப்பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், ஞா. ஸ்ரீநேசன், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள், ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதப் பெரியார்கள், பொது மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் காலை 9.00 மணிக்கு சுடர் ஏற்றி, அகவணக்கம் மற்றும் நினைவுச் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House